news

News November 6, 2024

இஸ்ரேல் ராணுவ அமைச்சர் டிஸ்மிஸ்

image

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் அந்நாட்டு PM நெதன்யாகு டிஸ்மிஸ் செய்துள்ளார். ராணுவ விவகாரங்களை கையாள்வதில் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த இஸ்ரேல் காட்ஸ், ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். போர் மற்றும் இஸ்ரேல் நீதித்துறை அமைப்பை மாற்றும் திட்டங்களில் நெதன்யாகு- கேலண்ட் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது.

News November 6, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவ. 6 (ஐப்பசி 20) ▶புதன் ▶நல்ல நேரம்: 09:45 AM – 10:30 AM, 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶ எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பஞ்சமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு ▶ பரிகாரம்: பால் ▶ நட்சத்திரம்: மூலம் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி.

News November 6, 2024

இதுதான் தமிழ் ராக்கர்ஸ் டெக்னிக்..!

image

கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகி ஸ்டீபன் ராஜ், தங்களது உத்திகளை வாக்குமூலம் அளித்துள்ளார். புதுப்படம் ரிலீசானதும், முதல் காட்சிக்கு 5 டிக்கெட்கள் முன்பதிவு செய்து, தியேட்டரின் நடுப்பகுதி சீட்களில் அமர்வார்களாம். துணிக்கு அடியில் கேமரா வைத்து ரெக்கார்ட் செய்வார்களாம். ஒரு ரெக்கார்டிங்கிற்கு ₹5,000 சம்பளம். இதற்காக கேரளா, கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களுக்கு கூட செல்வார்களாம்.

News November 6, 2024

IND வீரர்களுக்கு கில்கிறிஸ்ட் அறிவுரை

image

NZ உடனான தோல்வி இந்திய வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இந்த தோல்வியின் தாக்கம் வீரர்களின் தோள்களில் ஏறி சவாரி செய்யும் எனவும், அவர்கள் தங்களை தாங்களே கடினமான கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இதிலிருந்து வீரர்கள் மீள்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

image

அமெரிக்க அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்கள் வன்முறையாளர்கள் அல்ல எனவும், நாட்டில் எந்த வன்முறையும் நடக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பேரணியில் பேசிய டிரம்ப், தான் தோற்றால், நாடு ரத்தக்களரியாக மாறும் என தெரிவித்து இருந்தார்.

News November 6, 2024

இந்தியாவின் விண்வெளி பயணம் தள்ளிப்போகிறது

image

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் 2025-க்கு பதிலாக, 2026-க்கு ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இந்தியாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காக சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 6, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 6, 2024

₹1.08 லட்சம் சம்பளம்… மத்திய அரசில் வேலை!

image

மத்திய அரசின் POWERGRID நிறுவனத்தில் காலியாகவுள்ள 70 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 6) கடைசி நாளாகும். பயிற்சி மேற்பார்வையாளராக பணியாற்ற விரும்புவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹21,500 – ₹1,08,000. கல்வித்தகுதி: Diploma With 70%. ஓராண்டுக்கு பின் Sub Jr. Engineer பதவி உயர்வளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News November 6, 2024

அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு? பாஜக

image

கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழக அரசு அதிகாரிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தெரியவில்லை என்பதால் பாடப்படவில்லையா? அல்லது திராவிட சிந்தனையில் இருப்பதால் திமுக வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதா? என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்கிறது.

error: Content is protected !!