news

News November 6, 2024

ஒரே நாளில் 2 பெருந்தலைகள் ராஜினாமா..!

image

ஒரே நாளில் பெரு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருந்த 2 இந்தியர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Xiomi நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் முரளி கிருஷ்ணன் மற்றும் Paytm நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி ஸ்ரேயாஸ் சீனிவாசன் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். பிசினஸ் படிப்பில் டாக்டரேட் பட்டம் பெறுவதற்காக ராஜினாமா செய்துள்ளதாக முரளி தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

image

கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.30க்கு புறப்படும் ரயில், திருச்சி- மதுரை- விருதுநகர் வழியாக நாளை காலை 8.30க்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக, அதேநாள் இரவு 10.15க்கு திருச்செந்தூரில் புறப்பட்டு, மேற்கூறிய வழித்தடத்தில் பயணித்து, 8ஆம் தேதி காலை 10.30க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

News November 6, 2024

LCU-வில் இன்னும் எத்தனை படங்கள் வரும்?

image

கைதி, விக்ரம், லியோ ஆகிய 3 படங்கள் LCU-வின் அடித்தளம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 4ஆவது, 5ஆவது படங்கள் அதன் அஸ்திவாரமாக இருக்கும் எனவும், 6ஆவது படம் க்ளைமாக்ஸுக்கு முந்தைய படம் எனவும் கூறியுள்ளார். மேலும், 7 அல்லது 8ஆவது படம் க்ளைமாக்ஸ் என தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் பின்பற்றப்படும் Cinematic Universe எனும் திரைக்கதை பாணி, லோகேஷ் கனகராஜால் தமிழுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

News November 6, 2024

கலீல் ஜிப்ரானின் பொன்மொழிகள்

image

*உங்கள் துக்கம் உங்களை எவ்வளவு ஆழமாகச் செதுக்கியிருக்கிறதோ அவ்வளவு ஆழமாகதான் உங்கள் மகிழ்ச்சியும் உங்களை நிரப்ப முடியும். *இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உங்களிலும், உங்களோடும், உங்களுக்காகவும் உள்ளன. *பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது. *ஒரு மனிதனின் உண்மையான செல்வம் இந்த உலகில் அவன் செய்யும் நன்மைகளாகும். *நேற்று என்பது இன்றைய நினைவு, நாளை என்பது இன்றைய கனவு.

News November 6, 2024

அரசியலில் இருந்து சரத் பவார் ஓய்வு?

image

இனிவரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என சரத் பவார் அறிவித்துள்ளார். தான் ஆட்சி அதிகாரத்தில் இல்லை எனவும், தனது மாநிலங்களவை பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் எஞ்சியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எந்த இடத்திலாவது தான் நிறுத்தித்தானே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதியின் இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News November 6, 2024

இனி சிம் கார்டு இல்லாமலேயே பேசலாம்..!

image

Direct to Device – D2D என்ற புதிய தொழில்நுட்ப சோதனையை BSNL வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் ஆடியோ, வீடியோ கால் பேச சிம்கார்டுகள் தேவைப்படாது. D2D என்பது ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோளுடன் இணைக்கும் தொழில்நுட்பமாகும். காடுகளில் சிக்கிக் கொண்டாலோ, இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டாலோ இந்த புதிய டெக்னாலஜி பேருதவியாக இருக்கும்.

News November 6, 2024

பிரதமர் பயப்படுகிறார்: ராகுல்

image

இந்தியாவில் உள்ள சாதி பாகுபாடு உலகிலேயே மிக மோசமானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை 50%-க்கும் மேல் அதிகரிக்க முடியாமல் செயற்கையான தடையை உருவாக்கி வைத்துள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் அந்த தடையை தகர்ப்போம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். மேலும் நிறுவனங்கள், நீதித்துறை, ஊடகங்களில் எத்தனை BC, OBC, SC உள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள பிரதமர் பயப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 6, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 92 ▶குறள் : அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். ▶ விளக்க உரை: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

News November 6, 2024

விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

image

Wikipedia-வில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகவல்கள் ஒரு சார்பாக இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வருவதாகவும், இதன் பக்கங்களை உருவாக்குவது, திருத்தம் செய்வது போன்ற பணியில் ஒரு சிறிய ஆசிரியர் குழு இருப்பதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விக்கிப்பீடியாவை இடைத் தொடர்பாளராக கருதாமல், ஒரு வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

News November 6, 2024

என் தந்தையும் ‘அமரன்’ தான்: SK

image

‘அமரன்’ படத்தில் நடிக்க முக்கிய காரணம் தனது தந்தைதான் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவர் ஒரு SP, நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் போலவே தன்னுடைய வாழ்க்கையிலும் நடந்ததாக SK கூறியுள்ளார். மேலும், 21 ஆண்டுகளாக தந்தையின் நினைவில் மட்டுமே வாழ்ந்து வந்த தனக்கு, இந்த படத்தின் மூலம் அவரை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்ததாக உருக்கமாக பேசியுள்ளார்.

error: Content is protected !!