news

News November 6, 2024

ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு ஷாக் நியூஸ்

image

தென்கொரியாவின் தனியுரிமை கண்காணிப்பு ஆணையம், மெட்டா நிறுவனத்திற்கு ₹127 கோடி அபராதம் விதித்துள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த 9.80 லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்களின் சென்சிடிவ் தகவல்களை, 4000 விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்தது தெரியவந்துள்ளது. 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் இது அம்பலமாகியுள்ளது. இது ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 6, 2024

விண்வெளியில் இருந்து ஓட்டு போட்ட வீரர்கள்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில், விண்வெளியில் இருக்கும் வீரர்கள் அங்கிருந்தபடியே வாக்களித்துள்ளனர். சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர், டான் பெட்டிட் மற்றும் நிக் ஹாக் ஆகியோர் வாக்கு செலுத்தியுள்ளனர். மேலும், அமெரிக்க கொடி நிறத்தில், அமெரிக்கர் என்பதில் பெருமை கொள்கிறோம் என்று எழுதப்பட்ட சாக்ஸ் அணிந்த புகைப்படத்தையும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

News November 6, 2024

காலையில் எழுந்ததும் இந்த பிரச்னை இருக்கா?

image

காலையில் எழுந்ததும் நமக்கு ஏற்படும் சில அசௌகரியங்களை வைத்து சிறுநீரக பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது, எழுந்ததும் உடல் சோர்வாக இருக்கும். காலையில் கழிக்கும் முதல் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் நுரைத்து இருந்தாலோ, அடி வயிறு பிடிப்பு, அதிக தாகம் எடுத்தல், சருமத்தில் தொடர் அரிப்பு இருந்தாலோ டாக்டரை அணுகுவது நல்லது.

News November 6, 2024

ரேஸில் முந்துகிறார் டிரம்ப்

image

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் 81 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 13 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின் தங்கியுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 538 இடங்களில், 270 எலக்டோரல் வாக்குகளைப் பெறுபவரே அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

News November 6, 2024

பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் துளசி டீ!

image

சளி, இருமல், தலைவலி, சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் காலையில் துளசி டீ குடிக்கலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு கப் தண்ணீரில் 5-6 துளசி இலைகளை 2-3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் துளசி டீ ரெடி. வேண்டுமானால், இதோடு கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். ஜீரண கோளாறு, வாயு தொல்லை, சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள் துளசி டீயை தினந்தோறும் பருகலாம் எனக் கூறுகின்றனர்.

News November 6, 2024

கோலி குடிக்கும் தண்ணீரின் விலை இவ்வளவா..!

image

கோலியும், அனுஷ்காவும் 1 லிட்டர் ₹4,000 மதிப்புள்ள தண்ணீரை அருந்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் ஏரியில் இருந்து இந்த தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஏவியன் நேச்சுரல் ஸ்பிரிங் வாட்டர் என்ற இந்த தண்ணீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, தோல் பாதுகாக்கப்படும். இந்த நீர் பிளாக் வாட்டர் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், பல பாலிவுட் பிரபலங்களும் இந்த நீரைத்தான் குடிக்கிறார்களாம்.

News November 6, 2024

எங்கள் கட்சிக்குத்தான் அந்த உரிமை உண்டு: SP

image

பெருந்தலைவர் காமராஜரை சொந்தம் கொண்டாடுகிற உரிமை காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு மட்டும்தான் இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காமராஜர் தேசத்தின் சொத்து, யார் வேண்டுமானாலும் அவரை கொண்டாடலாம் எனவும் கூறியுள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி பேசியது அவரது சொந்த கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

Apply Now: இன்றே கடைசி நாள்

image

NLC நிறுவனத்தில் காலியாகவுள்ள 1,013 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். Trade Apprentice, Technician Apprentice, Degree Apprentice ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ITI, Diploma, D.Pharm & Any UG Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். https://www.nlcindia.in/ என்ற இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ₹8,766 முதல் ₹12,524 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

News November 6, 2024

திராவிட மாடலின் நோக்கம் இதுதான்: உதயநிதி

image

திறமைக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 680 விளையாட்டு வீரர்களுக்கு ₹12 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்தாண்டு நடந்த முதலமைச்சர் கோப்பை போட்டியில் 11 லட்சம் வீரர்கள் பங்கேற்றதாகவும், தமிழகத்தில் தற்போது வீராங்கணைகள் அதிகமாக உருவாகி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

நவம்பர் 6: வரலாற்றில் இன்று

image

*1759 – பூலித்தேவரின் நெற்கட்டான் செவல் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. *1860 – ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். *1913 – மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!