India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அக்டோபரில் அமைப்பு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு 10% அதிகரித்துள்ளதாக ‘நவுக்ரி’ நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களை பொறுத்தமட்டில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு 24% உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துறைகளில் 39%, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 18%, மருந்து துறையில் 12%, கன்ஸ்யூமர் துறையில் 8% வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா (72) உடல்நலக் குறைவால் காலமானார். நாட்டுப்புற பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்த இவருக்கு, 2018ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. புற்றுநோயால் அவதி அடைந்து வந்த இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு PM மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜய் பக்கம் இளைஞர்கள் செல்வதை தடுக்கவும், அவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும் திமுக பல்வேறு வியூகங்களை வகுக்கிறது. NOV.27 உதயநிதி பிறந்தநாளை தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு செய்துள்ளது. அத்துடன், திமுக பூத் கமிட்டிகளில் இதுவரை இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. 2026 தேர்தலில் அனைத்து பூத் கமிட்டிகளிலும், இளைஞர்கள் இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
☛ சத்துக்கள் இல்லாத உணவு உண்பது ☛ மன உளைச்சல், மரபணு காரணங்கள் ☛ கெமிக்கல்கள் அதிகம் உள்ள ஜெல், ஷாம்பு, கலரிங், ஹேர் Wax பயன்பாடு ★ முடிய உதிர்வதை தடுக்க ஊட்டச்சத்து அவசியம். ★ மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்யுங்கள். ★ இயற்கை எண்ணெய்களைக் கொண்டு முடியை மசாஜ் செய்யுங்கள். ★ சுத்தமான தண்ணீரை பருகுங்கள். ★ தொடர்ந்து முடி உதிர்ந்தால், மருத்துவரை அணுங்கள்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. EPS தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநிலச் செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர். இதில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றொருவர் வீட்டில் நடப்பதை எட்டி பார்க்க இருக்கும் ஆர்வம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலீடு. வரவேற்பை போலவே, எதிர்ப்புகளும் அதிகம். தூத்துக்குடி கோட்டாச்சியர் அலுவலம் முன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பிக்பாஸை தடை செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். கலாசாரத்திற்கு எதிராக இருப்பதால் இந்தியா முழுவதும் தடை வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். நீங்க என்ன நினைக்கிறீங்க..?
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் IPL மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார். அடிப்படை விலையான ரூ.1.25 கோடிக்கு தனது பெயரை அவர் பதிவு செய்திருக்கிறார். 42 வயதான ஆண்டர்சன் 2011 மற்றும் 2012 IPL ஏலத்தில் இருந்த போதும், அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு IPL-க்குள் நுழைய இருக்கிறார் ஆண்டர்சன். எந்த அணி அவரை வாங்க வாய்ப்புள்ளது? கமெண்ட்ல சொல்லுங்க
அறுபடை வீடுகளில் பழமுதிர்ச்சோலை இன்பமான வீடு என்கிறார்கள் ஆன்மிகவாதிகள். இரு தேவியாரோடு ஏகாந்தமாக முருகப்பெருமான் வீற்றிருக்கும் சுகமான ஆறாவது படை வீடு இதுவாகும். ஒளவைக்கு நெல்லிக்கனியும், நக்கீரனுக்கு வீடு பேறும் அளித்த இந்த இடத்தில் வழிபாடு நடத்தினால், மனப் பிரச்னை, பணப் பிரச்னை இரண்டும் தீரும் என்பது ஐதீகம். வந்த வினை தீரவும், வரவிருக்கும் சோதனைகளைத் தடுக்கவும் கந்தனை சரண் அடையுங்கள்.
அமைச்சர்களின் செயல்பாடுகளை அறிய, ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து CM ஸ்டாலின் துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், துறைகளின் செயலர்களுக்கு பதிலாக அமைச்சர்களே அவற்றின் நிலை குறித்து விளக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், சரிவர செயல்படாதவர்களை மாற்றவே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
காலையில் எழுந்தவுடன் 10-15 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். அது மனதை அமைதிப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அத்துடன் தியானத்தின் மூலம் மனவலிமை அதிகரித்து, நேர்மறையான சிந்தனைகள் உண்டாகும். காலையில், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது வயிற்றின் செரிமானத்தை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரையும், நாள் முழுவதும் புத்துணர்ச்சி நீடிக்கும்.
Sorry, no posts matched your criteria.