news

News November 6, 2024

தங்க விலையை முடிவு செய்யும் ஜாம்பவான்கள்

image

இந்தியாவில் தங்கத்தின் விலையை யார் முடிவு செய்கிறார்கள் எனத் தெரிந்து கொள்வோம். IBJA எனப்படும் இந்திய தங்க நகைகள் வியாபாரிகள் கூட்டமைப்பே விலையை முடிவு செய்கிறது. இதில் நாட்டின் மிகப்பெரிய தங்க நகை வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களே சர்வதேச நிலவரம், இந்தியாவில் தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு விலையை முடிவு செய்கிறார்கள். அதன்படியே இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

News November 6, 2024

Jio Bharat 5G: ஸ்மார்ட்போன் உலகின் புரட்சி..

image

ஸ்மார்ட்போன் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளிவரவுள்ளது Jio Bharat 5G. 5.3-inch Punch hole டிஸ்ப்ளே, Fingerprint sensor, 7100mAh பேட்டரி, 13MP Front கேமரா வசதிகள் உள்ளன. 6GB RAM + 64GB, 6GB RAM + 128GB storage, 8GB RAM + 128GB variants உள்ளன. அனைத்திலும் கவனம் ஈர்ப்பது ₹3,999 முதல் ₹5,999 வரை மட்டுமே இருக்கும் இதன் விலையாகும். ஆனால், வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை

News November 6, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் முன்னிலை

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே கடும் இழுபறி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பின்தங்கி இருந்த கமலா, தற்போது 209 வாக்குகள் பெற்று டிரம்பை நெருங்கி வருகிறார். அதேநேரம், டிரம்ப் 230 பிரதிநிதிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். நெவாடா, மினசோட்டா, மிச்சிகன் உள்ளிட்ட மாகாணங்களின் வாக்குகள் அதிபரை தீர்மானிக்கும் சூழல் நிலவுகிறது.

News November 6, 2024

ரயிலில் ஆன்லைன் தட்கல் முன்பதிவு நேரம் தெரியுமா?

image

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு தனித்தனி நேரம் ரயில்வேயால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2A, 3A, CC, EC, 3E ஆகிய குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்க விரும்புவோர், பயணிக்கும் தேதிக்கு முந்தைய நாள் காலை 10 மணி முதல் முன்பதிவு செய்ய வேண்டும். குளிர்சாதன வசதியில்லாத SL, FC, 2S பெட்டிகளுக்கு, பயணத் தேதிக்கு முந்தைய நாள் காலை 11 மணி முதல் முன்பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

News November 6, 2024

FLASH: தங்கம் விலை உயர்வு

image

ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து ஒரு சவரன் ₹58,920க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ஒரு கிராம் ₹7,365க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹105க்கும், ஒரு கிலோ ₹1,05,000க்கும் விற்கப்படுகிறது.

News November 6, 2024

வாழவிடுங்கள்..இன்ஸ்டாவில் சமந்தா வேண்டுகோள்

image

உடல் எடை மெலிந்து காணப்படும் சமந்தாவிடம், இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்கள் அது பற்றி கமெண்ட் செய்தார்கள். அதற்கு பதிலளித்த சமந்தா, சமீபமாக உடல் எடையை பற்றி பல்வேறு கருத்துக்களை பார்க்கிறேன். Strict anti-inflammatory diet-ல் உள்ளேன். இதுவே எனது உடல் எடையை கூட்டாமல், உடல் நலனுக்கு ஏற்றவாறு எடையை சரியான அளவில் வைத்துள்ளது. நாம் 2024-க்கு வந்துவிட்டோம் Live & Let live எனக் கூறினார்.

News November 6, 2024

நெல்லிக்காய் தொக்கு செய்யலாம் வாங்க!

image

நெல்லிக்காயை (20) தண்ணீரில் போட்டு கொதிக்க விடுங்கள். வெந்ததும், கொட்டையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் 4 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து, அதோடு 2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள், 1/4 தேக்கரண்டி வெந்தயம், 5 தேக்கரண்டி மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்க்கவும். இதில், நெல்லிக்காய் விழுதை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கினால் நெல்லிக்காய் தொக்கு ரெடி.

News November 6, 2024

அங்கீகாரம் இல்லாமல் பான் விவரங்களை பயன்படுத்த தடை!

image

நிறுவனங்கள் அங்கீகாரம் இல்லாமல் பான் கார்டு விவரங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. தனிநபர்களின் விவரங்களை பெறும் சில நிறுவனங்கள், அவற்றை வணிக நோக்கத்திற்காக பகிர்கின்றன. அந்த வகையில், பான் கார்டு மூலம் சிபில் ஸ்கோரை அறிந்து, வாடிக்கையாளர்களை அணுகுகின்றன. இது தனித்தகவல் விதி மீறலில் வராவிட்டாலும், மின்னணு தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் முன்னோட்டமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

News November 6, 2024

ரயில்களில் ஏன் சீட் பெல்ட் இல்லை..?

image

ரயில்களில் ஏன் இல்லை சீட் பெல்ட் இல்லை என்ற சந்தேகம் உண்டா? காரணமில்லாமல் காரியங்கள் இல்லை. ரயில் பயணத்தை பலரும் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் சவுகரியமே. சீட் பெல்ட் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவை வழங்கப்படுவதில்லை. ஆய்வுகளின் படி, மிகவும் வேகமாக செல்லும் ரயில்கள், விபத்தில் சிக்கும் போது, இருக்கைகளே தூக்கி எறியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் சீட் பெல்ட்டுகள் இருப்பதில்லை.

News November 6, 2024

‘இன்டர்ன்ஷிப்’ திட்டத்தில் சேர விருப்பமா?

image

பிரதமர் ‘இன்டர்ன்ஷிப்’ திட்டத்தில் சேர pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வழங்கும் திட்டம் இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு ஒருமுறை மானியமாக ₹6,000 மற்றும் மாத உதவித்தொகை ₹5,000 வழங்கப்படுகிறது. பயிற்சி வாய்ப்புக்கான இறுதிப்பட்டியல் டிச.2ஆம் தேதி வெளியாகிறது.

error: Content is protected !!