India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவில் ‘புஷ்பா 2’ படத்திற்கான 15,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையானதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் 15,000 டிக்கெட் முன்பதிவான முதல் இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் இப்படம் டிச.5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் சிறப்பு காட்சிக்கான புக்கிங் நேற்று தொடங்கியது.
இலகுரக ஓட்டுநர் உரிமம் (LMV) வைத்திருப்பவர்கள், 7500 கிலோ எடைக்குள் இருக்கும் வாகனங்கள் ஓட்டத் தடையில்லை என்று SC தீர்ப்பளித்துள்ளது. மேற்சொன்ன வாகனங்களை ஓட்டிய LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள், அதிக விபத்துகள் ஏற்படுத்தியதாக ஆதாரங்கள் இல்லை என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. சிறிய ரக சரக்கு, போக்குவரத்து வாகனங்கள் இயக்குபவர்களுக்கு இத்தீர்ப்பு நிம்மதியளிக்கும்.
தேசிய காப்பீடு நிறுவனம் (NICL) 500 காலி இடங்களுக்கு விண்ணப்பம் காேரியிருந்தது. உதவியாளர் நிலையிலான அந்தப் பதவிகளில், தமிழகத்தில் 35 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பப்பதிவு கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 11ஆம் தேதியே கடைசி நாளாகும். முதல்கட்ட ஆன்லைன் தேர்வு வரும் 30ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்வு டிச.28ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. SHARE IT.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தின் சிறப்பு வீடியோ நாளை வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தாக வீடியோ வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் நடிக்கும் புதிய படங்களின் அறிவிப்பும் நாளை வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் 270 பேரின் வாக்குகள் தேவை. இதுவரையிலான வாக்கு நிலவரப்படி, டிரம்புக்கு 247 வாக்குகள் கிடைத்துள்ளன. கமலா ஹாரிசுக்கு 210 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்கு எண்ணிக்கையில் 2 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும், ஆரம்பம் முதல் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அதிபராக தேர்வு செய்யப்பட அவருக்கு இன்னும் 23 வாக்குகள் மட்டுமே தேவையாகும்.
SBI வாடிக்கையாளர்களை குறிவைத்து நடக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில், ரிவார்ட் பாயிண்ட்ஸ் பெயரில் புதிய மோசடி நடக்கிறது. SBI ரிவார்ட் பாயிண்ட்ஸை பயன்படுத்த இன்றே கடைசி தேதி என மோசடியாளர்கள் SMS, வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்புகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற தகவல்களை SBI அனுப்புவதில்லை எனவும், அதுபோல் வரும் link-ஐ கிளிக் செய்யாதீர் என்றும் SBI கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது ஏன்? என திமுக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், 3,000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகக் கண்டித்துள்ளார். மேலும், தற்காலிக மருத்துவர், தற்காலிக செவிலியர் என அரசு ஊழியர்களைத் தற்காலிகமாக்குவதுதான் திராவிட மாடலா? எனவும் விமர்சித்துள்ளார்.
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கஸ்தூரிக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவெடுத்துள்ளது. பிராமணர்களுக்குப் பாதுகாப்பு கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய கஸ்தூரி, தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசியது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரை நேரில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஹுண்டாய் இந்தியாவின் ஐபிஓ சாதனையைப் முறியடிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்தாண்டு ₹8,40,960 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ வெளியிட முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இது நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ என்ற சாதனையை படைக்கவுள்ளது. ஜியோ ஐபிஓ-வை தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தையும் பங்குச்சந்தையில் பட்டியலிட ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
NZ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதால் IND அணி பரிதாபமான நிலையில் உள்ளது. NZ தொடருக்கு முன் முதல் இடத்தில் இருந்த IND அணி தற்போது WTC இறுதிப்போட்டிக்கு செல்ல மற்ற அணிகளின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் நடைபெறும் BGT தொடரை 4-0, 5-0 என வெல்ல வேண்டும். தோற்றால் ENG-NZ, AUS-SL, PAK-SA அணிகளின் டெஸ்ட் தொடர் IND அணிக்கு சாதமாக முடிய வேண்டும்.
Sorry, no posts matched your criteria.