news

News November 6, 2024

RAIN ALERT: 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வருகிற 10ஆம் தேதி வரை வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News November 6, 2024

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே: டிரம்ப்

image

அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன் என ட்ரம்ப் சூளுரைத்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி கூறிய அவர், வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக தனது மனைவிக்கு உணர்ச்சிப் பொங்க நன்றி தெரிவித்தார். அதிபர் தேர்தல் மட்டுமல்ல செனட், மக்கள் சபையிலும் முன்னிலை கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்றும் முழங்கினார்.

News November 6, 2024

அல்லு அர்ஜுனை விடுவித்த நீதிமன்றம்

image

அல்லு அர்ஜுனின் நடிப்பில் புஷ்பா 2 படம் வெளிவரவுள்ள நிலையில், வழக்கு ஒன்று அவருக்கு பெரும் நெருக்கடி கொடுத்தது. ஆந்திர சட்டமன்ற தேர்தலின் போது, அல்லு அர்ஜுன் YSR வேட்பாளர் ஷில்பா ரவி சந்திர கிஷோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நந்தியாலாவில் ரசிகர்களை சந்தித்தார். இது தேர்தல் விதிமீறல் என வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் இருந்து ஆந்திர உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனை விடுவித்துள்ளது.

News November 6, 2024

விராட் கோலி மீது மாறா அன்புடன் இருக்கும் ஆசிரியர்!

image

எந்த துறையாக இருந்தாலும் நம் வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஆசிரியரும் ஒருவராக இருப்பார்கள். நம் வளர்ச்சியை பார்த்து பெற்றோர்கள் பெருமைப்படுவதை போல் அவர்களும் பெருமைப்படுவார்கள். அதுபோல் விராட் கோலியின் சிறு வயது கோச், கோலியின் பிறந்தநாளை அவரது கிரிக்கெட் அகாடமி மாணவர்களுடன் கொண்டாடினார். இதை விராட் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். உங்களுக்கு இந்த மாதிரி டீச்சர் இருக்காங்களா?

News November 6, 2024

இனி கொங்கு மண்டல ராஜா நான்தான்.. இபிஎஸ் சவால்

image

2026 தேர்தலில் அனைத்து கொங்கு மண்டலத் தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வைப்பதாகவும், இனி கொங்கு மண்டல ராஜா நான்தான் என்றும் இபிஎஸ் சூளுரைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது செந்தில் பாலாஜி, அண்ணாமலை தனக்கு எதிராக இருப்பர், எனினும் அதிமுகவை வெற்றி பெறச் செய்வேன் என அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

News November 6, 2024

வரலாற்று உச்சத்தில் பிட்காயின் மதிப்பு

image

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு தாக்கத்தால் பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி, 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதிபராகிறார் டிரம்ப். இந்த முடிவு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிட்காயினுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது $75,000ஆக அதிகரித்துள்ளது. நீங்கள் பிட்காயினில் முதலீடு செய்திருக்கிறீர்களா?

News November 6, 2024

புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது: டிரம்ப்

image

47வது அதிபராக தன்னை தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இந்த முறை தன்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போவதாக கூறிய அவர், இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன் எனவும் பிரச்னைகளை தீர்ப்பேன் என்றும் உறுதியளித்தார்.

News November 6, 2024

எம்பாப்பே இருந்தும் மண்ணை கவ்விய Real Madrid..

image

UEFA சாம்பியன்ஸ் தொடரின் லீக் போட்டியில் லூகா மோட்ரிக் தலைமையிலான நட்சத்திர அணியான Real Madrid, AC Milan அணிக்கு எதிரான போட்டியில் 1-3 என்ற கணக்கில் மிகவும் மோசமாக தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நட்சத்திர ஆட்டக்காரர் எம்பாப்பே கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த தோல்வியுடன் Real Madrid அணி புள்ளிப்பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

News November 6, 2024

அதிமுக கூட்டணிக்கு துண்டு போடவில்லை: இ.கம்யூ

image

அதிமுக கூட்டணிக்கு துண்டு போடவில்லை என்று இ.கம்யூ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கூட்டணி வைக்கும் திட்டத்துடனேயே அதிமுகவை விமர்சிப்பதில்லையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தேர்தலில் விமர்சித்தோம். மற்ற நேரத்தில் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று பதில் கேள்வியெழுப்பினார். அதிமுக கூட்டணியில் இ.கம்யூ சேருமா? உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.

News November 6, 2024

படிக்கவே ஆர்வமில்லாத Gen-Z கிட்ஸ்…அதிர்ச்சி தகவல்

image

Android மோகத்தில் Gen-Z யுகத்தினர் மூழ்கி விட்ட நிலையில், புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே குறைந்துள்ளது. National Literacy Trust (NLT) அமைப்பு நடத்திய ஆய்வில் கிடைத்த 76,131 பதில்களின் அடிப்படையில், 5 முதல் 18 வயதுடையவர்களில் 34.6% பேர் மட்டுமே புத்தகம் படிக்க விரும்புகிறார்கள். இந்த ஆய்வு தகவல்கள் வயது, பாலினம், சமூக-பொருளாதார பின்னணி ஆகியவற்றின் அடிப்படையிலேயே சேகரிக்கப்பட்டது.

error: Content is protected !!