India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதிய நேர குட்டித் தூக்கம் நல்லதா, கெட்டதா ? என தெரிந்து கொள்வோம். மதிய நேர குட்டி தூக்கத்தை ஆங்கிலத்தில் afternoon cat nap என்று சொல்கிறார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளில், மதிய நேரம் தூங்குவது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும், சோர்வை குறைத்து சுறுசுறுப்பாக்கும் எனத் தெரிய வந்துள்ளது. ஆதலால் மதிய நேர குட்டி தூக்கம் நல்லது என உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருப்பது, சர்வதேச சந்தையில் மட்டுமல்லாது, இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 800க்கும் மேல் உயர்ந்து 80,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி 255 புள்ளிகள் அதிகரித்து 24, 400 புள்ளிகளை கடந்துள்ளது.
RCB அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மேக்ஸ்வேல் பேசும் போது, அணி தரப்பில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, சுமார் 30 நிமிடங்கள் பேசினோம். அவர்களின் எதிர்பார்ப்பினால், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது RCB பயணம் முடிந்துவிட்டதாக கூறமாட்டேன், மீண்டும் அணிக்கு திரும்ப விரும்புகிறேன். அணியில் இருந்த நேரத்தை ரசித்தேன் என்றார். மேக்ஸ்வேல் RCB-2யில் இருப்பாரா, நீங்க சொல்லுங்க..?
டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் உஷா வான்ஸ் கணவரான ஜே.டி.வான்ஸ் துணை அதிபராக உள்ளார். அரசியலில் மீண்டும் வென்றது போலவே, பொருளாதார வலிமையிலும் அமெரிக்கா மீண்டும் வெற்றி பெறும் எனவும், அமெரிக்கர்களின் கனவுகள் ஒவ்வொன்றும் மெய்ப்படும் என்றும் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். அவரது வெற்றிக்காக உஷா வான்ஸின் சொந்த ஊரான ஆந்திராவின் கோதாவரியில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அதிபராகியுள்ள டொனால்ட் டிரம்ப் ஒரு ஆண்டுக்கு பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அமெரிக்க ஜனாதிபதி ஆண்டு சம்பளமாக $400,000 (ரூ. 3.36 கோடி) பெறுகிறார். மேலும், வரி விதிக்கப்படாமல் செலவுகளுக்காக $50,000 (ரூ. 42 லட்சம்), பயண செலவுகளுக்காக $100,000 (ரூ. 84 லட்சம்) மற்றும் பொழுதுபோக்கிற்காக $19,000 (ரூ. 16 லட்சம்) அளிக்கப்படுகிறது.
போலீசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் 24 மணி நேர கெடு விதித்துள்ளார். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார். 24 மணி நேரத்தில் இதை செய்யாவிட்டால், எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வரும் காலங்களில் வட்டி விகிதங்களைக் குறைக்க டிரம்ப் ஆதரவாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் எனவும், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்புக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வரலாற்று வெற்றி பெற்ற இத்தினத்தில் நண்பருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் இணைந்து இந்தியா, அமெரிக்கா மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தையும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை, அபிவிருத்தியையும் ஊக்குவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் போது, விதிமுறைகளை மீறி நிபந்தனைகள் வைத்தார். அவை அனைத்தும் ஏற்கப்பட்டது. தடாலடியாக அணியில் பல மாற்றங்களை ஏற்படுத்த, இந்தியா தொடர்ந்து சறுக்கி வருகிறது. இதனால், BCCI கம்பீர் மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம். BGT தொடரும் தோல்வியில் முடிந்தால், கம்பீர் மீது நடவடிக்கை எடுக்க BCCI காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக, பாஜகவை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி தொடர்பான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் மறைமுகமாக பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் முடிவு செய்யப்படலாம் எனவும், யார் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம் என்றும் அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.