news

News November 6, 2024

4 வருடம்..ஒரே குடியிருப்பில் 4 காதலி, மனைவியுடன்..

image

யாரு சாமி என ஆச்சரியப்பட வைக்கும் இவரின் கதை. சீனாவை சேர்ந்த ஒருவர், தான் ஏழை என்பதை மறைத்து திருமணம் செய்ததுடன், ஒரே நேரத்தில் 4 பெண்களுடனும் பழகியுள்ளார். ஆச்சரியம் என்னவெனில், 5 பெண்களையும் ஒரே அடுக்கு மாடி குடியிருப்பில் குடிவைத்துள்ளார். 4 வருடங்களாக தொடர்ந்த இந்த சித்து விளையாட்டு, அவரின் பணக்கார வேஷத்தால் போலீசிடம் சிக்கியதில் அம்பலமானது. இவரது சேட்டைகள் தெரிந்து, இணையமே அரண்டுபோயுள்ளது.

News November 6, 2024

மோடியின் நோக்கம் அதுதான்.. பிரியங்கா தாக்கு

image

ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது ஒன்றுதான் மோடியின் ஒரே நோக்கம் என்று சோனியா காந்தியின் மகளும், வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா சாடியுள்ளார். வயநாட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தனது சகோதரர் ராகுல் மக்களை நேசிப்பவர், மதிப்பவர் என்றும், ஆனால் மோடியோ, மக்களிடையே அச்சத்தை, அவநம்பிக்கையை, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்றும் விமர்சித்தார்.

News November 6, 2024

ரூட்டை மாற்றிய திமுக

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரம் காட்டி வரும் திமுக, ஜனவரியில் பொதுக்குழு கூட்டத்தை திருச்சி அல்லது மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் வருகையால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், தனது வியூகத்தை அக்கட்சி மாற்றியுள்ளது. தேர்தல் பொறுத்தவரை திமுகவுக்கு சென்டிமென்ட் நகரமாக திருச்சி இருக்கிறது.

News November 6, 2024

கொலை குற்றவாளியை பிடித்துக்கொடுத்த ஈ..

image

ஈ-யால் ஒரு கொலை குற்றவாளி சிக்கியுள்ளார். ம.பியின் ஜபல்பூர் மாவட்டத்தில் மனோஜ் தாக்கூர் (26) என்பவர் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, ​​தரம் தாக்கூர் (19) என்ற நபரை ஈக்கள் மொய்த்துள்ளது. அவரின் ஆடை மற்றும் மார்பில் ரத்தக்கறை இருக்க சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, குடிபோதையில் நடந்த சண்டையின் போது, கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

News November 6, 2024

அமெரிக்கா போக்கில் மாற்றம் இருக்காது: ஜெய்சங்கர்

image

அதிபர் தேர்தல் முடிவால், அமெரிக்காவின் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் இருக்காது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஆதிக்கம் மற்றும் தாராளவாத மனப்பான்மை இனியும் தொடராத ஓர் உலகிற்கு நாம் தயாராக வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், USAவின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது என தான் நீண்டகாலமாக கூறிவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

News November 6, 2024

2ஆவது திருமணம்.. இந்திய சட்டம் சொல்வது என்ன?

image

2ஆவது திருமணம் குறித்து BNS-82(1), BNS-82(2) பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. BNS-82(1) பிரிவில், மனைவி (அ) கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமல் செய்யப்படும் 2ஆவது திருமணம் செல்லாது. அப்படி செய்வோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. BNS-82(2)ஆவது பிரிவில், முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டு சிறை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 6, 2024

தொடரும் பாசம்.. அதிமுக – தவெக கூட்டணி?

image

திமுக, பாஜகவை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்கக்கூடாது என அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தியிருக்கிறார். புதிதாக அரசியல் களத்திற்கு வந்துள்ள விஜய்யை பலரும் விமர்சிக்கும் நிலையில், ஆரம்பத்தில் இருந்தே அதிமுக விமர்சிக்கவில்லை. அதேபோல், விஜய்யும் அதிமுகவை சீண்டவில்லை. இதனால், 2026 தேர்தலுக்கு கூட்டணி அச்சாரம் போடும் வகையில், இரு கட்சிகளும் பரஸ்பர அன்பை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

News November 6, 2024

ICC Ranking: முன்னேறிய பண்ட்; சறுக்கிய கோலி

image

ICC வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன் கோலி 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கில் 16வது இடத்திலும், ரோஹித் 26வது இடத்திலும் உள்ளனர். டாப் 10னில் இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும், பண்ட் 6வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 5வது இடத்தில் உள்ளார். NZ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜடேஜா 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்தில் உள்ளார்.

News November 6, 2024

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ராமாயணம்.. 2026இல் ரிலீஸ்

image

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நிதிஷ் திவாரி இயக்கும் அப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல் நடிக்கின்றனர். படத்தின் முதல்பாகம் 2026 தீபாவளியன்றும், 2ஆம் பாகம் 2027 தீபாவளியன்றும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

News November 6, 2024

நாளை கடைசி: ரேஷன் கடைகளில் 2,000 பணியிடங்கள்

image

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.7) கடைசி நாளாகும். விற்பனையாளர் பணிக்கு +2 முடித்தவர்களும், கட்டுநர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>https://drbcgl.in/<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!