news

News November 6, 2024

போக்குவரத்துத் துறை சேவைத் துறை: அமைச்சர் சிவசங்கர்

image

போக்குவரத்துத் துறையை தமிழக அரசு சேவைத்துறையாக பார்ப்பதால் நிதி நிலைமை மேம்பட வாய்ப்பில்லை என அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். டீசல் விலை கடுமையாக உயர்ந்த போதும், மற்ற மாநிலங்களில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதை போல் தமிழகத்தில் கட்டண உயர்வு செய்யப்படவில்லை என்றார். மகளிருக்கு கட்டணமில்லா பயணத்தின் மூலம் பல லட்சம் பேர் இதுவரை பயன்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News November 6, 2024

வயிறு உப்புசம் பிரச்னையா? இதை செய்யுங்க

image

வயிறு உப்புசம் பிரச்னையை சரிசெய்ய சித்த மருத்துவர்கள் வழங்கும் சில ஆலோசனைகள்: *சீரக நீரை குடித்துவர உப்புசம் சரியாகும் *நீரில் புதினா இலைகளைப் போட்டு ஊறவைத்து குடித்தால் சரியாகும் *நீரில் இஞ்சியினை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் சரியாகும் *ஓம நீரை குடித்தால் உப்புசம் குறையும் *வெற்றிலையில் உப்பு சேர்த்து உண்டால் சரியாகும் *பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சி குடித்தால் சரியாகும். SHARE IT

News November 6, 2024

J&K சிறப்பு அந்தஸ்து: தீர்மானம் நிறைவேற்றம்

image

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370ஆவது சட்டப் பிரிவு, 2019-ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

News November 6, 2024

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியல்

image

சமந்தா, வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘சிட்டாடல் ஹனி பன்னி’ நாளையும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ நவ.8 அன்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் ஜூனியர் NTR நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவாரா’ நவ.8 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும், டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ARM’ அன்றைய தினமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகவுள்ளது.

News November 6, 2024

₹25,000 கோடி GST வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

image

நாடு முழுவதும் ₹25,000 கோடி அளவுக்கு GST வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. GST வரி தணிக்கை அதிகாரிகள், போலி தனியார் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, நாடு முழுவதும் 18,000 போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், வரிக்காக மட்டும் 73,000 நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

News November 6, 2024

டிரம்ப் வெற்றி: உக்ரைனுக்கு பாதகம்?

image

அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றி உக்ரைனுக்கு பாதகமாக அமையும் என கூறப்படுகிறது. தான் போர்களை நிறுத்த வந்தவன், சண்டையிட அல்ல என டிரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோவுக்கு அதிக செலவு செய்வது நல்ல யோசனையல்ல என்று கடந்த காலங்களில் பலமுறை கூறியிருக்கிறார். ரஷ்யா – உக்ரைன் போரில், பல்லாயிரங்கோடி நிதி மற்றும் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கிவந்த நிலையில், இனி அது நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

News November 6, 2024

வசூல் மழையில் ‘அமரன்’

image

தீபாவளிக்கு வெளியான ‘அமரன்’ படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 3 நாள்களில் இப்படம் ₹100 கோடி வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது 6 நாள்களில் உலகம் முழுவதும் சேர்த்து ₹170 கோடி வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு பெரிய படங்கள் ஏதும் வெளியாகாததால், விரைவில் ‘அமரன்’ வசூல் ₹200 கோடியை எட்டும் என கூறப்படுகிறது.

News November 6, 2024

39,481 மத்திய அரசு வேலை: NEW அப்டேட்

image

BSF, CISF, CRPF, SSB உள்ளிட்ட மத்தியப் படைகளில் காலியாக இருந்த 39,481 இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது. ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதனை நாளைக்குள் திருத்திக்கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை ssc.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகளை உடனே அறிய WAY2NEWS APP-ஐ ஃபாலோ பண்ணுங்க. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News November 6, 2024

‘கங்குவா’ படத்தின் போஸ்டரை பகிர்ந்த ரெய்னா

image

‘கங்குவா’ படத்தின் போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். நடிகர் சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே படத்தை பிரபலப்படுத்தும் வகையில், சுரேஷ் ரெய்னா இன்ஸ்டா ஸ்டோரியாக போஸ்டரை வைத்துள்ளார்.

News November 6, 2024

சட்டப்பூர்வமாக மட்டுமே அமெரிக்கா வரணும்: டிரம்ப்

image

அமெரிக்காவில் நடந்து முடிந்த 60வது அதிபர் தேர்தலில், வெற்றி வாகை சூடிய டொனால்டு டிரம்ப் அந்நாட்டின் 47வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றிக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், அமெரிக்காவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சட்டப்பூர்வமாக வரவேண்டும் என்றும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!