India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புடவைக் கட்டும் பெண்களுக்கு “petticoat cancer” எனப்படும் தோல் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். புடவையின் கொசுவம் நழுவாமல் இருக்க, பெண்கள் பாவாடையை மிக இறுக்கமாக கட்டுகின்றனர். இதனால் வயிற்றுச் சருமம் மிகவும் இறுக்கப்பட்டு, சிலருக்கு தோல் புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க, மிக இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்க்க டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.
மண்ணுரிமை போராளிகளை தீவிரவாதிகளாக அமரன் படம் காட்டியுள்ளதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற கயமைத்தனமான படங்களின் கருத்தியலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் இந்த படம் கூறுவதாகவும் அவர் குறைகூறியுள்ளார். முஸ்லிம் சமூகத்தை அவமதிக்கும் விதமான இந்த கருத்தியலை பாஜக ஆதரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ITBPF இல் காலியாக உள்ள 526 பணி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பபதிவு வரும் 15ம் தேதி “itppolice. nic. in இணையதளத்தில் தொடங்க உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவல் உங்களுக்கு பயனளித்து இருக்கும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்த கட்சிக்கும் B டீம் இல்லை என தமாகா தலைவர் G.K.வாசன் கூறியுள்ளார். மற்ற கட்சிகளை சந்தோஷப்படுத்த, தனது கட்சியின் கோட்பாடுகளை கெடுக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், எதிர்கால செயல்பாடுகள், மக்கள் பணி ஆகியவற்றை வைத்தே தவெகவை கணிக்க முடியும் என்றார். முன்னதாக பாஜகவின் B டீம் தான் தவெக என சில கட்சிகள் விமர்சித்திருந்தன.
வரி செலுத்தாதோருக்கு விதிக்கப்படும் வட்டியில் சலுகை காட்ட அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரம் அளித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரியை செலுத்தாதோருக்கு மாதத்திற்கு 1% வட்டியுடன் செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்படும். இந்நிலையில் அந்த வட்டியை முழுவதும் தள்ளுபடி செய்வது அல்லது குறைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். இதில், வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால், அமி பெரா வெற்றிபெற்றுள்ளனர்.
பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்பில்லை என ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆஸி. அணி 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இந்தியாவின் ரிஷப் பண்ட் அல்லது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் 75% மத்திய அரசின் உத்தரவாதத்துடன் ₹7.50 லட்சம் கடன் வழங்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வரை இருக்கும் மாணவர்கள், இத்திட்டத்தின் கீழ் ₹10 லட்சம் வரை கடன் பெற்றால் 3% வட்டி சலுகையும் கிடைக்கும். அதேவேளையில் இந்த மாணவர்கள் கல்விக்காக அளிக்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பிற சலுகைகளைப் பெற முடியாது.
PM வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். வங்கிகளிடம் இருந்து மாணவர்கள் கடன் பெற உத்தரவாதம் ஏதும் அளிக்க தேவையில்லை. படிப்புக்கு தேவைப்படும் முழு தொகையையும் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். <
நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றத்தில் கேரள போலீசார் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளனர். துபாயில் நிவின் பாலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நிவின் பாலி நன்றி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.