India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (நவ.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை எக்காரணம் கொண்டும் தள்ளிப்போட வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் எனவும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை 5 ஆண்டுகள் முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் 2019இல் ஊரக உள்ளாட்சித் தேர்தலும், 2022இல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றன.
தூக்கத்தில் சிலர் பற்களை கடிப்பதை பார்த்து இருப்போம். இதற்கான காரணத்தை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மன அழுத்தத்துக்கான வடிகால் இல்லாமல் போகையில் இப்பிரச்னை ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் ஆகிய மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள்ளேயே போட்டு கொண்டால், அவை தூக்கத்தில் இப்படி வெளிப்படும் என தெரிவிக்கின்றனர். SHARE IT
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால், திருவாரூர் அருகே துளசேந்திரபுரம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கமலாவின் பூர்வீக கிராமமான இந்த ஊரில், அவர் வெற்றிபெற வேண்டி கோயில்களில் சிறப்புப்பூஜை நடத்தப்பட்டது. அவரது வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வாங்கி தயாராக இருந்தனர். ஆனால், அவர் தோல்வியடைந்ததால், அந்த கிராம மக்கள் சோகமாக காணப்பட்டனர்.
✦வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாழையில் அரைத்து பூசி 2 மணி நேரம் உலர விட்டு பின் கழுவ வேண்டும். இவ்வாறு 20 நாட்கள் வரை செய்ய வேண்டும்.
✦புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
✦வெந்நீரில் உப்பு சேர்த்து கால்களில் தடவி வந்தால் நரம்புகள் சீராகும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்புக்கு, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவாமி லீக் கட்சி வெளியிட்டுள்ள X பதிவில், டிரம்ப்பின் மகத்தான தேர்தல் வெற்றி, அவரது அசாதாரண தலைமைப் பண்புகளுக்கும், அமெரிக்க மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் சான்றாகும் என ஹசீனா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤மேஷம் – துணிவு
➤ரிஷபம் – செலவு
➤மிதுனம் – இன்பம்
➤கடகம் – லாபம்
➤சிம்மம் – யோகம்
➤கன்னி – துன்பம்
➤துலாம் – உற்சாகம்
➤விருச்சிகம் – பொறுமை
➤தனுசு – பயணம் ➤மகரம்- சாந்தம்
➤கும்பம் – வெற்றி ➤மீனம் – உயர்வு
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் பரிசாக நாளை காலை 11 மணிக்கு ‘தக் லைஃப்’ படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. டீசருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழக அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்யாத முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.