news

News November 7, 2024

காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள்

image

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி 5 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். *மகளிருக்கு மாதம் ₹3,000, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம். *விவசாயிகள் பயிர்க் கடன் ₹3 லட்சம் தள்ளுபடி. முறையாக கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு ₹50,000 ஊக்கத்தொகை. *சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குதல். *₹25 லட்சம் மருத்துவ காப்பீடு. *வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை.

News November 7, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 93 ▶குறள் : முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். ▶ விளக்க உரை: முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

News November 7, 2024

டிரம்ப் வெற்றியால் அடித்த ஜாக்பாட்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது, இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்ந்து 80,378-ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 24,484-ஆகவும் வர்த்தகமாகியுள்ளன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ₹8 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

News November 7, 2024

காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைப்பு

image

ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் காங்., கட்சியை மறுசீரமைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. கோஷ்டி பூசல் காரணமாகவே கலைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டிலும் மாநில தலைமையை தவிர்த்து கூண்டோடு கலைக்கப்பட்டது.

News November 7, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவ. 7 (ஐப்பசி 21) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நேரம்: 12:15 AM – 01:45 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶ எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: சஷ்டி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ நட்சத்திரம்: பூராடம் ▶சந்திராஷ்டமம்: மிருகசீரிடம்.

News November 7, 2024

டிரம்பை வானளாவ புகழ்ந்த அதானி

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்பிற்கு அதானி வாழ்த்து தெரிவித்துள்ளார். உடைக்க முடியாத விடாமுயற்சி, அசைக்க முடியாத கடினத்தன்மை, தனது நம்பிக்கைகளுக்கு உண்மையாக இருக்கும் துணிவு ஆகியவற்றின் உருவகமாக பூமியில் ஒருவர் உள்ளார் என்றால் அது டிரம்ப் தான் என அவர் புகழ்ந்துள்ளார். மேலும், அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை கண்டு வியப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

இது என்னடா கோவாவுக்கு வந்த சோதனை!

image

நாட்டின் முக்கிய சுற்றுலா மையமான கோவாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு கோவாவுக்கு 60 லட்சம் வெளிநாட்டவர்கள் வந்துசென்ற நிலையில், 2024இல் 15 லட்சமாக குறைந்துள்ளது. தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளின் கடற்கரை நகரங்கள் மேம்பட்ட உள்கட்டமைப்பை கொண்டிருப்பதால், வெளிநாட்டவர்களின் சுற்றுலா தேர்வு கோவாவில் இருந்து மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 7, 2024

சுபமுகூர்த்த தினங்கள்: பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படவுள்ளது. தட்கல் முன்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்பட இருக்கிறது.

News November 7, 2024

ஆராரோ ஆரிரரோ.. அமைச்சர் கீதா ஜீவனின் நெகிழ்ச்சி செயல்

image

குழந்தைக்கு தாலாட்டு பாடி, அமைச்சர் கீதா ஜீவன் தூங்க வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி-சென்னை விமானத்தில், அழுதுகொண்டே இருந்த குழந்தையை பெற்றோர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியும் அழுகையை நிறுத்தவில்லை. அதே விமானத்தில் பயணித்த அமைச்சர், ஒரு கட்டத்தில் குழந்தையை வாங்கி தனது மடியில் கிடத்தி தாலாட்டு பாடினார். இதில் ஆனந்தமடைந்த குழந்தை அவரது மடியிலேயே தூங்கியது.

News November 7, 2024

திறமைக்கு கிடைத்த பரிசு

image

இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் IPL தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக KKR அணி அவரை ₹13 கோடிக்கு தக்கவைத்தது. இந்த பணத்தை வைத்து உ.பி., மாநிலம் அலிகாரில் ₹3.5 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். சமீபத்தில் தனது குடும்பத்துடன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். சிலிண்டர் டெலிவரி செய்யும் நபரின் மகனான ரிங்குவின் திறமைக்கு கிடைத்த பரிசு என நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!