India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல் உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்ட சுவட்சர்லாந்தின் கிகிஹகன்சன் (95) முதுமை காரணமாக காலமானார். கடந்த 4ஆம் தேதி இரவு தூக்கத்தில் உயிர் பிரிந்ததாக, உலக அழகி போட்டியை நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை கிகிஹகன்சன் மகனும் உறுதி செய்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லண்டனில் கடந்த 1951-ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு 22 வயது.
பஞ்சாப் அணிக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ரீடெய்ன் செய்யாததால் சிங் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாப் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ பண்ணுவதை அவர் நிறுத்தியுள்ளார். மேலும், பஞ்சாப் அணியின் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து அழித்துள்ளார். IPL மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த மோதல் வெடித்துள்ளது.
‘தளபதி 69’ வெளிநாட்டு விநியோக உரிமம் ₹78 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டு விநியோக உரிமையை தயாரிப்பாளர் லலித்குமார் ₹100 கோடிக்கு வாங்கப்போவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘THE GOAT’ படத்திற்கு தமிழகத்தில் ₹100 கோடி ஷேர் கிடைத்த நிலையில், விஜய்யின் கடைசி படத்திற்கு ₹150 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்குவதில் டிரம்ப் அரசு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் H1B விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் பலர், அங்கு நிரந்தர குடியுரிமைக்காக க்ரீன் கார்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அதை பெறுவதற்கு 50 ஆண்டுகள் கூட ஆகலாம் என சொல்லப்படுகிறது. இவர்கள் அங்கு குழந்தை பெற்றுக் கொள்ளும்போது குழந்தைக்கு குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
தமிழக பாஜகவில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் அண்ணாமலை ஒழித்துக் கட்டிவிட்டதாக எஸ்.வி.சேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும், சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இங்கு யாரும் பிராமணர்களை பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆஸி., ஏ அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் இன்று நடைபெற உள்ளது. கடந்த சில தொடர்களில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த கே.எல். ராகுல், இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸி.,க்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் ராகுலை ஓப்பனராக களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே அதற்கான பயிற்சியாக, இன்றைய போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.
முகுந்த் வரதராஜனுக்கு ரஜினிகாந்த் சல்யூட் அடித்ததை அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸிடம் தெரிவித்துள்ளார். அதற்கு, சூப்பர் ஸ்டாரின் மிகப்பெரிய Fan-ஆன முகுந்த் தற்போது இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என இந்து பதிலளித்துள்ளார். மேலும், முகுந்த் இன்னும் தன் நினைவுகளில் வாழ்ந்து வருவதாகவும் இந்து உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
Naukri தளம் அக். மாதத்திற்கான வேலைவாய்ப்பு இன்டெக்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய மாநிலங்களில் தான் White Collar வேலைகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 24% அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் 16%, கர்நாடகாவில் 12%, கேரளாவில் 7% உயர்ந்துள்ளது. அதேபோல், Fresher-களுக்கு அதிக வேலை வழங்கும் 2ஆம் நிலை நகரங்களில் கோவை 31% என்ற அளவில் முன்னிலையில் உள்ளது.
*மற்றவர்களின் உணர்வுகளுடன் ஒருபோதும் விளையாடாதீர்கள், ஏனெனில் நீங்கள் விளையாட்டில் வெல்லலாம், ஆனால் நீங்கள் நிச்சயமாக அந்த நபரை உங்கள் வாழ்நாள் முழுவதும் இழப்பீர்கள். *அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். *புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள். *உங்கள் அன்பை அதை மதிக்காதவருக்காக வீணாக்காதீர்கள்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார். அதற்கு பதிலளித்த டிரம்ப், ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புவதாகவும், மோடி ஒரு உன்னதமான தலைவர் என்றும் புகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடும் எனவும், இந்தியாவை உண்மையான நண்பனாக கருதுவதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.