India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கங்குவா’ படம் வருகிற 14ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளது. அதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அப்படத்தின் கதையை சூர்யா பகிர்ந்து கொண்டார். 700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகமாக கதைக்களம் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நெருப்பை கடவுளாக வணங்கும் கங்குவா, நீரை கடவுளாக வழிபடும் மக்கள் மற்றும் ரத்தத்தை கடவுளாக வணங்கும் உதிரன் ஆகியோருக்கு இடையேயான போட்டிதான் இந்த படத்தின் கதை என அவர் கூறியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது.
குழந்தை, இளைஞன், முதியவர் என முப்பருவத்தில் தமிழ்க்கடவுள் முருகன் காட்சி தரும் தலம் திருவாரூர் எட்டுக்குடி முருகன் திருக்கோயிலாகும். சூரசம்ஹாரம் செய்ய அம்பாறையிலிருந்து அம்பு எடுத்து முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. கொற்றவை மைந்தனுக்கு விரதமிருந்து, இக்கோயிலுக்கு சென்று வன்னி மரத்தில் மணி கட்டி, இசைத்து பிராத்தனை செய்தால் குழந்தை செல்வம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
அதிமுக மா.செ. கூட்டம் இபிஎஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 1 லட்சம் இளைஞர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்க வேண்டும் எனவும், ஐடி விங் பணிகளை முடுக்கிவிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும், 10 வாக்காளர்களுக்கு 1 நிர்வாகி என கட்சியின் அனைத்து பணியாளர்களையும் 2026 தேர்தலுக்கு பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவின் கீதாகோவிந்தம், காம்ரேட் உள்ளிட்ட படங்கள், தமிழிலும் வெளியாகியுள்ளன. இதனால் தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. VD-12 என்ற பெயரிடப்படாத படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்து கொண்டிருந்தபோது தோளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாகும். அந்த சூரசம்ஹாரம் இன்று மாலை 3.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இதைக் காண ஆயிரகணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2 விதமான பிராமணர்கள் இருப்பதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். பாஜக என்ன சொன்னாலும் சரி என தலையாட்டும் ஒரு முட்டாள்தனமான பிரிவு இருப்பதாக அவர் சாடியுள்ளார். சாதி, சடங்கு எல்லாம் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும், வெளியில் தமிழ்நாட்டுக்காரன், இந்தியனாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், எல்லா இடத்திலும் சாதியை தூக்கிக் கொண்டு அலைய கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. தொடர்ந்து, இன்றும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின்கோட் எடுத்துச்செல்லவும்.
சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சாம்பிராணி, கற்பூரம் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக 15ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோயிலைச் சுற்றியுள்ள பகுதி மாசடைவதை தடுக்க பன்னீர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மலர்கள் எடுத்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
QUAD அமைப்பின் அடுத்த மாநாடு, 2025 செப்டம்பரில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இந்தியா வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த செப். மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த மாநாடு, சில காரணங்களால் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இதனால் 2025ஆம் ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.