news

News November 7, 2024

‘அமரன்’ படத்தை கண்டித்து போராட்டம்

image

‘அமரன்’ படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், அப்படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தை SDPI கட்சியினர் இன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், தியேட்டர்கள் முன்பும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவரவே, போலீசார் அலர்ட் படுத்தப்பட்டுள்ளனர்.

News November 7, 2024

பயங்கரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: அமித் ஷா

image

பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டு இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், சகிப்புத்தன்மை காட்டாது பயங்கரவாதத்தை இந்தியாவில் முடிவு கட்ட மோடி அரசு தீர்மானித்து இருப்பதாக கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான 2 நாள் மாநாடு இன்று தாெடங்க இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மாநாட்டில் உரை நிகழ்த்துவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

விளையாட்டு துளிகள்

image

➤ISL கால்பந்து தொடர்: 43ஆவது லீக் ஆட்டத்தில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து 3வது வெற்றியை பதிவு செய்தது. ➤ஜப்பான் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ராமநாதன் – மைனேனி ஜோடி முன்னேறியது. ➤கொரிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வென்றார். ➤சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் 2ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் ‘டிரா’ செய்தார்.

News November 7, 2024

10 மணி வரை மழை கொட்டும் மாவட்டங்கள்

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 7, 2024

அப்பாவுக்கு வாழ்த்து சொன்ன ஸ்ருதி

image

கமலுக்கு ஸ்ருதிஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “நீங்கள் ஒரு ஆபூர்வ வைரம். எனது விருப்பமான விஷயங்களில் ஒன்று உங்களுடன் நடப்பது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை அறிவேன். ஆனால், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தையாக இருங்கள். உங்களின் மந்திர செயல்களை காண எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன். Love You So much Appa” எனப் பதிவிட்டுள்ளார்.

News November 7, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் வேலை!

image

NTRO நிறுவனத்தில், பொது மத்திய சிவில் சேவை துறையில் காலியாகவுள்ள 75 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.8) கடைசி நாளாகும். B பிரிவு ஆராய்ச்சியாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-30. சம்பளம்: ₹56,100 – ₹1,77,500. கல்வித்தகுதி: Any UG & PG Degree. தேர்வு முறை: எழுத்து & நேர்காணல் தேர்வு. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>NTRO<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News November 7, 2024

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

image

இந்தியா A – ஆஸி. A அணிகள் இடையிலான 2ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்தியா A அணியில் அபிமன்யு ஈஸ்வரனுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் விளையாட உள்ளனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கும் ராகுல், இந்த போட்டியை சரியான பயிற்சி களமாக பயன்படுத்தி கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 7, 2024

சுபமுகூர்த்த தினங்கள்: பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு இன்றும், நாளையும் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படவுள்ளது. தட்கல் முன்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்பட இருக்கிறது.

News November 7, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤நேபாளத்தில் டிக்-டாக் செயலிக்கான தடையை நீக்கி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ➤இங்கிலாந்து அரசர் சார்லஸின் 2ஆம் மனைவி ராணி கமீலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ➤வியட்நாமில் யாக்-130 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. ➤ மெக்சிகோவில் இருந்து கரீபியன் தீவு நாடுகளுக்கு கடத்த முயன்ற 3 ½ டன் கொகைன் நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்டது.

News November 7, 2024

வெற்றிகளை வழங்கும் வியாழக்கிழமை வழிபாடு

image

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுவது சிறப்பு பலன் கிடைக்கும் என்று ஆன்மிகம் சொல்கிறது. அந்த வரிசையில், வியாழக்கிழமையான இன்று குரு பகவானை வழிபடுவது சிறப்பு என்று கூறப்படுகிறது. அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று குருபகவானை நைவேத்தியம் படைத்து மனதார வழிபட்டால் வெற்றிகள் குவியும், பதவி உயர்வு, செல்வ வளம் சேரும் என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

error: Content is protected !!