news

News November 7, 2024

டி20 கிரிக்கெட்: இந்தியா VS தெ.ஆப்பிரிக்கா இதுவரை

image

டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும், தெ.ஆப்பிரிக்காவும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியாவின் கைகளே ஓங்கியுள்ளது. இந்தியா அதிகபட்சமாக 15 போட்டிகளில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது. தெ.ஆப்பிரிக்கா அணி 11 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது. கடைசியாக தெ.ஆபிரிக்காவில் இந்தியா விளையாடிய போது 1-1 என்ற கணக்கில் போட்டித் தொடர் டிரா ஆனது.

News November 7, 2024

சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு

image

இந்திய பங்குச்சந்தை 2 நாள்கள் ஏற்றத்திற்கு பிறகு இன்று 1% அளவில் சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 804 புள்ளிகள் சரிந்து 79,574 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்து 24,235 புள்ளிகளுடனும், பேங்க் நிஃப்டி 477 புள்ளிகள் சரிந்து 51,800 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. வரும் நாள்களில் சந்தையின் போக்கு தெளிவாக தெரியவரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News November 7, 2024

தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் குறையும்!

image

குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். போர் பதற்றம் போன்ற நிச்சயமற்ற சூழல் இருந்ததால், முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி குவித்தனர். இதனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் போருக்கு நிதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளதால், முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைக்கு திரும்பியுள்ளனர்.

News November 7, 2024

இந்தியா 161 ரன்களுக்கு ALL OUT

image

ஆஸ்திரேலியா A அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா A அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. கே.எல்.ராகுல் (4), ருதுராஜ் (4), அபிமன்யூ ஈஸ்வரன் (0), சாய் சுதர்சன் (0) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதிரடியாக ஆடிய துருவ் ஜுரேல் 80 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் Michael Neser 4, Beau Webster 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News November 7, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹1,320 சரிவு

image

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,320 குறைந்தது ஒரு சவரன் ₹57,600க்கும், கிராமுக்கு ₹165 குறைந்து ஒரு கிராம் ₹7,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பங்குச்சந்தைக்கு திரும்பியதால் விலை குறைந்ததாகத் தெரிகிறது.

News November 7, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகப் பழமையான நூலகம் எது? 2) IIM என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்? 4) முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 5) கடலின் ஆழத்தை அளவிட பயன்படும் கருவி எது? 6) மூன்று இதயங்கள் கொண்டு உயிர் வாழும் உயிரினம் எது? 7) Coffee என்பதற்கான தமிழ் சொல் என்ன? 8) Cosmology என்றால் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 7, 2024

ரகுல் ப்ரீத் சிங்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்

image

தான் பட்டாசு வெடிப்பதே இல்லையென ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். சிறு வயதில் தனது தந்தை தீபாவளிக்கு ₹500 கொடுத்ததாகவும், பட்டாசு வெடித்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பதால் இப்பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். இதனால், அன்று முதல் தான் பட்டாசு வெடித்ததில்லை என்றார். இந்நிலையில், விலை குறைந்த ஆடை அணிந்து தானம் செய்வீர்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News November 7, 2024

இந்தியா, தெ.ஆப்பிரிக்கா டி20 தொடர் நாளை தொடக்கம்

image

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை தொடங்குகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் காெண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன்முதல் போட்டி, டர்பனில் நாளை நடைபெறுகிறது. 2ஆவது போட்டி 10ஆம் தேதியும், 3ஆவது போட்டி 13ஆம் தேதியும், 4ஆவது போட்டி 15ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

News November 7, 2024

இன்று கந்த சஷ்டி: கண்டிப்பா இதை பண்ணுங்க..

image

கந்த சஷ்டிக்கு 6 நாள்கள் விரதம் இருக்க வேண்டுமென்ற விருப்பம் பலருக்கும் இருந்தாலும், வேலை, உடல் நலன் காரணமாக விரதம் இருக்க முடிவதில்லை. அவ்வாறு 6 நாள்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி நாளான இன்று மட்டும் விரதம் இருக்கலாம். காலை முதல் உணவருந்தாமல் மாலை சூரசம்ஹாரம் முடிந்த பின் பச்சரிசி சாதம் உண்ணலாம். காலை 2, மதியம் 2, மாலை 2 மிளகு சாப்பிட்டு விரதத்தை முடித்து கந்தனின் கருணையைப் பெறலாம்.

News November 7, 2024

Recipe: முசுமுசுக்கை அடை செய்வது எப்படி?

image

புழுங்கல் அரிசி (500g), கடலைப்பருப்பு & துவரம் பருப்பு (100g) ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, அரைத்துக் கொள்ளவும். அதில் துருவியத் தேங்காய், உப்பு, அரைத்த முசுமுசுக்கை கீரையை சேர்த்து நன்கு பிசைந்து, 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தடவி, அதன் மேல் இக்கலவையை தடிமனாக தட்டி, வேக வைத்து எடுத்தால், சுவையான முசுமுசுக்கை அடை ரெடி. இதை வெங்காயச் சட்னி தொட்டு சாப்பிடலாம்.

error: Content is protected !!