news

News November 7, 2024

புரட்சி வென்ற நாள் இன்று!

image

ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி, புரட்சிகர அரசு ரஷ்யாவின் அரியணையை வென்ற நாள் இன்று. வறுமை, உழைப்புச் சுரண்டல், தேசிய இன ஒடுக்குமுறை, வாழ்வாதார பிரச்னை, மத ஆதிக்கம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை தோழர் லெனின் தலைமையில், போல்ஷ்விக் செம்படை நவ.7, 1917இல் வீழ்த்தியது. அந்த பொதுவுடைமை அரசியல், அந்நாட்டில் கல்லாமை, இல்லாமையை போக்கி, உழைக்கும் மக்களுக்கான முதல் பொன்னுலக அரசை நிறுவியது.

News November 7, 2024

வெள்ளி விலை ₹3,000 வீழ்ச்சி

image

வெள்ளி விலை கடந்த சில நாள்களாக தாெடர்ந்து அதிகரித்தது. இதனால் வெள்ளி நகை வாங்குவோர் அதிர்ச்சியில் இருந்த நிலையில், இன்று அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரே நாளில் கிலோவுக்கு ₹3,000 சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ₹3 குறைந்து ₹102க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ₹1,05,000இல் இருந்து ₹3,000 சரிந்து ₹1,02,000ஆக விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT

News November 7, 2024

நவ.9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு

image

தெலங்கானாவில் நவ.9 முதல் டிச.8 வரை சாதிவாரி சர்வே நடத்தப்படுகிறது. சுமார் ஒரு கோடியே 17 லட்சம் குடும்பங்களின் சமூகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 56 கேள்விகள் இடம்பெறவுள்ளன. நேற்று வீடுகள் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கி வைத்த அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர், மக்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார்.

News November 7, 2024

ஹாக்கி: கோல் மழை பொழிந்த மகாராஷ்டிரா அணி

image

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 14ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ‘ஜி’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் MH அணி குஜராத் அணியை 30-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளது. MH அணி தரப்பில் ஆதித்யா லலாகே, அஜித்க்ய ஜாதவ் தலா 5 கோல்கள் அடித்து அசத்தினர். இன்று நடைபெறும் போட்டியில் TN அணி அந்தமான் & நிக்கோபாரை எதிர்கொள்கிறது.

News November 7, 2024

facebook, insta பயன்படுத்த 2k கிட்ஸ்களுக்கு தடை

image

சோஷியல் மீடியாக்கள் குழந்தைகளின் மனநலத்தை பாதிப்பதால், 16 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடைவிதிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதன்படி, முதல்கட்டமாக facebook, tiktok, instagram போன்ற தளங்களில் கட்டுப்பாடு கொண்டு வரப்படும். தடையை மீறும் சிறுவர்கள், அவர்களின் பெற்றோருக்கு தண்டனை கிடையாது. மாறாக, நிறுவனமே பொறுப்பு. இந்தியாவிலும் இதுபோன்ற சட்டம் வேணுமா.. கமென்ட் செய்யுங்க.

News November 7, 2024

நாதகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகல்

image

நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் இருந்த அவர், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். சமீப காலமாக கட்சி மீதும், சீமான் நடவடிக்கை மீதும் சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்து, நாதகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது தொடர் கதையாகி வருகிறது.

News November 7, 2024

சொக்கத்தங்கம் – ஒரு போலி மதிப்பீடு!

image

தங்க நகைகளில் சொக்கத் தங்கம் என்று ஒன்று இல்லையென வல்லுநர்கள் கூறுகின்றனர். மென்மையான உலோகமான அதனுடன் பிற உலோகங்களைக் குறிப்பிட்ட விகிதங்களில் சேர்க்கையில் நகைகள் கிடைக்கின்றன. 22 காரட்டில் 8.4% பிற உலோகங்களும், 18 காரட்டில் 25% பிற உலோகங்களும் சேர்க்கப்படுகின்றன. எளிதில் சேதம் அடையக் கூடிய 22 காரட் தங்க நகைகளை இந்தியாவில் முன்னிலைப்படுத்துவது வியாபார சூட்சுமமாகும்.

News November 7, 2024

இன்றே கடைசி: ரேஷன் கடைகளில் 2,000 பணியிடங்கள்

image

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.7) கடைசி நாளாகும். விற்பனையாளர் பணிக்கு +2, கட்டுநர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் https://drbcgl.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எந்த தேர்வும் இல்லாமல் நேரடி நியமனம் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலைப் பகிருங்க.

News November 7, 2024

சீனப் பெருஞ்சுவர் போன்றது எனது கட்சி.. ஹேமந்த் காட்டம்

image

சீனப் பெருஞ்சுவர் போன்றது தமது கட்சி என்று ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ராஞ்சி பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னை கைது செய்து சிறையில் அடைத்து ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை அழிக்கவும் முயற்சி நடந்ததாக சாடினார். ஆனால் தமது கட்சி ஜார்கண்ட் மாநிலத்துக்கு சீனப் பெருஞ்சுவர் பாேன்றது. அதில் யார் ஏறினாலும் கதை முடிந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

News November 7, 2024

ரிட் ஹேபியஸ் கார்பஸ் என்றால் என்ன?

image

Habeas corpus என்பதை தமிழில் ‘ஆட்கொணர்வு மனு’ எனக் குறிப்பிடலாம். சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட (அ) அடைத்து வைக்கப்பட்ட (அ) காணாமல் போன ஒருவரை நீதிமன்றத்தின் முன்பு நேர் நிறுத்த (அ) கொண்டுவர தாக்கல் செய்யும் மனு ‘Habeas corpus’ எனப்படுகிறது. யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் இம்மனுவை தாக்கல் செய்யலாம். போதிய காரணமற்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்படுவதும் உண்டு.

error: Content is protected !!