India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மும்பை பாந்த்ரா போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் ராய்ப்பூரைச் சேர்ந்த ஃபைசான் என்பவரைப் பிடிக்க சத்தீஸ்கர் விரைந்துள்ளனர். அண்மையில் ரூ.5 கோடி கேட்டு பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கங்குவா படத்தை இந்தியாவை சேர்ந்த அனைத்து இயக்குநர்களும் வாயை பிளந்து பார்ப்பார்கள் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் என்பதை காட்டும் படமாக கங்குவா அமையும் என்றார். கங்குவா திரைப்படம் வெளியாகும் நவ.14ஆம் தேதி ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சராக உள்ள நடிகர் சுரேஷ் கோபி, இனி சினிமாவில் நடிக்கக் கூடாது என பாஜக மேலிடம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அமைச்சரான போதே, இனி படங்களில் நடிக்கக்கூடாது என கூறப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த அவர், ஏற்கெனவே படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதால், அதனை தொடர விரும்புவதாகவும், அமைச்சர் பதவிகூட வேண்டாம் எனவும் கூறியிருந்தார். இப்போது பதவி விலகுவாரா?
காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு (AQI லெவல்) 300-350 வரை சென்றுள்ளது. இதன் காரணமாக அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் நாட்டிலேயே சுத்தமான காற்று சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில்தான் இருக்கிறது. அங்கு AQI வெறும் 29தான். தமிழ்நாட்டில் திருநெல்வேலி AQI 35, தூத்துக்குடி AQI 46 மட்டுமே உள்ளன.
கடந்த 1956ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜிம் லேகர், ஒரு டெஸ்டில் 19 விக்கெட்டுகளை சாய்த்தார். 68 ஓவர்கள் வீசி 90 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இந்த சாதனையை அவர் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளே, முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் விளையாடியும் இந்த சாதனை சுமார் 70 ஆண்டுகளாக இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.
<<14551258>>புளூ <<>>வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. காய்ச்சல், சளி, சோர்வு, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்டவற்றால் அவதிப்படுவோர் பாதிப்பை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும். அத்துடன், தமிழக அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பரிசோதனை & சிகிச்சை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும்.
➤அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசி மேலும் கூடும். ➤வடை மாவில் சிறிது ஜவ்வரிசியை வறுத்து, பொடித்து சேர்த்து, சுட்டால் மொறுமொறுப்பாக இருக்கும். ➤பசும்பால் லேசாகத் திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல் சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றினால் கெட்டித்தயிராகி விடும். ➤சீடை செய்யும்போது மாவை வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.
IND-AUS இடையேயான BGT தொடர் நவ.22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேட் கம்மின்ஸ், ’ரிஷப் பண்ட் போட்டியில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்துபவர். ஆஸ்திரேலியாவில் அவர் இறுதியாக விளையாடிய போது சிறப்பாக ஆடினார். எனவே வரும் BGT தொடரில் அவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த சில திட்டங்கள் உள்ளது’ என்றார். கடந்த BGT தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல பண்ட் முக்கிய காரணமாக இருந்தார்.
இன்று 10 மணிக்கு <<14549903>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) அல்-கராவி நூலகம் (மொராக்கோ-AD 859) 2) Indian Institute of Management 3) சாவித்திரிபாய் பூலே 4) 80 பற்கள் 5) Fathometer 6) ஆக்டோபஸ் 7) குளம்பி 8) அண்டவியல். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
நாட்டுக்காக 36,468 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்திருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், 75 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு பணிகளில் 36,468 பேர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகுதான், 10 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நிலைபாட்டை இந்தியா கடைபிடித்து வருவதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.