news

News November 7, 2024

மக்களால் போற்றப்படும் ‘திருச்செந்தூர் கவசம்’

image

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். அவர் முதன் முதலில் இயற்றிய ‘திருச்செந்தூர் கவசம்’ தான் எல்லோரும் அறிந்தது. ‘சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’ என தொடங்கும் கவசம். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது.

News November 7, 2024

சீமானுக்கு இது நல்லதில்லை: டிடிவி தினகரன்

image

அரசியல்வாதியான தங்களுக்கே சீமானின் பேச்சு, விமர்சனங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த அரசியல் தலைவர்களை, பிற கட்சித் தலைவர்களை வாய்க்கு வந்தபடி சீமான் பேசுவது சரியில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் போக்கை திருத்திக்கொள்வதுதான் அவருக்கு நல்லது என்றார். பொது இடங்களில் சீமான் பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 7, 2024

உயர்ந்தது எலான் மஸ்கின் சொத்து மதிப்பு

image

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு வெளியான ஒரே நாளில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ₹2.23 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, டிரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த எலான் மஸ்க், பிரசாரத்துக்கு ₹375 கோடி அளவுக்கு நிதியும் வழங்கி இருந்தார். எலான் மஸ்கின் ஆதரவால் உள்ளம் மகிழ்ந்த டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி கொடுப்பேன் என உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 7, 2024

காலாவதியாகிவிட்டார் சீமான்: மா.சு

image

அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாக சீமான் கூறிய குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் மா.சு பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் கட்சி நடத்தும் சீமான், முதல்வர்கள் நியமனம் செய்தது கூட தெரியாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. அப்டேட் அரசியல்வாதி என சீமான் நினைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், அவர் காலாவதியான அரசியல்வாதி என்று சிரித்துக்கொண்டே மா.சு தக் லைஃப் செய்தார்.

News November 7, 2024

விஜய் இழிவுபடுத்திவிட்டார்: கே.பாலகிருஷ்ணன்

image

அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்திருப்பது, பிற கட்சிகளை இழிவுபடுத்தும் செயல் என CPM மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பதவிக்காக மாற்று கூட்டணியை நோக்கி கட்சிகள் ஓடவில்லை என சுட்டிக்காட்டிய அவர், விஜயகாந்த் கட்சி தொடங்கிய சமயத்தில் விஜய்க்கு கூடியதைவிட கூட்டம் அதிகமாக இருந்தது என்றார். முன்னதாக தவெக கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறியிருந்தார்.

News November 7, 2024

நொறுக்குத் தீனி: தமிழ் சொல் அறிவோம்

image

➤கேக் – அணிச்சல் ➤சமோசா – கறிப்பொதி ➤பாயசம் – பாற்கன்னல் ➤பஜ்ஜி – தோய்ச்சி ➤பொறை – வறக்கை ➤போண்டா – உழுந்தை ➤பப்ஸ் – புடைச்சி ➤கேசரி – செழும்பம் ➤புரூட் சாலட் – பழக்கூட்டு ➤லட்டு – கோளினி ➤ஜாங்கிரி – முறுக்கினி ➤பிரட் – வெதுப்பி ➤பன் – மெதுவன் ➤பிஸ்கட் – மாச்சில் ➤சாக்லேட் – இன்னட்டு ➤ஐஸ்கிரீம் – பனிக்கூழ் ➤சிப்ஸ் – நொறுவை ➤சர்பத் – நறுமட்டு ➤நூடுல்ஸ் – குழைமா ➤பாப் கார்ன் – சோளப்பொரி

News November 7, 2024

இபிஎஸ்-க்கு மான நஷ்ட ஈடாக ரூ.1.10 கோடி: ஐகோர்ட்

image

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் தனபால் ரூ.1.10 கோடி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அதன்பிறகு கனகராஜின் சகோதரர் தனபால், இந்த வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புப்படுத்தி ஊடகங்களில் பேசினார். இதற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு

image

2024ஆம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியரான முனைவர் மா. செல்வராசனுக்கு, முதல்வர் ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் விருது வழங்கி சிறப்பிக்கிறார். இவ்விருதுடன், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

News November 7, 2024

தாமரை ஆட்சி அமைக்கும் காலம் வரும்: தமிழிசை

image

தாமரை ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும் என பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். குளத்தில் தாமரை மலருவதையே திமுக அமைச்சரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சுட்டிக்காட்டிய அவர், வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போவதை கண்டு திமுக அலறப்போகிறது என்றார். நேற்று போரூர் ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.

News November 7, 2024

ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்யுங்க

image

தொலைந்த ரேஷன் அட்டைக்கு பதிலாக புது அட்டை பெற பொது விநியோகத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பாெது விநியோகத்துறையின் இணையதளமான https://tnpds.gov.in/இல் சென்று, “நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க” என்பதை அழுத்தி, அதில் நமது மொபைல் நம்பர், ஓடிபி உள்ளிட்டு நுழைய வேண்டும். பிறகு திறக்கும்பக்கத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், ரேஷன் அட்டை வீட்டுக்கு தபாலில் வரும். இந்தத் தகவலைப் பகிருங்க.

error: Content is protected !!