news

News November 7, 2024

ஆங்கிலம் அறிவோம்: Bucket List Vs W​ish List

image

Bucket List என்பதற்கும் W​ish List என்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இறப்பதற்குள் (பயணம்) என்னென்ன செய்ய வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களோ அச்செயல்களின் பட்டியல்தான் Bucket List. பொதுவாக ஒருபோதும் நடக்க சான்ஸே இல்லை எனும்படியான செயல்கள் இப்பட்டியலில் இடம் பெறுவதில்லை. W​ish List என்பது வாங்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக எ​ண்ணுகின்றவற்றின் (அதற்குப் பெரும் செலவு பிடிக்கும்) பட்டியலாகும்.

News November 7, 2024

மெரினாவில் ‘சத் பூஜை’ செய்த வட மாநிலத்தவர்கள்!

image

சூரியனைப் போற்றி வணங்கும் முக்கிய பண்டிகையான ‘சத் பூஜை’ வட மாநிலங்களில் நவ.5 அன்று தொடங்கியது. 3ஆம் நாளான இன்று ‘சந்தியா அர்க்யா’ எனப்படும் மாலை நேரப் பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியன் அஸ்தமனம் ஆகும்போது, தண்ணீருக்குள் இறங்கி வழிபடுவர். அந்த வகையில் சென்னையில் உள்ள வடமாநிலத்தவர்கள் சிலர் மெரினாவில் படையல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

News November 7, 2024

மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. டாஸ்மாக்கில் மாற்றம்

image

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பானங்களுக்கு அச்சிடப்பட்ட பில் வழங்கும் நடைமுறை 2 வாரங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அரக்கோணம், ராமநாதபுரத்தில் இந்த நடைமுறை டெஸ்ட்டிங்கில் இருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து அமல்படுத்தப்படவுள்ளது. டாஸ்மாக்கில் இனி கூடுதலாக பணம் வசூலிக்க முடியாது என்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 7, 2024

இந்தியில் தான் பேசணுமா? சஸ்பெண்ட்டான TTR

image

இந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பு மனப்பான்மை நாடு முழுவதும் பரவலாக வெளிப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில், TTR ஒருவர் தம்பதிகள் மராத்தி மொழியில் பேசியதற்கு, இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தி தெரிந்திருக்கவேண்டும் என கூறி, அவர்களை மன்னிப்பு கடிதமும் எழுத வைத்துள்ளார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி, கடும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, மேற்கு ரயில்வே TTR-ஐ சஸ்பெண்ட் செய்துள்ளது.

News November 7, 2024

தமிழ்நாட்டில் விரைவில் கூட்டணி ஆட்சி: அன்புமணி

image

2026இல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக சோளிங்கரில் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளும் இடம்பெறும் காலம் விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவ்வாறு அமையும் கூட்டணி அரசில் பாமக நிச்சயம் பங்கேற்கும் எனவும், திமுக மீண்டும் ஆட்சியில் அமர வாய்ப்பே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News November 7, 2024

சிஎஸ்கே அணியை சாடிய உத்தப்பா!

image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக NZ பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திராவை பயிற்சி பெற அனுமதித்ததற்காக, சிஎஸ்கே அணியை முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சாடியுள்ளார். யூடியூப் சேனலில் பேசிய அவர், எதற்கும் ஒரு எல்லைக்கோடு முக்கியம். இந்திய அணியை எதிர்த்து விளையாடும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு பயிற்சி அளிக்கும்போது, நமது நாட்டின் நலனே முன்னோக்கி இருக்க வேண்டும் என்றார்.

News November 7, 2024

ALERT: 26 மாவட்டங்களில் மிக கனமழை

image

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிக கனமழைக்கான orange alert விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, குமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.

News November 7, 2024

கூட்டணி நல்லா வலுவா தான் இருக்கு: உதயநிதி

image

திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக Deputy CM உதயநிதி தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு மக்களே பதில் சொல்வார்கள் என்றார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும் என்றும் திமுகவினரை அவர் கேட்டுக்கொண்டார்.

News November 7, 2024

Recipe: கோதி அல்வா செய்வது எப்படி?

image

கோதுமையை கழுவி, 6 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் போட்டு அரைத்து, அதை பிழிந்து பாலெடுக்கவும். அதிலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை எடுத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். கொதி வந்ததும், அதில் பனை வெல்லம் சேர்க்கவும். அத்துடன், சிறுக சிறுக நெய் சேர்த்து இடைவிடாது கிளறவும். பதம் வந்ததும் ஏலக்காய் தூள், முந்திரி போட்டு இறக்கி ஆறவைத்தால் கோதி அல்வா ரெடி.

News November 7, 2024

டேட்டிங் செயலி மூலம் 4 பவுனை இழந்த பெண்.. நடந்தது என்ன?

image

பெண்ணுடன் டேட்டிங் App-ல் பழகிய நபர், 4 சவரன் நகையை ஏமாற்றியுள்ளார். சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 34 வயதான பெண்ணுக்கு டேட்டிங் App மூலம் அறிமுகமானார் பிரசாந்த். முதல் நாள் பழக்கமே சந்திக்கும் ஆவலை தூண்ட, அன்றே இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அப்பெண்ணின் 4 சவரன் செயினை எடுத்து அணிந்து கொண்டார் பிரசாந்த். நாலு நாளில் தருகிறேன் என்று சொன்னவர் அப்ஸ்காண்ட் ஆக, அப்பெண் போலீசை நாடியுள்ளார்.

error: Content is protected !!