India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் நவ.20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, பார்லி தொகுதி NCP (சரத்பவார்) வேட்பாளர் ரஜேசாப் தேஸ்முக் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மணமாகாத இளைஞர்களுக்கு மணம்முடிக்க தீர்வுகாண வழி செய்வோம் என உறுதி அளித்தார். இந்த வாக்குறுதி இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விசாரணை முறையாக நடைபெற்று வரும் நிலையில், வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆர்ஜி கர் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் ஆக.9இல் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைதானர்.
காடுகளில் கருவிப்பயிற்சியும், அரசியல் பயிற்சியும் மேற்கொள்ளும் மாவோயிஸ்ட் கொரில்லாக்களுடனான தனது அனுபவத்தை போர்க்கள ஊடகவியலாளர் சத்நாம் (தமிழில் பிரசன்னா) நூலாக படைத்துள்ளார். பழங்குடிகள்-மாவோயிஸ்ட் மீதான பொதுப் பார்வையை ஆதாரப்பூர்வமாக உடைக்கிறது இந்நூல். மனித வேட்டையாடப்பட்ட எளிய பழங்குடிகளின் பின்தங்கிய நிலையை அரசு உணர வேண்டியதன் அவசியத்தை மனித நேயத்தோடு வலியுறுத்துகிறார்.
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் பிரதீப், தனது காதலியான பூஜாவை இன்று கரம்பிடித்தார். அவர்களின் திருமணத்தில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இத்திருமணம் ஒரு சுவாரஸ்யமான நாளாக மாறியிருக்கிறது. ஆம்!, கடந்த சீசனின் இதே நாளில் தான், பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி பிரதீப்-க்கு ரெட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
அரசுக்கு எதிராக அவதூறு செய்வதே சில அரசியல் தலைவர்களுக்கு வாடிக்கையாக உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார். உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறலாம் என சிலர் விரும்புவதாகவும், அது மக்களிடம் எடுபடாது எனவும் சாடியுள்ளார். அனைத்து அவதூறுகளையும் கடந்து திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மொபைல் சேவை, எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், ரீடெயில் என நம் அன்றாட வாழ்க்கை தொடர்பான பல பிசினஸ்களில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ், விரைவில் ஸ்நாக்ஸ் பிசினஸிலும் இறங்க உள்ளது. முதல்கட்டமாக சிப்ஸ், பிஸ்கட்ஸ், இதர சேவரி ஸ்நாக்ஸ்களை அறிமுகம் செய்யவுள்ளது. சில்லரை வியாபாரிகளுக்கு அதிக மார்ஜின் அளிப்பதால் ₹42,694 கோடி ஸ்நாக்ஸ் மார்க்கெட்டில் பிரிட்டானியா, ஹல்டிராம் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் டஃப் கொடுக்கும்.
திடீர் Heart Attack-ஆல் உயிரிழப்பதை தடுக்க, ‘Ram Kit’-ஐ கான்பூர் ஹாஸ்பிடல் பரிந்துரைக்கிறது. இதில் Ecosprin, Rosuvastatin, Sorbitrate ஆகிய 3 tablets மட்டும் இருக்கும். இதன் மொத்த விலையே ₹7 தான். நெஞ்சுவலி வந்தால், உடனே இவற்றை உட்கொண்டால், இதய செயல்பாட்டை அது சீராக்கும். உடனே ஹாஸ்பிடலுக்கு சென்றால், உயிரிழக்கும் ஆபத்தை தடுக்கலாம். டாக்டரிடம் ஆலோசித்து, இந்த ‘kit’ஐ எப்போதும் கையில் வைத்திருங்கள்.
சபரிமலை பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. நவ.15 முதல் ஜன.16 வரை சென்னை (கோயம்பேடு, கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரையிலிருந்து பம்பைக்கு Ultra Deluxe, Non-AC இருக்கை, Sleeper பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் விவரம் அறிய 9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மதயானை கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் வெளியிட்டுள்ள பதிவில், மதயானை கூட்டத்திற்கு பிறகு வேறு பட வாய்ப்பு வரவில்லை. யாரும் அழைக்கவில்லை என்றே நினைத்தேன். ஆனால் வந்த வாய்ப்புகளை ஒருவன் தடுத்திருக்கிறான் என்பதை இன்றே தெரிந்துகொண்டேன். அவன் வேறு யாருமல்ல, அவனை நான் நடிகனாக்கினேன். பச்சை துரோகி.. என் எதிரிக்கு கைகூலியாக செயல்பட்டு இருக்கிறான் என்று குறிப்பிட்டிருக்கிறார். யார் அந்த நடிகர்..
புதிதாக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், ED பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார். குறுக்கு விசாரணைக்காக சாட்சி ஆஜராகியுள்ள நிலையில், விசாரணையை எப்படி ஒத்திவைப்பது? என கேள்வி எழுப்பிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, இதற்கு மேல் அவகாசம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் விசாரணையை நவ.15க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.