India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வலுவான திருமண பந்தத்திற்கு முக்கியம் கணவன் – மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அன்பை பரிமாறிக்கொள்வதே என்பார்கள். ஆனால், கன்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் துணையை கிண்டல் செய்வதும் ஆரோக்கியமான உறவின் ஒரு பகுதி தான் என்கின்றனர். 15 ஆயிரம் தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இம்முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இருப்பினும், கேலி கிண்டல் என்பதற்கும் ஒரு அளவு உண்டு என்றும் எச்சரிக்கிறார்கள்.
டெங்குவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் டெங்குவால் 20,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. டெங்கு தொடர்பான உயிரிழப்புக்கள் முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளதாகவும், வரும் காலங்களில் உயிரிழப்பை மேலும் தடுப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல் விரைவில் குணமடைய
*திப்பிலியை வறுத்து பொடி செய்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.
*புதினாவை துவையலாகவோ, சூப் செய்தோ உணவாக எடுத்துக்கொள்வதால் வறட்டு இருமலிலிருந்து விடுபடலாம்.
*மாதுளம் பழத்துடன் தேன், இஞ்சி சாறை கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
*பாலில் மஞ்சள், மிளகு பொடி கலந்து பருகலாம்.
சீனா தற்போது HQ-19 என்ற பாலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்கி உள்ளதாக அமெரிக்க ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு, அமெரிக்காவின் சக்திவாய்ந்த THAAD, ரஷ்யாவின் S-400 ஆகியவற்றை விட அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் 5-ம் தலைமுறை J-35A போர் விமானத்தையும் தயாரித்து வருகிறதாம். இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் மாறக்கூடும்.
➤மேஷம் – செலவு
➤ரிஷபம் – துணிவு
➤மிதுனம் – முயற்சி
➤கடகம் – பயணம்
➤சிம்மம் – வெற்றி
➤கன்னி – லாபம்
➤துலாம் – கவனம்
➤விருச்சிகம் – கீர்த்தி
➤தனுசு – பயம் ➤மகரம்- பொறுமை
➤கும்பம் – ஆக்கம் ➤மீனம் – நிம்மதி
Whatsapp’ல் பல செய்திகளும், புகைப்படங்களும் பகிரப்படுகின்றன. அவற்றில் பலதும் fake என தோன்றும் அளவிற்கு இருக்கும். இப்படி குழம்புவதை தவிர்ப்பதற்காக, புதிய அம்சத்தை மெட்டா உருவாக்கி வருகிறதாம். அதாவது, புகைப்படங்களின் உண்மை தன்மையை அறிய அவற்றை இணையத்தில் நேரடியாகத் தேட வழிவகை செய்யப்படுகிறது. இந்த அம்சம் சமீபத்திய பீட்டா பதிப்பில் தற்போது உள்ளது. சில காலத்தில் அனைத்து Version-லும் கிடைக்கும்.
பூமி உருண்டையானது என்பதால், இக்கேள்விக்கு முடிவில்லை. ஆனால், புவி விஞ்ஞானிகள் உலகின் கடைசி பகுதியாக அர்ஜென்டினாவின் உஷுவாய் (Ushuaia) நகரத்தை குறிப்பிடுகிறார்கள். அமெரிக்கக் கண்டத்தின் தெற்கு முனையைக் குறிக்கும் இந்நகரம் கரடுமுரடான மலைகளும், கடலாலும் சூழப்பட்டுள்ளது. 23 சதுர கிமீ பரப்பளவு கொண்ட நகரில் 57 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். கோடை வெயிலும் 12-20 டிகிரி செல்சியஸாகவே இருக்கிறது.
குரூப் 4 தேர்வு முடிவின்படி தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. நவ.9 – 21க்குள் www.tnpsc.gov.inஇல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய TNPSC அறிவுறுத்தியுள்ளது.
சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில் அதிக நன்கொடை வழங்குபவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் HCL நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரின் குடும்பத்தினர் ₹2153 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர். 2024-இல் அம்பானி குடும்பம் ₹407 கோடியும், பஜாஜ் குடும்பம் ₹352 கோடியும், பிர்லா குடும்பம் ₹334 கோடியும் அளித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்கள். அதானி குடும்பத்தினர் சுமார் ₹303 கோடி நன்கொடையாக வழங்கி 5-ஆம் இடத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.