India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 94 ▶குறள் : துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. ▶ விளக்க உரை: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
சனாதனம் மற்றும் துறவிகளின் பணிகளுக்கு தடையாக இருக்கும் அனைத்தையும், சங்க தொண்டர்கள் தடி கொண்டு அகற்றுவார்கள் என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையில் இருந்து பாடம் கற்குமாறும், நாம் அஞ்சவோ, அநீதியை பொறுத்துக் கொள்ளவோ தேவையில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், வேறுபாடுகள் இருப்பினும் நாம் அடிப்படையில் ஒரு மக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள TrueCaller நிறுவனத்தின் அலுவலகங்களில் IT அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து பெங்களூரு, மும்பை மற்றும் குருகிராமில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பு இல்லாமல் ரெய்டு நடத்தியதாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு உட்பட்டே பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக TrueCaller தெரிவித்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில், உலகில் பல்வேறு வகையான உறவுகள் ஏற்பட்டுவிட்டன. AI-வுடன் காதலில் இருப்பவர்களை குறித்து கேட்டுள்ளோம். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் வாழ்கிறார் ஜப்பான் நபர் ஒருவர். அகிஹிகோ கோண்டோ என்பவர் 2018 -ல் அனிமே கதாபாத்திரமான ஹட்சுனே மிகு என்கிற மெய்நிகர் கதாபாத்திரத்தை மணந்து கொண்டுள்ளார். இத்தம்பதிகள் தற்போது தங்களின் 6-வது திருமண நாளையும் கொண்டாடி உள்ளார்கள்.
▶நவ. 8 (ஐப்பசி 22) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM ▶கெளரி நேரம்: 12:00 AM – 01:00 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 PM – 12:00 PM ▶ எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 AM – 09:00 AM ▶திதி: சப்தமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: ஆம் ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: உத்திராடம் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை.
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் மூலம் கயது லோஹர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். பல்லவி என்ற கேரக்டரில் நடிப்பதாக அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். பாலிவுட் மாடலான கயது லோஹர், கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.
AUS-க்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் ரோஹித் விளையாட மாட்டார் என தெரியவருகிறது. அப்படியானால், அடுத்தடுத்த போட்டிகளில் அவரது கேப்டன் பொறுப்பை தேர்வு குழு பறிக்க வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்து இருந்தார். ஆனால் இதை ஏற்க முடியாது என AUS முன்னாள் கேப்டன் ஃபின்ச் கூறியுள்ளார். ரோஹித் தனது மனைவி, குழந்தையுடன் நேரம் செலவிட விரும்புவதில் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குளிர்காலத்தில் உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். இந்த சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி, வைட்டமின் டி, துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிடுமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கீரைகள், பழங்கள், பால் பொருட்கள், மீன், முட்டை மற்றும் உலர் பழங்கள் அதிகமாக உட்கொள்ளவும் அறிவுறுத்துகிறார்கள்.
அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும் என ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். தேர்தலுக்கு பின் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர், டிரம்ப் குழுவினருடன் இணைந்து பணியாற்ற தனது நிர்வாகத்திற்கு உத்தரவிடுவதாகவும், அமெரிக்க மக்களும் அதையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கமலா ஹாரிஸ் அர்ப்பணிப்புடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வாழ்த்தினார்.
இன்று (நவ.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.