India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யும் தானும் பங்கேற்பதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது சனாதன சூழ்ச்சி என திருமாவளவன் சாடியுள்ளார். இது VCK மீதான நம்பகத்தன்மையை நொறுக்கிடும் முயற்சி. ஏற்கனவே ஒரு வெற்றிக் கூட்டணியில் இருக்கும்போது, இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது. மாற்று கருத்துள்ள ஒரு தலைவருடன் விழாவில் பங்கேற்பதாலேயே அணி மாறிவிடுவோமா எனவும் வினவியுள்ளார்.
➤தேசிய பாதுகாப்பு கருதி கனடாவில் இயங்கிவரும் சீனாவின் ByteDance நிறுவனத்தை மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ➤ஸ்பெயினில் பெய்த கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது. ➤தென்சீனக்கடலில் உள்ள கோட்டா தீவின் உரிமையை மீட்டெடுக்க பிலிப்பைன்ஸ் கடற்படையினர் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டனர். ➤சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு ஆஸி. அரசு தடை விதித்துள்ளது.
ஆரோக்கியா நிறுவனம் இன்று முதல் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளது. நிறை கொழுப்பு பால் 500 மி.லி. விலை ரூ.36இல் இருந்து ரூ.37ஆகவும், 1 லிட்டர் ரூ.65இல் இருந்து ரூ.67ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. ரூ.31இல் இருந்து ரூ.32ஆகவும், 1 லிட்டர் ரூ.58இல் இருந்து ரூ.60ஆகவும், தயிர் 500 கிராம் ரூ.37இல் இருந்து ரூ.38ஆகவும், 1 கிலோ ரூ.68ஆகவும் விற்கப்படுகிறது. SHARE IT
சிவப்பு முட்டைக்கோஸில் பல நன்மைகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களை ஃப்ரீரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கின்றன. செல்களின் வீக்கத்தை குறைப்பதோடு, சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. வாரத்தில் 2 நாள்கள் இதை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
முருகக் கடவுள் நீதிபதியாக காட்சி தரும் தலம் என அருணாகிரி நாதரால் பாடப்பெற்ற பெற்றது விருத்தாசலம் மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் திருக்கோயில். சுந்தர நாயன்மாரிடம் திருவிளையாடிய திருமுருகன் இங்கே வேண்டுதல் தெய்வமாக சிவலிங்க வடிவிலேயே மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு சென்று வேண்டினால் சொத்து விவகாரம், வியாபாரம், வேலை, தொழில் போன்றவற்றில் உள்ள பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்.
‘கங்குவா’ படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ₹55 கோடியை திரும்ப தராததால் அந்நிறுவனம் கோர்ட்டுக்குச் சென்றது. நேற்றைய விசாரணையின் போது இன்று தருவதாக ‘கங்குவா’ படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் உறுதியளித்தது. இன்று மதியத்திற்குள் பணம் கொடுக்கவில்லை எனில், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிகிறது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி, வழக்கறிஞர் ஒருவர் கரூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி, கரூர் தான்தோன்றிமலை காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருமாவளவனும், ஜவாஹிருல்லாவும் தேசத்துரோகிகள் என எச்.ராஜா விமர்சித்துள்ளார். ‘அமரன்’ திரைப்படத்தை விமர்சிப்பதாக கூறி தேசத்துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இவர்களை போன்றவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனவும், திராவிட கட்சிகள் சாதி, மொழி வெறியர்கள் எனவும் சாடியுள்ளார்.
MEA ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா அரசு தடைவிதித்தற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடாவில் அரசியல் ஆதரவு உள்ளதாக ஜெய்சங்கர் பேசியிருந்தார். அதனால் அந்த ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்திற்கு கனடா அரசு தடை விதித்தது. கனடாவின் செயல்பாடுகளை வைத்தே ஜெய்சங்கர் கூற்றின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளலாம் என இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.