India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செயலி எனில், ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளீடு செய்ய வேண்டும். இதையடுத்து, செல்போன் மூலம் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். பின்னர், முகவரி, செல்போன் எண், குடும்ப உறுப்பினர்களில் வேறு யாரேனும் 70 வயது மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களது விவரங்களை பதிவிட வேண்டும். இது முடிந்ததும் காப்பீடு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வலைதளத்திலும் இதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 14ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ‘C’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் TN அணி அந்தமான் அணியை 43-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளது. TN அணியின் கேப்டன் கார்த்தி 13 கோல்கள் அடித்து அசத்தினார். கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் முன்னிலை பெற்ற TN அணி காலிறுதிக்கு முன்னேறியது.
மழை & பனிக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, மூச்சிரைப்பு, தொண்டைவலி, செரிமான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் கருமிளகு டீயைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கருமிளகு (5-6), துளசி, மஞ்சள், ஏலக்காய் சேர்த்து நீரில் 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கருமிளகு தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
சபரிமலை அய்யப்பன் கோயில் செல்லும் தமிழக பக்தர்களுக்காக பம்பைக்கு வருகிற 15ஆம் தேதி முதல் ஜன. 15 வரை சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, கடலூர், மதுரையில் இருந்து அதி நவீன சொகுசு பஸ்கள் மற்றும் ஏ.சி. இல்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.26 முதல் டிச.29 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது.
இந்தியா, தெ.ஆப்பிரிக்கா இடையேயான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி, டர்பனில் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி, ஜியோ சினிமா செயலியில் நேரலையாக காணலாம். அதேநேரம், முதல் டி20 போட்டி நடைபெறும் டர்பனில் 40% மழைக்கு வாய்ப்பு இருப்பதால் போட்டி பாதிக்கப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
NTRO நிறுவனத்தில், பொது மத்திய சிவில் சேவை துறையில் காலியாகவுள்ள 75 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. B பிரிவு ஆராய்ச்சியாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-30. சம்பளம்: ₹56,100 – ₹1,77,500. கல்வித்தகுதி: Any UG & PG Degree With GATE . தேர்வு முறை: எழுத்துத்தேர்வு & நேர்காணல். கூடுதல் விவரங்களுக்கு இந்த <
தமிழகத்தில் NOV.13 முதல் 15 வரை அனைத்து ரேஷன் கடைகளையும் அடைத்து ஸ்டிரைக்கில் ஈடுபட நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். ரேஷன் கடைகளை நிர்வகிக்க தனித்துறையை அமைக்க வேண்டும், பொருள்களை பொட்டலமாக தர வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக்கை முன்னெடுக்க உள்ளனர். இதையொட்டி, அரசும், கூட்டுறவுத்துறையும் தங்களை உடனே அழைத்துப் பேசுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். நேற்றிரவு முதல் அங்கு பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, இன்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
➤கொரிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முன்னேறினார். ➤புரோ கபடி தொடர்: 39ஆவது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி 33-30 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை தோற்கடித்து 3ஆவது வெற்றியை பெற்றது. ➤சென்னை GM செஸ்: மாஸ்டர்ஸ் பிரிவில் லைவ் ரேட்டிங் தரவரிசையில் அர்ஜூன் எரிகைசி 2ஆவது இடத்தை பிடித்தார். ➤சர்வதேச பீச் வாலிபால் போட்டி சென்னையில் நவ.21 தொடங்கி 4 நாட்கள் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
Sorry, no posts matched your criteria.