news

News November 8, 2024

GREAT: பாலைவனத்தை பசுஞ்சோலையாக மாற்றிய நபர்

image

சாதாரண நிலத்தில் செடி, கொடிகளை வளர்ப்பது இயல்புதான். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத பாலைவனத்தில் செடிகளை நட்டு மரமாக வளர்ப்பது என்பது மிகக் கடினமாகும். ராஜஸ்தானின் எகல்கோரி கிராமத்தை சேர்ந்த 80 வயதான ரணராம் பிஸ்னோய் என்பவர் பாலைவனத்தில் 10 ஏக்கர் நிலத்தில் 50,000 மரங்களை இதுபோல வளர்த்துள்ளார். ட்யூப் மூலம் தண்ணீர் எடுத்து சென்று விட்டுள்ளார். இதனால் ட்ரீ மேன் என அழைக்கப்படுகிறார்.

News November 8, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகப் பழமையான நாடு எது? 2) BDS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார்? 4) ‘Slumdog Millionaire’ படம் எத்தனை ஆஸ்கார்களை வென்றது? 5) ஆமைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 6) மின்னோட்ட வலிமையை அளக்க உதவும் கருவி எது? 7) தமிழில் உள்ள வல்லினம் எழுத்துக்கள் எவை? 8) Ichthyology என்றால் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 8, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹680 உயர்வு

image

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹1,320 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹85 உயர்ந்து ஒரு கிராம் ₹7,285க்கும், சவரனுக்கு ₹680 உயர்ந்து ஒரு சவரன் ₹58,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், சில்லறை வர்த்தகத்தில் கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ஒரு கிராம் ₹103க்கும், கிலோவுக்கு ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.

News November 8, 2024

கிருஷ்ணசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

image

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக நேற்று அவர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றார். அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், கைது செய்யப்பட்ட அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News November 8, 2024

8-4-3 முதலீட்டு உத்தி என்றால் என்ன?

image

பல்கிப் பெருகும் முதலீட்டை 8-4-3 உத்தி (Power of Compounding) என்று வல்லுநர்கள் அழைக்கின்றனர். ஒருவர் மாதந்தோறும் ₹20,000-ஐ மியூச்சுவல் பண்டில் SIP-இல் போட்டால், அந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 12% வட்டி வரும். அது 8 ஆண்டுகளின் முடிவில், ₹32 லட்சமாக மாறும். SIP-ஐ தொடர்ந்தால் அடுத்த 4 ஆண்டுகளில், ₹64 லட்சமாக உயரும். மேலும் 3 ஆண்டுகள் முதலீடு தொடருமானால், அவர் ஒரு கோடி ரூபாயைப் பெறலாம்.

News November 8, 2024

Recipe: முந்திரி கேக் செய்யலாம் வாங்க!

image

முந்திரி பருப்பை (500g) 6 மணிநேரம் நீரில் ஊறவைத்து, நைஸாக பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு, முந்திரி பேஸ்ட்டை கொட்டவும். பின் அதனுடன் பால், ஏலக்காய், சர்க்கரை (150g) சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு இந்த கலவை வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் அதை துண்டுகளாக வெட்டினால் சுவையான முந்திரி கேக் ரெடி.

News November 8, 2024

ALERT: ஆன்ட்ராய்டு போன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

image

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம்பகமில்லாத தளத்தில் இருந்து செயலி ஏதேனும் பதிவிறக்கம் செய்கையில், TOXICPANDA என்ற செயலியும் ரகசியமாக பதிவிறக்கம் ஆவதாகவும், அந்த செயலி மூலம் மொபைல் போனை கட்டுக்குள் கொண்டு வரும் மர்மநபர்கள், ரகசியமாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுவதால் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளனர். SHARE IT.

News November 8, 2024

ராகு, கேது தோஷமா? இன்று இந்த வழிபாடு செய்யுங்க

image

வெள்ளியன்று துர்க்கையை வழிபட்டால் தீராத துன்பமும் தீரும் என ஆன்மிகம் கூறுகிறது. அதாவது, வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எந்த பிரச்னை என்றாலும் தூசு போல விலகி ஓடும் என்றும், பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஜாதகத்தில் ராகு, கேது பிரச்னை இருப்பின் துர்க்கை வழிபாடு மூலம் நிவர்த்தி ஆகும் எனவும் சொல்லப்படுகிறது. SHARE IT.

News November 8, 2024

நாளையும் மின் கட்டணம் செலுத்தலாம்

image

தமிழக மின் வாரிய அலுவலகங்களுக்கு 2&4வது சனிக்கிழமைகள் எப்போதும் விடுமுறையாகும். தீபாவளியையொட்டி, NOV.1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் வகையில், 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. அதனால், மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று மின் கட்டணம் செலுத்துவோர் நாளையும் செலுத்தலாம். 40% பயனர்கள் நேரிலே மின் கட்டணம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2024

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் முறை (1/2)

image

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அரசு மற்றும் தனியார் ஹாஸ்பிடல்களில் அனைத்து வித சிகிச்சைகளையும் இலவசமாக பெறும் வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை மத்திய அரசு விரிவாக்கம் செய்துள்ளது. இத்திட்டத்தில் சேர முதியோர் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கு காணலாம். https://beneficiary.nha.gov.in என்ற வலைதளம் மூலமோ (அ) ‘ஆயுஷ்மான்’ செயலி மூலமோ விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!