India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று 2016 நவ. 8இல் மோடி அறிவித்தார். இதையடுத்து, அந்த நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய அரசு அவகாசம் அளித்தது. புழக்கத்தில் இருந்த கருப்புப் பணத்தை ஒழிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகின்றன. இந்நடவடிக்கையின்போது நீங்கள் சிரமத்தை எதிர்கொண்டீர்களா? உங்கள் அனுபவத்தை கீழே பதிவிடுங்கள்.
2025 பிப்ரவரியில் PAKஇல் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் IND அணியின் ஆட்டங்கள் மட்டும் UAEஇல் நடத்த PCB சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. IND கிரிக்கெட் அணியை PAK செல்ல இந்திய அரசு அனுமதிக்காத பட்சத்தில், துபாய் அல்லது ஷார்ஜாவில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2023இல் பாக்.கில் நடந்த Asia Cup தொடரில் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெற்றன.
தவறவிட்ட ரயிலை மீண்டும் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இன்னும் ரயில் நிலையத்திலேயே நிற்கிறேன் என நடிகர் சூர்யா கூறியுள்ளார். ஹைதராபாத்தில் ‘கங்குவா’ பட புரோமோஷன் நிகழ்வில் பேசிய அவர், ஒரு நாள் கண்டிப்பாக ரயிலில் ஏறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். ராஜமெளலி இயக்கவிருந்த படத்தில் கால்ஷீட் காரணமாக நடிக்க தவறியதையே அவர் இப்படி சுட்டிக்காட்டியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கமலா ஹாரிஸூக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தலில் துடிப்புடன் போட்டியிட்டதற்கு வாழ்த்துகள். பைடன் நிர்வாகத்தின்கீழ் இந்தியாவும் அமெரிக்காவும் உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் தங்களது ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன. ஜனநாயக விழுமியங்களுக்காக பகிரப்பட்ட நமது அர்ப்பணிப்பு, இருநாடுகளின் நட்பை வழிநடத்தும் என்றும் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத்தேர்தல் கூட்டணி தொடர்பாக VCK தலைவர் திருமாவளவன் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். திமுக கூட்டணியை சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாண்டமஸ் என்பதற்கு தமிழில் ‘நாங்கள் கட்டளையிடுகிறோம்’ என்று பொருள். கடமையைச் செய்ய மறுக்கும் (அ) தவறிய அரசாங்கம், அரசு அதிகாரிகள், கீழமை நீதிமன்றங்கள், ஆணையங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோருக்கு கட்டளை ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யும் மனு Writ of Mandamus எனப்படுகிறது. உயர் நீதிமன்றம் (அ) உச்ச நீதிமன்றத்தில் ரிட் மாண்டமஸ் மனுவைத் தாக்கல் செய்யலாம்.
2026 கூட்டணி அரசில் பாமக அங்கம் வகிக்கும் என விசிகவை மனதில் வைத்தே அன்புமணி கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, தவெக (அ) அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என சொல்லப்படுகிறது. அப்போது விசிக இல்லாத திமுக (அ) தவெக (அ) அதிமுக கூட்டணியில் சேர்ந்து அரசில் அங்கம் வகிக்கும் திட்டத்துடன் அன்புமணி இப்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.
மத்திய அரசின் தேசிய கனிமவள வளர்ச்சி நிறுவனத்தில் (NMDC) 153 காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மைனிங் 56, எலெக்ட்ரிகல் 44 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு, nmdc@jobapply.in இணையதளத்தில் அக்.21 முதல் நடைபெறுகிறது. இதற்கு நாளை மறுநாள் இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
சீனாவின் ஆதரவோடு இயங்கி வரும் ஆசியா & பசிபிக் நாடுகளின் வர்த்தக கூட்டமைப்புகளில் இந்தியா இணைய வேண்டும் என நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதில் இணைவதால், இந்திய உற்பத்தித்துறை வலுப்பெறும் எனக் கூறிய அவர், நாட்டின் ஏற்றுமதியில் 40% பங்கு வகிக்கும் MSME நிறுவனங்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்றார். உள்நாட்டு வணிகம் பாதிக்கப்படும் என்பதால் முன்பு இந்தியா, RCEPஇல் இணைய மறுத்தது.
விஜய்யின் புதிய படத்தில் நடிக்க சத்யராஜ் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் தலைவா, மெர்சல் படங்களில் சத்யராஜ் ஏற்கெனவே நடித்துள்ளார். ஆதலால் புதிய படமான “தளபதி-69” இல் நடிக்க சத்யராஜை படக்குழு அணுகியுள்ளது. ஆனால், தவெக கட்சியை ஆரம்பித்து அரசியல்வாதியாக விஜய் மாறியதை சுட்டிக்காட்டி, அவருடன் கருத்து வேறுபாடு இருப்பதால் நடிக்க முடியாதென சத்யராஜ் கூறி விட்டதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.