news

News November 8, 2024

ஓடிடியில் வெளியானது வேட்டையன்

image

ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம், அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஞானவேல்ராஜா இயக்கிய அந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியான அந்தப் படம் இதுவரை ரூ.250 கோடி வசூலித்துள்ளது. நீங்கள் வேட்டையன் பார்த்து விட்டீர்களா? படம் எப்படி இருக்கு? கீழே கமெண்ட் பதிவிடுங்க.

News November 8, 2024

வெங்காயம் விலை கிலோ ₹130ஆக உயர்வு

image

வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ₹60க்கு விற்கப்பட்டு வந்த வெங்காயம், இன்று ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ₹130 வரை விற்பனையாகி வருகிறது. வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 8, 2024

DARK NET தளத்தில் 3.1 கோடி பேரின் தரவுகள் கசிவு

image

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3.1 கோடி வாடிக்கையாளர்களின் தரவுகள், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்படும் DARK NET தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் எண், மொபைல் நம்பர், வருமான விவரம், முகவரியை மர்ம நபர்கள் வெளியிட்டு, விற்பனைக்கு ரெடி என பதிவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கசிவு குறித்து விசாரித்து வருவதாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது.

News November 8, 2024

மாடுகள் கடவுள், சாலையில் விடாதீங்க.. நிக்கி திடீர் பாசம்

image

மாடுகள் கடவுள், அவற்றை சாலையில் விட வேண்டாம் என நிக்கி கல்ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாடுகளை வளர்ப்போர், அவற்றை சாலையில் விடுவதை பார்க்கையில் கஷ்டமாக இருப்பதாகவும், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மீது மட்டுமல்லாமல் அனைத்து விலங்குகள் மீதும் கருணை காட்ட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீங்கள் மாடு வளர்க்கறீங்களா? அதை எங்கு விட்டுள்ளீர்கள்? கீழே பதிவிடுங்க.

News November 8, 2024

ரூ.8,783 கோடியை அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரர்கள்

image

நாட்டின் முன்னணி கோடீஸ்வரர்கள் 203 பேர் 2024 நிதியாண்டில் ரூ.8,783 கோடி நன்கொடை அளித்துள்ளனர். 2023இல் அளித்த ரூ. 8,445 கோடியுடன் ஒப்பிடுகையில் 4%மும், 2023இல் அளித்த ரூ.5,623 கோடியுடன் ஒப்பிடுகையில் 55%மும் இது அதிகமாகும். கிருஷ்ணா சிவுகுலா, IIT MADRAS-க்கு ரூ.228 கோடி நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை அளிக்கும் வழக்கம் உங்களுக்கு உண்டா? அப்படியெனில் கீழே பதிவிடுங்க.

News November 8, 2024

கமலுக்கு NO.. சீமானுக்கு YES

image

தவெக தலைவர் விஜய் அரசியலில் களமிறங்கியது முதல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில், இன்று சீமானின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் பிறந்த நாளுக்கும் விஜய் வாழ்த்து கூறியிருந்தார். ஆனால், நேற்று மநீம தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

News November 8, 2024

Recipe: வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி?

image

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை வதக்கி, எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே கடாயில் கடலைப்பருப்பு, வெங்காயம், உளுந்து, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். ஆறியதும் மிக்சி ஜாரில் இக்கலவையை சேர்த்து, வெண்டைக்காயையும் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் கடுகு, கருவேப்பிலை தாளிப்பு சேர்த்தால் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார்.

News November 8, 2024

ODIயில் இருந்து ஓய்வு பெறும் ஆப்கான் வீரர்!

image

AF வீரர் முகமது நபி அடுத்தாண்டு பாக்.கில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ACB தெரிவித்துள்ளது. 2009 ஆண்டு AF அணி விளையாடிய முதல் ODIயில் பங்கேற்ற அவர், இதுவரை 165 போட்டிகளில் 3,549 ரன்களும், 171 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 2019இல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

News November 8, 2024

Cooking Tips: என் சமையல் அறையில்…

image

➤தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் அதன் ருசி மேலும் கூடும். ➤உளுந்து & அரிசியுடன் 5-6 சோயா பீன்ஸை ஊற வைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும். ➤ராகி போன்ற சிறுதானியங்களில் வேப்பிலையை கலந்து வைத்தால் நீண்ட நாட்கள் வண்டு பிடிக்காமல் இருக்கும். ➤சிறிதளவு வெல்லம் சேர்த்து கருணைக்கிழங்கை வேகவைத்தால், வெகு சீக்கிரம் பஞ்சு போல் வெந்துவிடும்.

News November 8, 2024

சீமானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்

image

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிட கொள்கையை தூக்கி பிடிப்பது யாராக இருந்தாலும் தனக்கு எதிரி என விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார். எனினும் சீமானை இகழ்ந்து பேசக்கூடாது என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று விஜய் தனது x பதிவில், சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!