India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுக்க முடியாத கையறு நிலையும் கண்ணீருமாக நின்றபோது, அறச்சீற்றத்தில் கிளர்ந்த இளைஞர்களின் ஒருங்கிணைப்பை செய்த, அந்த ஒற்றைக் குரல்தான், சீமான். நாதக அரசியல் கட்சியாக உருவாகி, தேர்தல் பல சந்தித்து, இயக்கத்தில் அதிர்வுகள் ஏற்பட்ட போதும், இன்றுவரை கட்சியை தலைமையேற்று உயிர்ப்புடன் நடத்தி வருகிறார். தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக திகழும் சீமானுக்கு இன்று பிறந்தநாள்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
பாமக 10 நாட்களில் கூட்டணியை மாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேசி வந்த பாமக 10 நாட்களில் கூட்டணியை மாற்றிவிட்டதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் தற்போது கூட்டணி குறித்து பேசுவது வீண் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று 10 மணிக்கு <<14558020>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ஈரான் 2) Bachelor of Dental Surgery 3) அருந்ததி ராய் 4) 8 விருதுகள் 5) பற்களே இல்லை 6) அம்மீட்டர் 7) க, ச, ட, த, ப, ற 8) மீன்களைப் பற்றிய ஆய்வுத்துறை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
விசிக, காங்கிரஸ், பாமக, தவெக கட்சிகள் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பற்றி தொடர்ந்து பேசி வருகின்றன. ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி ஆட்சி பற்றி இதுவரை பேசவில்லை. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அதுபற்றி பேச இது நேரமில்லை என்றும், தேர்தல் நேர கூட்டணியின்போதே பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இஸ்லாமியர் குறித்து அவதூறு கருத்துகள் உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம். முன்னதாக SDPI அமைப்பினர் நேற்று கமல் வீட்டை முற்றுகையிட்டு, அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் செய்தனர். படம் பார்த்தீர்களா? உங்க கருத்து?
இந்தியாவை GREAT POWER என்று ரஷ்ய அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவை இயற்கையான கூட்டாளி, பல்லாண்டு நட்பு நாடு என்றும் அவர் கூறியுள்ளார். உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று இந்தியா என்றும், அந்நாட்டுடன் அனைத்து துறைகளிலும் உறவை வலுப்படுத்தி வருவதாகவும், இரு நாட்டு நட்புக்கு பிரமோஸ் ஏவுகணையே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கும் படம் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அருண்விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக நித்தியா மேனன் மீண்டும் நடிக்க உள்ளார்.
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்தார். அருந்ததியினருக்கான 3% உள் ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யக்கோரி அவர் ஆளுநரிடம் மனு அளித்தார். நேற்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவரை, போலீசார் தடுத்ததால் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆதரவாளர்களுடன் கைதான நிலையில், இன்று ஆளுநரை சந்தித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட், மனைவி ஜெஸிகா தம்பதிக்கு 2ஆவது குழந்தை பிறந்துள்ளது. 2023இல் திருமணம் செய்த அவர்களுக்கு ஏற்கெனவே மிலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ஹாரிசன் ஜார்ஜ் என பெயரிட்டுள்ளனர். குடும்பமாக 4 பேரும் எடுத்த படம் வைரலாகி வருகிறது. IPLஇல் SRH அணிக்காக விளையாடும் டிராவிஸூக்கு TIGER என்ற செல்லப் பெயரும் உண்டு.
Sorry, no posts matched your criteria.