news

News October 29, 2025

மக்கள் நாயகன் காலமானார்.. அமைச்சர் இரங்கல்!

image

தென் மாவட்டங்களில் ‘மக்கள் நாயகன்’ என அழைக்கப்பட்ட <<18127223>>Dr.ராஜசேகர்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழை மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட சேவைகள் நம் அனைவரது மனதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் எனவும் புகழாரம் சூட்டினார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ₹20 – ₹50 வரை மட்டுமே பீஸ் வாங்கி கொண்டு ஏழைகளுக்கு சிகிச்சை அளித்த Dr.ராஜசேகர் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News October 29, 2025

IND vs AUS: மழை குறுக்கிடுமா?

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 போட்டி இன்று தொடங்குகிறது. ODI தொடரை 2- 1 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில், மழை அச்சுறுத்தல் உள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடைபெறும் போட்டியில், 25% வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

News October 29, 2025

அதிமுகவில் இணைந்தனர்.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி

image

கரூரில் EX அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக்கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். கடந்த 9-ம் தேதி கரூரை சேர்ந்த ADMK நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தனது SM-ல் பதிவிட்டிருந்தார். உதவி செய்வதாக அழைத்து சென்று திமுக துண்டு போட்டு போட்டோ எடுத்ததாகவும், அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகவும் ADMK தரப்பு புதிய போட்டோ வெளியிட்டுள்ளது.

News October 29, 2025

அப்புறம் எதுக்கு இந்த ஆதார்?

image

பேங்க் அக்கவுண்ட் வேலை செய்யாது, ரேஷனில் பொருள் கிடைக்காது என எச்சரிக்கை செய்து, ஆதாரை எல்லா அடையாள சான்றுகளுடனும் இணைக்க வைத்தனர். ஆனால், தற்போது ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே, அதை குடியுரிமை, DOB, வசிப்பிடம் போன்றவற்றுக்கு உறுதியான சான்றாக பார்க்கப்படாது என ECI விளக்கமளித்துள்ளது. அப்போது ஏன் ஆதாரை வலுக்கட்டாயமாக இணைக்க வைத்தீர்கள் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்புகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News October 29, 2025

மின்சார பஸ்களால் அரசுக்கு நஷ்டமா? அமைச்சர் விளக்கம்

image

மின்சார பஸ்கள் இயக்கத்தை தனியாருக்கு வழங்கியதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் மின்சார பஸ்ஸின் விலை அதிகம் என்பதால் தனியார் மூலம் கொள்முதல் செய்ததாக அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை என்ற புரிதல் இல்லாமல் அதிமுக பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News October 29, 2025

GMail-ல் தப்பா மெயில் அனுப்பிட்டீங்களா? இதோ Solution

image

GMail-ல் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்யமுடியும். இதற்கு, ➤Desktop-ல் உள்ள Gmail-ஐ Login பண்ணிக்கோங்க ➤Settings ஆப்ஷனுக்கு சென்று, General Settings-ஐ க்ளிக் செய்யவும் ➤அதில் ‘Undo Send’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதில் 30 Seconds என டைம் செட் பண்ணிக்கோங்க. இவ்வாறு செய்தால், நீங்கள் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்ய உங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். பலருக்கும் பயனளிக்கும், SHARE THIS.

News October 29, 2025

சற்றுமுன்: வெள்ளி விலை மீண்டும் ₹1,000 உயர்ந்தது

image

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(அக்.29) மீண்டும் ₹1,000 உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹166-க்கும், பார் வெள்ளி ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் சரிந்து வந்த வெள்ளியின் விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளதே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். வெள்ளி விலை உயர்வால் அதில், முதலீடு செய்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து?

News October 29, 2025

Gmail யூஸர்களே.. இத உடனே மாத்துங்க!

image

183 மில்லியனுக்கும் அதிகமான G-mail, Yahoo, Outlook அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது. இதனை ஆஸ்திரேலியாவை சேர்ந்த CyberSecurity வல்லுநர் ட்ராய் ஹன்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயனர்கள் தங்களின் G-mail, Yahoo, Outlook அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் உடனே பகிருங்கள்.

News October 29, 2025

BREAKING: அமைச்சர் நேரு கைதாகிறாரா?

image

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கப்பட்டுள்ளதாக ED கூறியுள்ளது. அமைச்சர் நேரு, அவரது சகோதரர் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ED கடிதம் எழுதியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி சிறை சென்றார். அதே பாணியில் நேரு கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News October 29, 2025

‘DUDE’ படம் அருவருப்பா இருக்குது: மோகன் ஜி

image

இன்னொருத்தருக்கு பிறந்த குழந்தைக்கு, ஹீரோ தன்னோட இனிஷியல் போட்டுக்க, அவங்க வீட்ல பர்மிஷன் கொடுக்கிறத பார்க்கும்போது அருவருப்பா இருக்கு என ‘Dude’ படம் குறித்து மோகன் ஜி தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்த தலைமுறைக்கு தவறான உதாரணம் என குறிப்பிட்ட அவர், மிகவும் முற்போக்காக செல்கிறோம் என்ற நினைப்பில் இப்படி ஒரு படத்தை எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். உங்க கருத்து என்ன?

error: Content is protected !!