India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் கூறியுள்ளது. இது நவம்பர் 11, 12 தேதிகளில் தமிழக பகுதிகளை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள 50 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (நவ.8) நிறைவடைகிறது. Welder பணியில் சேர விரும்புவோர் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ITI (2 ஆண்டு பணி அனுபவம்). சம்பளம்: ₹42,500. வயதுவரம்பு: 30க்குள். விண்ணப்பக் கட்டணம்: ₹250. தேர்வு முறை: திறன் தேர்வு (ஓராண்டு பயிற்சிக்குப் பின் பணி). கூடுதல் தகவலுக்கு இந்த <
கிரிக்கெட்டில் Luck factor எப்போதும் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. இன்று இந்தியா – SA அணிகள் மோதும் டி20 போட்டி நடக்கும் டர்பன் மைதானம் கடந்த சில காலமாக SA அணிக்கு ராசியில்லாத மைதானமாக உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கு SA விளையாடிய கடைசி 3 டி20 ஆட்டங்களில் அந்த அணி தோற்றது. அதே நேரத்தில், இந்தியாவிற்கு எதிராக இங்கு நடைபெறவிருந்த கடைசி டி20 ஆட்டம் மழையால் ரத்தானது.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும் வகையில் நவ.1ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமையான நாளை, வழக்கம்போல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய மோசடி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக கூறியபடி, கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பழைய ₹500, ₹1000 நோட்டுகளை ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த இந்த நாள் வரலாற்றில் கருப்பு நாள் என்றார். 2016 நவ.8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. IND கிரிக்கெட் அணியை PAK செல்ல இந்திய அரசு அனுமதிக்காத பட்சத்தில், துபாய் அல்லது ஷார்ஜாவில் போட்டிகளை நடத்த பாக். சம்மதம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்புக்காக பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த 4 விஷயங்களை செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்படுவதுடன் கைது வரை செல்ல நேரிடும். *ஆபாச போட்டோ, வீடியோவை பகிர்வது. *தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவது. *குழந்தைகள் ஆபாச போட்டோ, வீடியோ ஷேர் செய்வது. *பிறரது புகைப்படத்தைப் பகிர்ந்து அவதூறு பேசுவது.
நடிகை ரம்யா பாண்டியன் பிரபல யோகா பயிற்சியாளர் லோவெல் தவானை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட தவான் யோகா பயிற்சியாளர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார். இந்த ஜோடிக்கு பெற்றோர், உறவினர் முன்னிலையில் ரிஷிகேஷில் சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடந்தது. Nov.15ல் சென்னையில் வரவேற்பு நடக்க உள்ளது.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். ஆளுநர் ரவியை சந்தித்த பின் பேசிய அவர், உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதால், தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தீண்டாமை கொடுமை குறித்து ஆளுநரிடம் முறையிட்டதாகவும் கூறினார்.
ரூ.2,000, ரூ.1,000 நோட்டு நாம் பார்த்து இருப்போம். ரூ.10,000 நோட்டை இளம்தலைமுறையினர் பார்த்து இருக்க வாய்ப்பில்லை. சுதந்திரத்திற்கு முன்பு, 1938இல் RBI ரூ.10,000 நோட்டை வெளியிட்டது. 1946இல் அந்நோட்டை பிரிட்டிஷார் செல்லாது என அறிவித்தனர். ஆனால், 1954இல் சுதந்திர இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1978இல் ரூ.5,000 நோட்டுடன் சேர்த்து அந்நோட்டும் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.