news

News November 8, 2024

கடைகளும் தமிழ் பெயர்களும்

image

➤Traders – வணிக மையம் ➤Corporation – நிறுவனம் ➤Agency – முகவாண்மை ➤Printers – அச்சகம் ➤Center – மையம் ➤Emporium – விற்பனையகம் ➤Stores – பண்டகசாலை ➤Shop – அங்காடி ➤Showroom : காட்சியகம் ➤General Stores – பல்பொருள் அங்காடி ➤Travel agency – சுற்றுலா முகவாண்மையகம் ➤Electricals – மின்பொருள் அங்காடி ➤Repairing Center – சீர்செய் நிலையம் ➤Jewellers – நகையகம்
➤Offset printers – மறுதோன்றி அச்சகம்.

News November 8, 2024

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதா? HC அதிருப்தி

image

சிறை காவலர்களை வீட்டு வேலைக்கு உயரதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள், சிறை காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனரா? என விசாரணை நடத்துமாறு, உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலமுறை இது தொடர்பான உத்தரவிட்டும், அதிகாரிகள் அதனை கடைபிடிக்க மறுத்து வருவதாகவும், இதை ஏற்க முடியாது எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

News November 8, 2024

கல்வி உதவித் தொகை வேண்டுமா? உடனே APPLY

image

தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும்படி நலவாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. Pre-KG – 12 வரை பயிலுவோருக்கு ரூ.1,000- ரூ.12,000 வரை உதவித் தொகை அளிக்கப்படுகிறது. விண்ணப்பத்தை நல வாரிய அலுவலகம் (அ) www.lwb.tn.gov.inஇல் பெற்று பூர்த்தி செய்து ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை -6′ முகவரிக்கு டிச.31க்குள் அனுப்ப வேண்டும்.

News November 8, 2024

“கங்குவா” படத்திற்கு தடையில்லை

image

நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ₹55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனம் மனு செய்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முழு தொகையையும் ரிலையன்ஸ்-க்கு இன்று செலுத்தப்பட்டதாக கூறியதை அடுத்து, படத்திற்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 8, 2024

2026 தேர்தல்: 25 தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக?

image

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் வரை கேட்க விசிக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என அறிவித்துள்ள திருமாவளவன், தமிழகம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது போல் அல்லாமல், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப்பெற அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 8, 2024

தினமும் எத்தனை பாதாம் சாப்பிடலாம் தெரியுமா?

image

தினமும் எத்தனை பாதாம் சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர். பெரியவர்கள் 20-25 சாப்பிடலாம். இது இதயத்துக்கு நல்லது என்றும், சிறார்கள் 10 வரை மட்டுமே பாதாம் சாப்பிட வேண்டுமென்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கையை விட அதிகமாக பாதாம் சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்னை, உடல் எடை அதிகரிப்பு, செரிமான பிரச்னை ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

News November 8, 2024

வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா: புதின் விருப்பம்

image

வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் என ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், அதிவேக பொருளாதார வளர்ச்சி, பண்டைய கலாசாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் இந்தியாவில் சிறப்பாக உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இந்திய ராணுவத்தில் ரஷ்ய ராணுவ உபகரணங்கள் அதிக அளவில் உள்ளதே இருநாடுகளுக்குமான நட்பின் வெளிப்பாடு என்றார்.

News November 8, 2024

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தனுஷ்

image

தனுஷின் D55 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தப் பூஜையில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News November 8, 2024

பாம்பு விஷத்துக்கே டாட்டா காண்பிக்கும் 4 விலங்குகள்!

image

இந்த 4 விலங்குகளை எந்த பாம்பின் விஷமும் ஒன்றும் செய்யாது. 1) கீரிப்பிள்ளை. பாம்பு விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி கீரிக்கு உண்டு. 2) ஹனி பேட்ஜர். இதுதான் உலகிலேயே துணிச்சலான மிருகம். இதையும் பாம்பின் விஷம் ஒன்றும் செய்யாது. 3) கழுகு. இதற்கு பாம்பு விஷத்தை முறியடிக்கும் ஆற்றலை, இயற்கையே கொடுத்திருக்கிறது. 4) ராஜநாகம். எந்த பாம்பின் விஷமும் ஏறாது. அதனால்தான், இது மற்ற பாம்புகளை சாப்பிடுகிறது.

News November 8, 2024

BJPயில் இருந்து விலகிவிட்டேன்: எஸ்.வி.சேகர்

image

பாஜகவில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அக்கட்சியில் இருப்பதால், ஒரு பலனுமில்லை. தமிழக பாஜகவை நம்புவது வீண் என்று சாடிய அவர், பிராமணர்களுக்கு திமுக நல்லது செய்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பரப்புரை செய்வேன் எனவும் அறிவித்துள்ளார். சமீபகாலமாக, அண்ணாமலை மற்றும் அவரின் தலைமையும் விமர்சித்து வந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!