news

News November 8, 2024

IND Vs SA T20: இந்தியா பேட்டிங்

image

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இன்று டர்பனில் முதல் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கவுள்ளனர். வேகப்பந்துக்கு ஆடுகளம் அதிகம் ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது.

News November 8, 2024

ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போவார்: மஸ்க் கணிப்பு

image

கனடா PM ஜஸ்டின் ட்ரூடோ, காணாமல் போவார் என தொழிலதிபர் எலான் மஸ்க் கணித்துள்ளார். X தள பயனாளர் ஒருவர், அவரை டேக் செய்து ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், ட்ரூடோவிடம் இருந்து கனடா விடுபட உங்கள் உதவி தேவை என கேட்டிருந்தார். இதற்கு, வரும் தேர்தலில் அவர் காணாமல் போவார் என மஸ்க் பதிலளித்துள்ளார். கனடாவில் 2025 அக்டோபருக்குள் PM தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் இந்தியாவை ட்ரூடோ பகைத்துக்கொண்டார்.

News November 8, 2024

BREAKING: கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்

image

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு மலையில் இருந்து இறங்கும்போது அவரது உயிர் பிரிந்தது. அதிமுக பிளவுபட்டபோது ஓபிஎஸ் அணியில் இருந்த அவர், கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். அவருக்கு சமீபத்தில் திமுக செய்தித் தொடர்புத் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2024

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த SK!

image

இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக சில தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய SK, ‘அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கும் கூலி படத்திற்கும் இருக்கும் ஒரே தொடர்பு நான் ரஜினியின் ரசிகன் என்பது மட்டும் தான். அந்த படத்தில் நடிக்கவில்லை’ எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

News November 8, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, கோவை, மதுரை, தேனி, குமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, வெளியே இருப்போர் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும்.

News November 8, 2024

12 தமிழக மீனவர்கள் விடுதலை

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது. நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை அனைவரையும் மீண்டும் எல்லை தாண்டி வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீண்டும் பிடிபட்டால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.

News November 8, 2024

புரோஸ்டேட் கேன்சரின் 5 அறிகுறிகள்..!

image

இளைஞர்கள் மத்தியில் <<14563035>>புரோஸ்டேட் கேன்சர்<<>> அதிகரிக்க உடல் பருமன் மிக முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முழுமையாக சிறுநீர் கழித்த உணர்வு இல்லாதது, சிறுநீர் கழிக்கும் போதும் விந்து வெளியேறும் போதும் ஆண் உறுப்பில் எரிச்சலான உணர்வு, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஆணுறுப்பு எழுச்சி அடைவதில் சிக்கல், சிறுநீர் – விந்துவில் ரத்தம் வருவது போன்றவை புரோஸ்டேட் கேன்சரின் அறிகுறிகள்.

News November 8, 2024

நிலம் வழங்கியவர்களை சந்திக்கும் விஜய்

image

மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களை கௌரவிக்க TVK தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27இல் விக்கிரவாண்டியில் TVK மாநாடு நடைபெற்றது. மாநாட்டு திடல் அமைக்க 80 ஏக்கர் மற்றும் வாகனங்கள் நிறுத்த 150 ஏக்கர் நிலத்தை அப்பகுதி விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வழங்கினர். இவர்களை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் நேரில் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 8, 2024

ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள்!

image

பங்குச் சந்தையில் ₹5 லட்சத்தை, ‘Fundamental Analysis’ முறைப்படி முதலீடு செய்தால், மாதம் ₹50,000 வரை சம்பாதிக்கலாம் என இணையத்தில் விளம்பரங்கள் வருகின்றன. இந்த ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாமென வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதர முதலீட்டு இனங்களை விட, பங்குச்சந்தை சற்றே கூடுதல் வருவாய் தரக்கூடும் என்பது உண்மைதான். ஆனால், FA முறையில் இன்றைக்கு அல்ல, என்றைக்குமே அதீத வருவாய்க்கு சாத்தியம் இல்லை.

News November 8, 2024

DANGER: இளைஞர்களே.. அடிக்கடி இதை செக் பண்ணுங்க!

image

இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை தாக்கி வந்த பிராஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer), தற்போது இளைஞர்களையும் அதிக அளவில் தாக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்றில் ஷாக் தகவல் வெளியாகியுள்ளது. ஃபாஸ்ட் புட், உடற்பயிற்சியின்மை, இரவில் தூக்கமின்மை போன்ற காரணங்களால் இளைஞர்களிடம் பிராஸ்டேட் கேன்சர் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி பிராஸ்டேட்டை செக் செய்யுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!