news

News November 8, 2024

“என் கட்டை கீழே விழும் வரை”.. துரைமுருகன் நெகிழ்ச்சி

image

தனது சொந்த தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார். அவர் பேசுகையில், “எப்படி சார் ஒரே தொகுதியில் வெற்றி பெறுகிறேன் என என்னிடம் சிலர் கேட்கிறார்கள். நான் இதை தொகுதியாக பார்க்கவில்லை. கோயிலாக பார்க்கிறேன். மக்களை தெய்வமாக நினைக்கிறேன். என் கட்டை கீழே விழும் வரை காட்பாடி மக்களுக்காக உழைப்பேன். இதுதான் எனது ஒரே ஆசை” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

News November 8, 2024

அஜித்தை பாராட்டி பேசிய சத்யராஜ்…

image

திராவிட இயக்க கருத்தரங்கத்தில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் எதிர்ப்பது ஆரியத்திற்கு உடன்போவது தான் என்பது என் உடன்பாடு என்றார். மேலும், ஊர் ஊராக பைக்கில் செல்லும் அஜித் பதிவிட்டார்…சம்மந்தமே இல்லாமல் ஒருவர் மீது கோபம் வர காரணம் மதம் தான் என்பதை குறிப்பிட்டு பதிவிட்டதற்கு என்னுடைய பாராட்டுக்கள் என பாராட்டினார்.

News November 8, 2024

திமுக கூட்டணியை உடைக்க முடியாது: ப.சிதம்பரம்

image

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என ப.சிதம்பரம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என ஆரூடம் கூறிய அவர், திமுக கூட்டணி வலிமையாக உள்ளது என்றார். மேலும், லோக்சபா, ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டுவர முடியாது என்றும் அவர் உறுதிபட கூறினார்.

News November 8, 2024

கட்டிப்பிடிக்க ரூ.7,400 கட்டணம் வாங்கும் பெண்

image

இங்கிலாந்தில் ஒரு பெண் கட்டிப்பிடிக்கவும், ஆறுதல்படுத்தவும் 1 hour-க்கு ரூ.7,400 கட்டணம் வாங்குகிறார் தெரியுமா? ஆம், இங்கிலாந்தின் மான்செஸ்டரை சேர்ந்த அனிகா ரோஸ் என்பவர் ஒரு cuddling expert ஆவார். தனிமையில் உழலும் பலர் ஆறுதலான அணைப்புக்கும், கொஞ்ச நேரம் கம்பெனிக்கும் இவரிடம் வருகின்றனர். இவரின் hugging சிகிச்சையால் ஸ்ட்ரெஸ் குறைவதாகவும், மகிழ்ச்சி அதிகரிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

News November 8, 2024

அரைசதம் விளாசிய சஞ்சு.. வலுவான நிலையில் இந்தியா

image

SA அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங் செய்து வரும் IND அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 5 SIX, 4 FOUR உடன் அரைசதம் ( 57*) விளாசினார். தற்போது Ind 9 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. இதேபோல், விளையாடினால், Ind 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 8, 2024

முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

EX MLA கோவை செல்வராஜ் திடீரென மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன் என ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். திமுகவின் கொள்கைகள், கருத்துகளை விவாதங்கள், மேடை பேச்சுகளில் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். மகனின் திருமணம் முடிந்து மணமக்களுடன் என்னை சந்திக்க வருவதாகக் கூறியவர், மகன் திருமணத்தின்போது மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி வேதனையில் ஆழ்த்தியது எனத் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? அமைச்சர்

image

அதிமுகவை விஜய் விமர்சிக்காததில் உள்நோக்கம் இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக அரசியல் ரீதியாக ஒன்றுமில்லாமல் இருப்பதால் விஜய் விமர்சிக்காமல் கூட இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், விஜய் கட்சியை பார்த்து திமுக பயப்பட எந்த அவசியமும் இல்லை என்றும் கூறியுள்ளார். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது எனவும், மீண்டும் திமுக ஆட்சி அஞ்சாது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

ஆன்லைனில் ரேஷன் அட்டையில் முகவரி மாற்ற (1/2)

image

ஆன்லைனில் ரேஷன் அட்டை முகவரியை எப்படி மாற்றுவது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட் ரேஷன் அட்டை வந்தபிறகு, இந்த நடைமுறையை பொது விநியோகத்துறை எளிமைப்படுத்தி விட்டது. https://tnpds.gov.in/login.xhtml இணையதளம் சென்று, ரேஷனில் இணைத்துள்ள செல் நம்பர், கேப்ட்சா, ஓடிபியை உள்ளிட வேண்டும். பிறகு திறக்கும் பக்கத்தில் முகவரி சான்றுக்கு கேட்கப்படும் ஆவண நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

News November 8, 2024

ஆன்லைனில் ரேஷன் அட்டையில் முகவரி மாற்ற (2/2)

image

முகவரி ஆவண நகலை பதிவேற்றம் செய்ததும், அதை உறுதி செய்து ஓகே கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்ததும், பதிவு செய்த செல்போன் நம்பருக்கு குறிப்பெண் வரும். அதை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு நமது வசிப்பிடம் வந்து அதிகாரிகள் ஆய்வு செய்து கோரிக்கையை ஏற்றதும் குறுஞ்செய்தி வரும். அதை வைத்து நமது கோரிக்கை ஏற்கப்பட்டதா என்பதை நாமே தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை பகிருங்க.

News November 8, 2024

“பெண்களுக்கு ஆண்கள் அளவு எடுக்கக் கூடாது” புது சட்டம்?

image

பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவெடுக்கக் கூடாது; பெண்களுக்கு ஜிம், யோகா பயிற்சிகளை ஆண்கள் அளிக்கக் கூடாது, ஆண்கள் ஹேர் கட் செய்யக் கூடாது, ஸ்கூல் பஸ்ஸில் ஒரு பெண் செக்யூரிட்டியும், பெண்கள் ஆடையகங்களில் பெண் பணியாளரும் கட்டாயம்… இதெல்லாம் என்ன என்கிறீர்களா? பெண்கள் பாதுகாப்புக்காக உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் ஆணையம் செய்துள்ள பரிந்துரைகள். விரைவில் சட்டமாகப் போகிறதாம். இது சரியா? உங்க கருத்து?

error: Content is protected !!