news

News November 9, 2024

ராசி பலன்கள் (9-11-2024)

image

➤மேஷம் – உதவி
➤ரிஷபம் – வரவு
➤மிதுனம் – பயம்
➤கடகம் – நன்மை
➤சிம்மம் – தாமதம்
➤கன்னி – உயர்வு
➤துலாம் – இன்பம்
➤விருச்சிகம் – பரிசு
➤தனுசு – பெருமை ➤மகரம்- ஆதாயம்
➤கும்பம் – புகழ் ➤மீனம் – முயற்சி

News November 9, 2024

ஊ சொல்றியா…சமந்தாவிற்கு போட்டியாக வந்த ஸ்ரீலீலா…

image

புஷ்பா -1 படத்தின் மிகப்பெரிய ஹைலைட் சமந்தாவின் ஊ சொல்றியா.. பாடல் தான். இந்திய அளவில் ட்ரெண்ட்டான இந்த பாடலை அடுத்து, புஷ்பா – 2 படத்தில் யார் அப்படி நடனமாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிச்சின்னி மடத்தோப்பேட்டி பாடலின் மூலம் வைரலான ஸ்ரீலீலா தான் நடனமாடியுள்ளார். அவர் அல்லு அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படமும் லீக்காகி உள்ளது. சமந்தாவிற்கு சரியான போட்டியாக இருப்பாரா ஸ்ரீலீலா…நீங்க சொல்லுங்க

News November 8, 2024

SA அணிக்கு 203 ரன்கள் இலக்கு

image

SA அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய IND 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் 107, திலக் வர்மா 33 ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். தெ.ஆப்., அணியில் Gerald Coetzee மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

News November 8, 2024

ஒரு மாதத்தில் ஆட்சி மாறலாம்: விஜயபாஸ்கர்

image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என ADMK Ex மினிஸ்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், “ஒரு மாதத்தில் கூட மாற்றம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் கைகூடி வரும்; மாற்றம் கைகூடுவதற்கு தெலங்கானா, ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே உதாரணம். அதிமுக நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல; MGR விதைத்து ஜெயலலிதா வளர்த்த விருட்சம்” எனத் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

தூக்கத்தை வரவழைக்கும் 3 பானங்கள்..!

image

1) கெமோமில் டீ: கெமோமில் மலர்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள மூலப்பொருட்கள் நம்மை ஆழ்ந்த தூக்கத்துக்கு கொண்டு செல்லும். ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். 2) மஞ்சள் பால்: காய்ச்சிய பசும்பாலில் 2 சிட்டிகை மஞ்சள் போட்டு, இளஞ்சூட்டில் குடித்தால் தூக்கம் கண்ணை சொக்கும். 3) வலேரியன் டீ. இதையும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதில் உள்ள மூலப்பொருட்கள் தூக்க ஹோர்மோனை தூண்டிவிடும்.

News November 8, 2024

இந்த மாவட்டங்களில் நள்ளிரவிலும் மழை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, குமரி, நெல்லை, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 8, 2024

சமூக அக்கறை கொண்டவர் சூர்யா

image

நடிகர் என்ற அடையாளத்தையும் தாண்டி, சூர்யா ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதர் என Ex அமைச்சர் மனோ தங்கராஜ் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சூர்யாவை சந்தித்தேன். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அவர் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகளுக்கு எனது பாராட்டை தெரிவித்தேன்” என இருவரும் சந்தித்துக்கொண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

News November 8, 2024

சாதித்த சஞ்சு சாம்சன்!

image

T20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 2 முறை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் சதம் (100 ரன்கள் 47 பந்துகள்) விளாசினார். கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்திருந்தார். இதன்மூலம் புதிய சாதனையை சஞ்சு படைத்துள்ளார்.

News November 8, 2024

முதல் முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை..ஏன் தெரியுமா

image

தமிழகத்தின் முக்கிய நீர் தேக்கங்களில் ஒன்றான மேட்டூர் அணை, 90 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலே இருந்துள்ளது. இதனால் அணையில் மண் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளும் இது குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது சுமார் 1 லட்சம் 40 ஆயிரம் யூனிட் மண்டல மண்ணை தூர்வார தமிழக அரசின் நீர்வளத்துறைத் திட்டமிட்டுள்ளது. மேட்டூர் அணை எந்த ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது தெரியுமா..?

News November 8, 2024

டைட்டானிக் ஜாக் தெரியும்: கெத்து சார்லஸ் தெரியுமா?

image

பனிப்பாறை மீது டைட்டானிக் மோதிய நேரம். பயணிகளை கப்பல் ஊழியர்கள் லைஃப் போட்டில் ஏற்றினர். அவர்களில் ஒருவர்தான் சார்லஸ். ஊழியர்கள் படகில் ஏறக்கூடாது என்பதால், பயத்தை போக்க சார்லஸ் விஸ்கியை மூக்கு முட்ட குடித்தார். அப்போது கப்பலும் மூழ்கியது. கடலில் விழுந்தவர்கள் நொடியில் உறைந்து போக, சார்லஸ் குடித்த விஸ்கி, அவரை உறைய விடவில்லை. ஹாயாக நீந்திக் கொண்டிருந்தவரை, மீட்பு கப்பல் காப்பாற்றியது வரலாறு.

error: Content is protected !!