India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶நவ. 9 (ஐப்பசி 23) ▶சனி ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM, 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM, 09:30 PM – 10:45 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: அஷ்டமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ நட்சத்திரம்: திருவோணம் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் முழு சீக்கியர்களும் காலிஸ்தானிகள் இல்லை எனவும், நரேந்திர மோடியை ஆதரிக்காத இந்துக்களும் கனடாவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா அரசு ஆதரவு கொடுப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வந்த நிலையில், ஜஸ்டின் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக இது அமைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
‘கங்குவா’ படத்தில் கார்த்தி கேமியோ கேரக்டரில் வருவது குறித்து சூர்யா Hint கொடுத்துள்ளார். அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து நடிப்பீர்களா என சூர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும், இன்னும் சில நாள்களில் அது தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார். வரும் 14ஆம் தேதி ‘கங்குவா’ ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு நிச்சயமாக இ பாஸ் பெற வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தங்களுடைய பயணிக்கும் வாகனங்களின் பதிவெண், அவர்கள் வரும் நாள், தங்கும் காலஅளவு, தங்குமிடம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து இ-பாஸ் பெறவும் அறிவுறுத்தியுள்ளது.
முதல் T20 போட்டியில் SA அணியை IND அணி அலற விட்டுள்ளது. 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND, 8 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. சாம்சன் 107 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய SA அணியின் பேட்டிங் ஆர்டரை, வருண் சக்கரவர்த்தியும், ரவி பிஸ்னோயும் சிதைத்தனர். தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு SA ஆல் அவுட் ஆனது.
இன்று (நவ.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
* நார்வேயில் மே முதல் ஜூலை வரை, 76 நாட்களுக்கு சூரியன் மறையாது * கோடைகாலத்தில் சுவீடனில் சுமார் 60 நாட்களுக்கு இங்கு சூரியன் மறையாது * கனடாவின் நுனாவட் மற்றும் யூகான் பகுதிகளில் 60 முதல் 100 நாட்களுக்கு சூரியன் மறையாது * அலாஸ்காவின் வடபகுதிகளில் 82 நாட்களுக்கு சூரியன் மறையாது * பின்லாந்தின் வடக்குப் பகுதிகளில் 60 முதல் 70 நாட்களுக்கு சூரிய மறைவே இருக்காது.
நாடு முழுவதும் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோரிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. அதில், அவர்களின் பிள்ளைகள் சோஷியல் மீடியா, ஓடிடி, கேமுக்கு அடிமையாகியுள்ளதாகவும், நாளொன்றுக்கு 6 மணிநேரம் அதிலேயே மூழ்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இப்படி பல மணிநேரம் அதில் மூழ்கியிருப்பதால், எதிலும் ஆர்வமற்று சோம்பேறிகளாக திரிவதாகவும் பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு, கால்நடைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். ஒடிசாவை சேர்ந்த இவர் 2002இல் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானார்.
Sorry, no posts matched your criteria.