news

News November 9, 2024

அப்பா ஆகப்போகும் கே.எல்.ராகுல்

image

கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான ஆதியா ஷெட்டி இருவரும் அடுத்த ஆண்டு தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். சக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். படு மோசமான ஃபார்மில் இருக்கும் ராகுல், இனி செம்ம ஃபார்முக்கு வருவார் என அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

News November 9, 2024

‘‘கருணாநிதி பெயர் வைக்க விரும்பினால்..’’

image

மக்கள் நலனுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், அவசியமற்ற பணிகளுக்கு திமுக அரசு நிதி ஒதுக்குவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கருணாநிதி பெயரில் தேவையற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், முதல்வர் அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க விரும்பினால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.

News November 9, 2024

ரூமியின் பொன்மொழிகள்

image

*உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல. மழைதான் பூக்களை வளர்க்கிறது, இடி அல்ல. *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *உங்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி ஒன்று உள்ளே உள்ளது. அதைத் தேடுங்கள். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.

News November 9, 2024

சர்ச்சைக்கு மத்தியிலும் மாஸ் காட்டும் OLA

image

செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகளை OLA நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அந்நிறுவனம் ₹1,240 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட குறைந்த நஷ்டத்தையும் பதிவு செய்துள்ளது. நஷ்ட அளவீடு ₹524 கோடியில் இருந்து ₹495 கோடியாக குறைந்துள்ளது. EV பைக்குகளின் தரம், சர்வீஸ் குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அந்நிறுவனம் அதிக வருவாயை ஈட்டியுள்ளது.

News November 9, 2024

கம்பீர், ரோஹித்தை கட்டம் கட்டிய BCCI

image

NZ-க்கு எதிரான டெஸ்டில் படுதோல்வி அடைந்த நிலையில், பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோஹித், தேர்வுக் குழு தலைவர் அகார்கர் ஆகியோரிடம் BCCI ரிவ்யூ மீட்டிங் நடத்தியுள்ளது. சுமார் 6 மணி நேரமாக பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. AUS சுற்றுப்பயணத்திற்கு முன் இப்படியா சந்திப்பு நடப்பது வழக்கம் தான் என்றாலும், கம்பீரின் பயிற்சி குறித்து அதிகம் விவாதம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

News November 9, 2024

CM சமோசாவை ஊழியர்கள் சாப்பிட்ட விவகாரம்

image

ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தருக்காக ஆர்டர் செய்யப்பட்ட சமோசாவை ஊழியர்கள் சாப்பிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக CID விசாரணைக்கு உத்தரவிட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை சமோசாவுக்கு என பாஜகவும், ஊடகமும் மடைமாற்றி விட்டதாக சுக்விந்தர் விமர்சித்துள்ளார். அதிகாரிகளின் தவறான நடத்தை குறித்து விசாரிக்கவே உத்தரவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 95 ▶குறள் : பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. ▶ விளக்க உரை: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

News November 9, 2024

பெண்கள் செய்த கொடூரத்தை பாருங்கள்

image

உத்தரபிரதேசத்தில் 5 நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி, 2 பெண்கள் உயிரோடு கொளுத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிறந்து சில நாள்களே ஆன குட்டிகள், சத்தம் போட்டுக் கொண்டே இருந்த ஆத்திரத்தில் ஷோபாவும், ஆர்த்தியும் இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 5ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றனர்.

News November 9, 2024

10 ஆண்டுகள் காத்திருப்பு: சாம்சன் உருக்கம்

image

SA-க்கு எதிரான நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் 107 ரன்களை விளாசினார். ஒரே போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த வீரர், டி20-யில் தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் விளாசிய வீரர் என 2 சாதனைகளை படைத்தார். இந்நிலையில், இந்த ஒரு தருணத்திற்காக 10 ஆண்டுகளாக காத்திருந்ததாக அவர் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும், இந்த தருணத்தில் கால்கள் தரையில் இருக்க வேண்டும் என்பது தெரியும் எனவும் கூறியுள்ளார்.

News November 9, 2024

மெகா அறிவிப்பை வெளியிட்ட OLA

image

அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 20 புதிய இருசக்கர மற்றும் 3 சக்கர EV மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக OLA நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்காக அதன் ரீடெய்ல் கடைகளை 2,000 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு வருடத்திற்கு 3-5 வாகனங்களை அறிமுகம் செய்தாலே, டிமாண்ட்டுக்கு ஏற்றபடி வாகனங்களை உற்பத்தி செய்வது கடினம் என்ற சூழலில், OLA-வின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!