news

News November 9, 2024

காளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகாரத் தலம்!

image

அமுதம் உண்டு சிரஞ்ஜீவித்தன்மை கொண்ட ராகு – கேது தனித் தனியே இல்லாமல் ஒரே உடலுடன் இருப்பதை சண்ட ராகு என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த சண்ட ராகு சந்நிதி கொண்ட திருத்தலம் திருவாரூர் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் கோயிலாகும். காளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகாரத் தலமான இக்கோயிலுக்கு சனிக்கிழமையன்று சென்று வணங்குவோருக்கு நீண்ட ஆயுளும் நிறைவான ஆரோக்கியமும் கிட்டும் என்பது ஐதீகம்.

News November 9, 2024

மாணவர்களிடம் திணிக்க வேண்டாம்: அமைச்சர்

image

மாணவர்களுக்கு எதையும் திணிக்க வேண்டாம் என அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இருப்பதை கற்று கொடுத்தாலே போதும் என தெரிவித்துள்ளார். மேலும், மதிப்பெண்கள் தேவைதான், அதற்காக மதிப்பெண்ணை வைத்து யாருடனும் யாரையும் மதிப்பீடு செய்யக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 9, 2024

BIG BREAKING: பள்ளி- கல்லூரிகள் இன்று செயல்படும்

image

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.9) விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமையான இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும், வழக்கம் போல மாணவர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News November 9, 2024

இந்த பைக் வாங்குறவங்களுக்கு குட் நியூஸ்..!

image

Harley-Davidson பைக்குகளுக்கான வரியை குறைக்க திட்டமிட்டு வருதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது டொனால்ட் டிரம்பின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனால் அந்த பைக்கின் விலை கணிசமாகக் குறையும். இந்தியாவில் அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை குறைத்து, இந்தியா -அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதே டிரம்ப்பின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

News November 9, 2024

ஜோதிகாவுடன் நடிக்க ஆசை: சூர்யா

image

மனைவி ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க விரும்புவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இந்த ஆசை கனவாகவே இருந்து வருவதாகவும், விரைவில் அது நனவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளையில், இருவரும் நடிக்கும் படம், தானாகவே அமைந்ததாக இருக்க வேண்டுமே தவிர, தங்களுக்கு ஏற்ற கதையை உருவாக்க எந்த இயக்குநரிடமும் தான் கூறமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

Alert: இந்த 5 மாவட்ட மக்களே உஷார்..!

image

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், குறைந்தபட்சமாக 25-26°C, அதிகபட்சமாக 32-33°C வெப்பநிலை பதிவாகக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2024

ரம்யா பாண்டியனின் கல்யாண க்ளிக்ஸ்

image

நடிகை ரம்யா பாண்டியன் ‘ஜோக்கர்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் தேசிய விருதை வென்றாலும், ரம்யாவுக்கு பெரிய அளவில் எதிர்காலம் அமையவில்லை. இருப்பினும் மொட்டைமாடி போட்டோஷூட் அவரை மீண்டும் பிரபலமாக்கியது. இந்நிலையில், தனது காதலன் லோவெல் தவானை அவர் நேற்று கரம்பிடித்தார். நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களது திருமண க்ளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

News November 9, 2024

டிரம்பை கொல்ல சதி

image

டொனால்ட் டிரம்பை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக ஈரானைச் சேர்ந்த ஃபர்கத் ஷகேரி (51) என்ற நபர் மீது USA குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த அக்.7ஆம் தேதிக்குள் டிரம்பை கொலை செய்ய ஈரான் ராணுவம் ஷகேரியை பணித்ததாகவும், ஆனால் அதற்கான திட்டங்களை அவர் வகுக்கவில்லை எனவும் USA நீதித்துறை தெரிவித்துள்ளது. சிறு குழந்தையாக USA வந்த அவர் நாடு கடத்தப்பட்ட பின்பு, தற்போது ஈரானில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது.

News November 9, 2024

விஜய் துப்பாக்கி மட்டும் தரவில்லை: SK

image

‘THE GOAT’ படத்தில் விஜய் தன்னிடம் துப்பாக்கியை மட்டும் தரவில்லை, அன்பையும் சேர்த்துதான் தந்தார் என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவ்வளவு பெரிய ஸ்டார், ஒரு இளம் தலைமுறை நடிகருடன் இணைந்து நடித்தது வியப்பாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 20 ஆண்டுகளாக பல சவால்களை சந்தித்து ஸ்டாராக உருவாகியுள்ள விஜய்யின் சாதனையை, யாராலும் தொடக்கூட முடியாது எனவும் கூறியுள்ளார்.

News November 9, 2024

நாள்தோறும் 4 பேரீச்சம்பழம்

image

இயற்கையான சர்க்கரை மூலமான பேரிச்சம்பழம், நார்ச்சத்து நிறைந்தது. எடையை குறைக்க விரும்புவோர் நாள்தோறும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். அதன்படி ஒரு நாளைக்கு 3 முதல் 4 பேரீச்சம்பழங்களை சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துகள் ஆற்றலைத் தரும். 4 பேரீச்சம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் உடல் எடை கூடும் அபாயம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!