news

News November 9, 2024

ராணுவ அதிகாரிகளை சந்தித்த நடிகர் விஜய்

image

நடிகர் விஜய் ராணுவ அதிகாரிகளை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ’விஜய் 69’படத்தின் ஷூட்டிங் சென்னை ஆபீஸர் அகாடமியில் நடைபெற்றது. அப்போது அங்கு இருக்கும் அதிகாரிகள் தங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தனர். உடனே ஓகே சொன்ன விஜய் கிட்டத்தட்ட நூறு அதிகாரிகளின் குடும்பத்துடன் உரையாடி சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

News November 9, 2024

உடனே விண்ணப்பிங்க.. BOB வங்கியில் வேலைவாய்ப்பு

image

BOB வங்கியில் 592 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கு கல்வித் தகுதி, பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ./சி.எம்.ஏ. ஆகும். வயது வரம்பு, பதவியின் தன்மைக்கேற்ப மாறுபடும். அரசு விதிமுறைப்படி 3-5 வயது வரை வயது தளர்வு உண்டு. https://www.bankofbaroda.in/career/current-opportunities இணையதளத்தில் வரும் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News November 9, 2024

மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்: S.B. உத்தரவு

image

பருவ மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி (S.B) உத்தரவிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மின்நுகர்வோரிடம் இருந்து வரும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வலியுறுத்தினார். மின்தடங்கல் ஏற்படும் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

News November 9, 2024

விளையாட்டு துளிகள்

image

➤Chennai Grandmasters: மாஸ்டர்ஸ் பிரிவில் லைவ் ரேட்டிங் தரவரிசையில் அர்ஜூன் எரிகைசி (3.5 புள்ளி) முதலிடத்தை பிடித்தார். ➤World Billiards Championship: இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பங்கஜ் அத்வானி முன்னேறினார். ➤Korean Masters Badminton: காலிறுதியில் ஜப்பானின் டகுமாவை இந்தியாவின் கிரண் ஜார்ஜ் நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். ➤சேப்பாக்கம் மைதானத்தின் ‘அவுட் பீல்டு’ சிறப்பானதென ICC பாராட்டியுள்ளது.

News November 9, 2024

காலை 10 மணி வரை இங்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.

News November 9, 2024

₹1.4 லட்சத்தில் சம்பளம்… மத்திய அரசில் வேலை!

image

NSCL நிறுவனத்தில் காலியாகவுள்ள 188 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பணிகளில் சேர விரும்புவோர் இன்றே விண்ணப்பியுங்கள். கல்வித்தகுதி: ITI (NAC), Diploma, Degree, B.Sc (Agri), MBA. தேர்வு முறை: கணினி தேர்வு, நேர்காணல். வயது: 27-50. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.30 சம்பளம்: ₹24,616-₹1,41,260. கூடுதல் தகவலுக்கு <>NSCL<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News November 9, 2024

T20: இந்திய அணிக்காக அதிக சதமடித்த வீரர்கள்

image

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தொடர்ச்சியாக சதமடித்ததன் மூலம் இந்தப் பட்டியலில் அவர் இணைந்தார். இதில் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா (5) முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் (4), கேஎல் ராகுல் (2), சஞ்சு சாம்சன் (2) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News November 9, 2024

புற்றுநோய் வரக்கூடாதா? இத பண்ணுங்க

image

வாழைப்பழத்தை செயற்கையாக பழுக்க வைக்கப் பயன்படும் கார்பைடால் புற்றுநோய் வரக்கூடும் என தெரியவந்துள்ளது. எனவே இயற்கையான முறையில் பழுத்த பழங்களை கண்டுபிடிப்பது எப்படி என பார்க்கலாம். *தோல்கள் மெல்லியதாகவும், கரும்புள்ளிகளுடனும் இருக்கும். *தண்ணீரில் மூழ்கும். ஆனால் ரசாயனம் பயன்படுத்திய பழங்கள் மிதக்கும். *எல்லா பக்கங்களிலும் சமமாக பழுத்திருக்கும். ரசாயனம் கலக்கப்பட்டது ஆங்காங்கே பழுத்திருக்கும்.

News November 9, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் ஜோ பைடன் அரசின் திட்டத்தை டெக்சஸ் நீதிமன்றம் ரத்து செய்தது. ➤மெக்சிகோவில் லாஸ் ஆர்டிலோஸ் கும்பலால் கடத்தப்பட்ட 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ➤ஆம்ஸ்டர்டாமில் தாக்கப்பட்ட யூதர்களை அழைத்துவர மீட்புக் குழுவை இஸ்ரேல் அரசு அனுப்பியுள்ளது. ➤காசாவில் உயிரிழந்தவர்களில் 70% பேர் பெண்கள், குழந்தைகள் என்று UNHRC தகவல் தெரிவித்துள்ளது.

News November 9, 2024

காலையில் இஞ்சி டீ குடிங்க..!

image

செரிமான பிரச்னை இருப்பவர்கள் காலையில் இஞ்சி டீ குடிக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இஞ்சி டீ குமட்டலைத் தணிப்பதோடு, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் என்கிறார்கள். கொதிக்கும் நீரில் இஞ்சியின் சில துண்டுகளைப் போட்டு, 5-10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டவும். ருசிக்காக தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்தால் நறுமணமான இஞ்சி டீ ரெடி.

error: Content is protected !!