news

News November 9, 2024

பாமகவினருக்கு அன்புமணி வேண்டுகோள்

image

தமிழகத்தில் பாமக ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என்று அக்கட்சியினருக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய ராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது என்றும், கடல் கடந்து வெற்றிகளை குவித்து நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் என்றும் கூறியுள்ளார். கடுமையாக உழைத்து, ஆட்சியை நிறுவுவோம் என வலியுறுத்தியுள்ளார்.

News November 9, 2024

23ஆம் தேதி கிராம சபை கூட்டம்.. TN அரசு உத்தரவு

image

நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

News November 9, 2024

ரிட் செர்ஷோரியராய் என்றால் என்ன?

image

Certiorari என்பதற்கு தமிழில் ‘தெரிவிக்கப்பட வேண்டும்’ என்று பொருள். அதிகார வரம்பை மீறியது (அ) உண்மை & சட்டத்துக்குப் புறம்பானது என்று கருதினாலோ (அ) இயற்கைக்கு மாறாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றாலோ கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, உத்தரவிடும்படி மனு தாக்கல் செய்யலாம். இந்த மனு Writ of Certiorari என அழைக்கப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் செர்ஷோரியராய் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

News November 9, 2024

ஜி.வி-க்கு கிஃப்ட் கொடுத்த SK

image

‘அமரன்’ பட வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் வாட்ச் பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்த ஜி.வி., SK-க்கு நன்றி தெரிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தது.

News November 9, 2024

அந்நிய செலாவணி: ஒரே வாரத்தில் ரூ.21,939 கோடி சரிவு

image

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 5ஆவது வாரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. RBI வெளியிட்ட அறிக்கையில், நவ.1 வரையிலான ஒருவார காலத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.21,939 கோடி வீழ்ச்சி அடைந்து ரூ.57.54 லட்சம் காேடியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.28,690 கோடி வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

News November 9, 2024

மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை.. இளைஞர்களுக்கு குட் நியூஸ்

image

பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 21- 24 வயதுக்குட்பட்ட 1 கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் 12 மாதத்திற்கு PM இன்டர்ன்ஷிப் வாய்ப்பு அளிக்கப்படும். இதன் கீழ் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தை காணும்படி கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT

News November 9, 2024

லோகேஷ் கனகராஜுடன் இணையும் பிரபாஸ்!

image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரபாஸை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’கே.ஜி.எஃப்’ படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து பிரபாஸை வைத்து 3 படங்களை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ’சலார் 2’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம், ’ஹனுமன்’ படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா மற்றொரு படம் என 3 படங்களில் நடிக்க உள்ளதாகத் கூறப்படுகிறது.

News November 9, 2024

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை!

image

புதுச்சேரியிலிருந்து டிச.20 முதல் மீண்டும் விமானச் சேவை துவங்குகிறது. காலை 11.10 மணிக்குப் பெங்களூருவிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம் 12.25-க்கு புதுவை வந்தடையும். பின்னர், மதியம் 12.45-க்கு புறப்பட்டு 2.30-க்கு ஹைதராபாத் சென்றடையும். மதியம் 3.05-க்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.30-க்கு புதுவைக்கும், மாலை 5.10-க்கு புதுவையிலிருந்து புறப்பட்டு மாலை 6.35-க்கு பெங்களூருவுக்கும் சென்றடையும்.

News November 9, 2024

TNPSC குரூப்-2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு!

image

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த செப்.14 ஆம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

News November 9, 2024

Shocking: பெண்ணின் வயிற்றுக்குள் 9 இன்ச் பைப்

image

நொய்டாவில் பெண்ணின் வயிற்றுக்குள் 9 இன்ச் பைப் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரண் நெகி என்பவருக்கு நொய்டா ஹாஸ்பிடலில் ஆபரேஷன் மூலம் கருப்பை கட்டி அகற்றப்பட்டது. வீடு திரும்பிய அவருக்கு வயிறு வலிக்கவே, வேறு ஹாஸ்பிடலில் பரிசோதித்தார். இதில் பிளாஸ்டிக் பைப் இருந்தது தெரிந்ததால் அகற்றப்பட்டது. ஆபரேஷன் செய்த டாக்டர் மீது நெகி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.

error: Content is protected !!