news

News November 9, 2024

BCCI புதிய முடிவு?

image

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விரைவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதில் தோல்வியடைந்தால், பயிற்சியாளர் பதவியை பகிர்ந்தளிக்க BCCI முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட்டுக்கு தனித்தனி பயிற்சியாளரை நியமிக்க BCCI முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை தனித்தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 9, 2024

RAIN ALERT: 7 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 7 நாள்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, 11ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. SHARE IT.

News November 9, 2024

கோலாகலமாக தொடங்கிய ராஜராஜ சோழன் சதய விழா

image

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா இன்று காலை 8.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான இன்று கருத்தரங்கம், 1,039 பேர் பங்கேற்கும் பரத நாட்டியம், பட்டிமன்றம், ‘சதய நாயகன் ராஜராஜன்’ வரலாற்று நாடகம் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகம் நடைபெறும்.

News November 9, 2024

வடித்த கஞ்சியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

image

சோறு வடித்த கஞ்சியை சருமத்துக்கும் கூந்தலுக்கும் பயன்படுத்துவது நல்ல பலன்களை அளிப்பதாக American Chemical Society ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், கஞ்சியில் மிக அதிகளவில் இருக்கும் Peptides புரத அமிலங்கள் இளமை, முடி வளர்ச்சி & எலாஸ்டிக் தன்மைக்கு காரணமான கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் Suntan, Sunburn போன்ற பாதிப்புகளை போக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

News November 9, 2024

தைரியம் இல்லனா பதவியை ராஜினாமா செய்யுங்கள்

image

சட்டப்பேரவை செல்ல ஜெகன் மோகனுக்கு தைரியம் இல்லையென காங்., மாநிலத் தலைவர் ஷர்மிளா கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பேரவைக்கு செல்ல தைரியம் இல்லாதவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இதனிடையே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மோடி பிரதமராக இருப்பது மகிழ்ச்சி எனவும், ஆனால் அவரது ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் வளர்ச்சி இல்லை என்றும் விமர்சித்தார்.

News November 9, 2024

டிரம்புக்கு எதிராக ‘No Sex Strike’

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரியில் பதவியேற்க உள்ளார். அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கருக்கலைப்பு, பெண்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படும் எனக் கூறி கொரிய பெண்ணியவாத ‘4B’ இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டேட்டிங், No Sex Strike-ல் ஈடுபடப் போவதாகக் கூறி சிலர் பெண்கள் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

News November 9, 2024

ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகும் சிறார்கள்

image

ஃபோன்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில் சமூக வலைதளங்கள், Online games, OTT தளங்களுக்கு சிறார்கள் அடிமையாகிவிட்டதாக 66% பேர் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களும் பிள்ளைகள் அவர்களை தொல்லை செய்யாமல் இருக்க ஃபோனை அவர்களிடம் கொடுக்கிறார்கள். அதை மாற்றி வெளியில் விளையாட அனுப்பினால் குழந்தைகள் வாழ்க்கை பாடத்தை கற்க முடியும்.

News November 9, 2024

கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக்!

image

நீரில் ஊற பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சம் ஆகியவற்றை சிறிது பால் சேர்த்து அரைக்கவும்.
கேழ்வரகை 6 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து அதிலிருந்து பால் எடுக்கவும். அதை 10 நிமிடங்கள் மிதமான தீயில் காய்ச்சவும். அதனுடன் அரைத்த பாதாம் கலவை, ஏலக்காய் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான & ஆரோக்கியமான கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் ரெடி.

News November 9, 2024

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை!

image

டர்பனில் நேற்று நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் டர்பன் மைதானத்தில் 100% வெற்றி பெற்ற அணியாக இந்திய அணி உருவெடுத்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் மற்றொரு போட்டியின் முடிவு அறிவிக்கப்படவில்லை.

News November 9, 2024

Recipe: பொள்ளாச்சி தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி?

image

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு, சின்ன வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து (50%) வேக வைக்கவும். அதில் தனியா, மிளகு, வர மிளகாய் கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை வறுத்து, கொரகொரப்பாக அரைத்த மசாலா & உப்பை சேர்க்கவும். பின் வடிகட்டிய தேங்காய் பாலை ஊற்றவும். 2-3 நிமிடங்கள் (கொதிக்க விடாமல்) அடுப்பை அணைத்து, மல்லி சேர்த்தால் சுவையான தேங்காய் பால் ரசம் ரெடி.

error: Content is protected !!