news

News November 9, 2024

தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா..!

image

தமிழக போலீஸாரின் நடவடிக்கை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் 1997-ம் ஆண்டு 60 ரூபாயை வழிப்பறி செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்ததுமே அவர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், நிலுவை வழக்குகளை முடிப்பதற்காக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட தனிப்படை, நேற்று அவரை கைது செய்தது. 28 வயதில் குற்றத்தில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்துக்கு இப்போது வயது 55.

News November 9, 2024

பெற்றோர்களே ஜாக்கிரதை.. துடிதுடித்து இறந்த குழந்தை

image

பண்ருட்டியில் ஒன்றரை வயது குழந்தை யாழினியை குளிப்பாட்டுவதற்காக அதன் தாயார் பாத்ரூமுக்கு கொண்டு சென்றுள்ளார். சோப்பு எடுப்பதற்காக அவர் சென்ற நேரத்தில், கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீரை எடுத்து, குழந்தை தன் மீது ஊற்றியுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தைகள் நடக்க தொடங்கியதுமே, மிக ஜாக்கிரதையாக பெற்றோர் கண்காணிக்க வேண்டும். சிறு அலட்சியமும் ஆபத்தாகும்!

News November 9, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை

image

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 9, 2024

ஹைதராபாத்தில் டிரம்ப் டவர்ஸ்.. ஒரு பிளாட் எவ்வளவு?

image

ஹைதராபாத்தில் 27 அடுக்குமாடிகளைக் கொண்ட டிரம்ப் டவர்ஸ் கட்டப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், அரசியலைக் கடந்து மாபெரும் தொழிலதிபர் ஆவார். ஹைதராபாத்தில் மஞ்சுரியா குழுமத்துடன் இணைந்து மாதாப்பூர், கானம்மேட் பகுதிகளில் இரு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 4 BHK, 5 BHK குடியிருப்புகள் தலா ரூ.5.5 கோடி என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 9, 2024

‘சுந்தரி’ சீரியல் நடிகை மீனா கைது!

image

சென்னையில் போதைப்பொருள் கடத்தியதாகப் பிரபல சீரியல் (சுந்தரி) நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து 5 கிராம் மெத்தபெட்டைமைன் போதைப்பொருளுடன் சிக்கியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் போதைப்பொருளை எங்கிருந்து வாங்கினார், வேறு யாருக்கேனும் விற்பனை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 9, 2024

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது: அமித் ஷா சுளீர்

image

பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக ராகுல் காந்தி கூறுகிறார். அப்படி கொடுத்தால் OBC, SC, ST மக்களுக்கான இடஒதுக்கீடு தான் பாதிக்கப்படும். இது அரசியலமைப்புக்கு எதிரானது. காங்., “anti-OBC” ஆகவுள்ளது என்றார்.

News November 9, 2024

வாகனங்களும் தமிழ் பெயர்களும்

image

➤Bicycle-மிதிவண்டி ➤Scooter-துள்ளுந்து ➤Motobike – உந்துருளி ➤Auto-மூவுருளி உந்து ➤Van – கூடுந்து ➤Pick up Truck-பொதியுந்து ➤Jeep-வல்லுந்து ➤SVU-பெருங்கடுவுந்து ➤Lorry – சரக்குந்து ➤Truck-சுமையுந்து ➤Ambulance-திரிவூர்தி ➤Bus-பேருந்து ➤Train-தொடருந்து ➤Helicopter-உலங்கு ஊர்தி ➤Aeroplane-வானூர்தி ➤Boat-தோணி ➤Ship-நாவாய் ➤Tractor – ஏருந்து ➤Tram-அமிழ் தண்டூர்தி ➤Trailer-இழுவை ஊர்தி

News November 9, 2024

விஜய் சாதாரண ஆள் கிடையாது: அமீர் வார்னிங்

image

தவெக மாநாட்டை அடுத்து விஜய்யை நடிகர் போஸ் வெங்கட் கடுமையாக விமர்சித்திருந்தார். “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்..” என அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமீர், “நீங்கள் விமர்சிக்கும் அளவுக்கு விஜய் தரம் தாழ்ந்தவர் இல்லை. விஜய்யை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு பைசா கொடுக்காமல் பல லட்சம் பேரை அவர் கூட்டியுள்ளார். இது சாதாரணம் கிடையாது” எனத் தெரிவித்தார்.

News November 9, 2024

முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!

image

*சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய், வியர்வை மற்றும் அழுக்குகளை நீக்கினால் முகப்பரு ஏற்படாமல் தடுக்கலாம். *தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் நீர் குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். *பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், புகைப்பது, பால் பொருட்கள் & வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டும். *கோதுமை மாவில் தயிர் சேர்த்து கிளன்சரைச் சேர்த்து பருக்கள் மேல் தடவி வந்தால் குறையும்.

News November 9, 2024

ஆளுநரின் பயணம் திடீர் ரத்து.. பரபரப்பு பின்னணி!

image

2 நாள் பயணமாக மதுரை, ராமநாதபுரம் செல்லவிருந்த ஆளுநர் ரவி தனது பயணத்தை திடீரென ரத்து செய்தார். 2 நாள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் மதுரை, விருதுநகர் சென்றுள்ளார். நாளை இருவரும் ஒரே விமானத்தில் சென்னை திரும்புவதாக இருந்த நிலையில், அதனைத் தவிர்க்கவே ஆளுநரின் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர், அரசு இடையே மோதல் போக்கு தொடர்கிறது.

error: Content is protected !!