news

News November 10, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகப் பழமையான நிலப்பகுதி எது? 2) RDX என்பது யாரை குறிக்கும்? 3) Ornithology என்றால் என்ன? 4) உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? 5) உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது? 6) நண்டின் ரத்த நிறம் என்ன? 7) எந்த தனிமம் F என்ற வேதியியல் குறியீட்டைக் கொண்டுள்ளது? 8) ஜாஸ்தி எந்த மொழி சொல்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 10, 2024

கோழி இறைச்சி வாங்குவோர் கவனத்திற்கு..

image

கறிக்கோழி கொள்முதல் விலை இன்று கிலோவுக்கு ரூ.7 குறைந்துள்ளது. பல்லடத்தில் நேற்று பண்ணை கறிக்கோழி ( உயிருடன்) கொள்முதல் விலை கிலோ ரூ.106ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த விலை இன்று ரூ.7 குறைக்கப்பட்டு ரூ.99ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பல்லடத்தில் உள்ள பண்ணை கறிக்கோழி கொள்முதல் குழு, நாள்தோறும் கோழி கொள்முதல் விலையை நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2024

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் கைது!!

image

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழைக் கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாலாஜி, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக வந்த புகாரின் அடிப்படையில் பாலாஜி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகியுள்ளார்.

News November 10, 2024

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

image

ஜம்மு – காஷ்மீர் குறித்து பொய் சொல்வதால் உண்மை மாறாது என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா.வின் அமைதி காக்கும் நடவடிக்கை தொடர்பான விவாதத்தின்போது, காஷ்மீர் பிரச்னையை பாக்., எழுப்பியது. இதற்கு பதிலளித்த இந்திய குழுவின் தலைவர் சுதான்ஷூ திரிவேதி, JK மக்கள் ஜனநாயக உரிமை மூலம் புதிய அரசை தேர்வு செய்துள்ளனர். JK எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்றார்.

News November 10, 2024

ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.10 கோடியா…

image

ஒரு வாழைப்பழம் ரூ.10 கோடி வரை ஏலத்தில் வாங்கப்படும் என்றால் நம்புவீர்களா? இத்தாலியின் மொரிசியோ கட்டெலன் கடந்த 2019-ல் நியூயார்க் ஆர்ட் கேலரியில் ஒரு வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி வைக்க அது பல கோடிக்கு ஏலம் போனது. மொரிசியோ கூறும் போது, ஆர்ட் கேலரியில் ஓவியங்களை விற்பது போல் வாழைப்பழத்தை விற்க முடியும் என்று கூறி, நாம் எதை மதிக்கிறோம் என்ற பிரதிபலிப்பின் வெளிப்பாடு இது என்கிறார். என்ன வாழ்கடா..

News November 10, 2024

Recipe: 10 நிமிடத்தில் சுவையான அவல் லட்டு செய்யலாம்!

image

சிவப்பு அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றை சுத்தம் செய்து வெறுமென வறுத்து, மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், திராட்சையை பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையையும் தனித்தனியே பொடித்து கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறவும். அதை சிறு உருண்டைகளாக பிடித்தால் அவல் லட்டு ரெடி.

News November 10, 2024

பாக். குண்டுவெடிப்பு: பலி 27ஆக உயர்வு

image

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. குவெட்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பயணிகள் காத்திருந்தபோது திடீரென குண்டு வெடித்து சிதறியது. இதில் 62 பேர் பலத்த காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலை கவலையளிக்கும் நிலையில் உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

News November 10, 2024

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தமிழகம் – இலங்கை கரை நோக்கி நாளை அல்லது நாளை மறுநாள் மெதுவாக நகரக்கூடும். இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

News November 10, 2024

கோயில் சிலைகளுக்கு க்யூ ஆர் கோடு.. கடத்தலுக்கு செக்?

image

தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க அந்த சிலைகளுக்கு க்யூ ஆர் கோடு 6 மாதங்களுக்குள் அளிக்கப்படுமென அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். க்யூ ஆர் கோடு அளிக்கப்பட்டதும் சிலைகளை யாரும் கடத்தும்பட்சத்தில், அவை எங்கு உள்ளதென கண்டுபிடித்து விட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

News November 10, 2024

‘கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்’ பிப். 14 ரிலீஸ்

image

‘கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்’ படம் அடுத்தாண்டு பிப். 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கிறிஸ் எவான்சின் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பாகங்களுக்கும் வரவேற்பு கிடைத்தது. 2019இல் கிறிஸ் எவான்சின் ஒப்பந்தம் நிறைவடைந்ததால், இப்படத்தில் கேப்டன் அமெரிக்காவாக ஆண்டனி மெக்கீ நடித்துள்ளார்.

error: Content is protected !!