India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டும் தனது திருமணத்திற்கு காமராஜர் வந்து வாழ்த்தியதாக CM ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். விருதுநகர் பட்டம்புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது திருமணத்தின்போது காமராஜருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், எனினும் கருணாநிதி அழைப்பை ஏற்று வந்ததாகவும் தெரிவித்தார். திருமண மேடைக்கு காமராஜர் வர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
ஆணவம் பிடித்தவர் என்று உதயநிதி ஸ்டாலினை பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். தமிழிசை போல வேலை, வெட்டி இல்லாதவர் தாம் இல்லை என்று உதயநிதி கூறியதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழிசை, ஸ்டாலின் பதவி கொடுக்கவில்லையெனில் உதயநிதிக்கு வேலை இல்லை என சாடினார். தனது அரசியல் அனுபவத்திற்கும், உதயநிதி அனுபவத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது எனவும் கூறினார்.
நாட்டில் எத்தகைய உச்ச பதவியை வகிப்பவராக இருந்தாலும், “எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர் அந்தப் பதவியை வகிக்கிறார்?” என்று கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அதிகார வரம்பை மீறி அவர் ஒரு உத்தரவு பிறப்பித்தாலோ அதனை எதிர்த்து யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம். இந்த மனு Writ of Quo-Warranto என அழைக்கப்படுகிறது.
தோனி குறித்து பேசிய CSK அணியின் CEO காசி விஸ்வநாதன், CSK-யில் தோனி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விளையாடுவார். இதில் எந்த தடையும் இல்லை. தோனிக்கு சிஎஸ்கே மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் விளையாடும் தோனி, எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பார். அவர் விளையாட விரும்பும் வரை நாங்கள் அவருக்காக கதவுகளைத் திறந்தே வைத்திருப்போம் என்றார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரம் 5 போட்டியாளர்கள் புதிதாக உள்ளே சென்றார்கள். அதே நேரத்தில், ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டார்கள். கடந்த வாரம் தீபாவளி என்பதால் யாரும் எலிமினேட் ஆகவில்லை. இந்த வாரம் எலிமினேஷனாக சுனிதா வெளியேறுவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நீங்க சொல்லுங்க யார் எலிமினேட் ஆக போறாங்க..?
நீதிபதிகளுக்கு அரசியல் கட்சிகள், தனியார் நலக் குழுக்களிடம் இருந்து அழுத்தம் தரப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராசூட் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளையுடன் அவர் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் அவர், செய்தி தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பிட்ட திசையில் பயணிக்கும்படி நீதிபதிகளுக்கு தனியார் அழுத்தம் தருவதாக தெரிவித்துள்ளார்.
உடல் நலனுக்காக பாலை குடிப்பது அவசியமானது தான். எனினும் காலையில் வெறும் வயிற்றில் அதை குடிப்பது நல்லதன்று. அல்மிடிக், ஒலிக் அமிலங்களைக் கொண்ட இதை குடிக்கும்போது குடலில் அமிலத்தன்மை அதிகரிக்க நேரிடலாம். அதில் உள்ள லாக்டோஸ் வயிறு உப்புசம், வாயு தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். சளி தொல்லைக்கு வழிவகுக்கும். புரதம் & இதர விஷயங்களால் படை நோய், அரிப்பு போன்ற சரும பாதிப்புகளை உண்டாக்கலாம்.
சென்னையில் தங்கியிருந்த நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சம்மன் அளிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. தனது செல்போனையும் ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
எக்ஸ்ரேக்கு பதில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்த சம்பவம் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. காளிபாண்டி என்பவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்த போது, ஃபிலிம் தீர்ந்ததால், ரிப்போர்ட்டை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள். மனமுடைந்த காளிபாண்டி, இதில் உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் ‘சமுத்ரயான்’ திட்டத்தை அடுத்தாண்டு தொடக்கத்தில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன், படிப்படியாக 6,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று ஆய்வு நடத்தவுள்ளதாகக் கூறினார். ஆழ்கடலின் வளங்களையும், பல்லுயிர் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.