news

News November 10, 2024

BREAKING: எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் காலமானார்

image

பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் (66) இன்று காலமானார். மதுரையில் உள்ள இல்லத்தில் குளியலறையில் அவர் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மர்ம தேசம், விடாது கருப்பு போன்ற மர்ம நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர் இந்திரா செளந்தர ராஜன். அவரின் மறைவுக்கு எழுத்தாளர்கள், அவருடைய வாசகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News November 10, 2024

கரப்பான் போல ஊர்ந்தவர்.. இபிஎஸ்க்கு CM பதிலடி

image

பதவிக்காக கரப்பான்பூச்சி போல இபிஎஸ் ஊர்ந்ததாக <<14574892>>CM ஸ்டாலின் <<>>குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை தொடர்ந்து ஸ்டாலின் சூட்டுவதாக இபிஎஸ் விமர்சிக்கிறார். இதற்கு விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். கருணாநிதி புகழ் எட்டுத் திக்கும் பரவி இருப்பதாகவும், அவர் பெயரை வைக்காமல், இபிஎஸ் பெயரையா வைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

News November 10, 2024

Sunday Special: ஆந்திரா நாட்டுக்கோழி வறுவல்

image

அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் நாட்டுக் கோழிக்கறி (500g) சேர்த்து வதக்கி, மல்லி, மஞ்சள், உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், நீர் சேர்க்கவும். சிக்கன், மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்து கெட்டியானதும், வறுத்த பொட்டுக்கடலை மாவைப் போட்டு இறக்கினால் ருசியான ஆந்திரா நாட்டுக்கோழி வறுவல் தயார்.

News November 10, 2024

வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? இது உங்களுக்குதான்

image

வருமான வரி செலுத்துவோருக்கு IT வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், வருமான வரி செலுத்துவோர், அவர்களின் சுய விவரங்களை அவ்வப்போது IT கணக்கில் UPDATE செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக 2 இணையதள முகவரிகளையும் IT வெளியிட்டுள்ளது. அவை என்ன என்று பார்க்கலாம்.
1) https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login
2) https://pan.utiitsl.com/

News November 10, 2024

இந்தியாவில் மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலி

image

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அமைப்பு ஒன்று இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 274 நாள்களில் 255 நாள்கள் மோசமான வானிலை நிலவியதாகவும், இதில் 32 லட்சம் ஹெக்டர் பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், 9,457 கால்நடைகள் இறந்ததாகவும், 2.35 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

News November 10, 2024

2,645 லிட்டர் தாய்ப்பால் கொடுத்த சாதனை பெண்மணி!!

image

குழந்தைகளுக்கு தாய் பால் மிகவும் சத்தான ஒன்று. ஆனால், இந்த பால் பல குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. அப்படி தவித்த 3,50,000 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சீராட்டியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் ஓக்லெட்ரீ(36) என்பவர். ஜூலை 2023 வரை, அவர் 2,645 லிட்டர் தானம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். 2014-ல் 1,569 லிட்டர் பாலை வழங்கியுள்ளார். அவருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2024

‘மஞ்சள் வீரன்’ கதாநாயகன் மாற்றம்?

image

‘மஞ்சள் வீரன்’ படத்தின் கதாநாயகனை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பதாக இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். எதையும் தாங்கும் மன வலிமை கொண்ட மாவீரன் இப்படத்தின் கதாநாயகனாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். இதனால், இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக, டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

News November 10, 2024

Cooking Tips: என் சமையல் அறையில்…

image

➤சாம்பாரில் நெல்லிக்காய் சேர்த்தால், சுவை அதிகரிக்கும். ➤நூடுல்ஸ் குழையாதபடி சமைக்க, அதில் சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்க வையுங்கள். ➤வறுத்து இடித்த நிலக்கடலை பொடியை பொரியலில் சேர்த்து சமைத்தால் சுவை கூடும். ➤ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை மொறுமொறுப்பாக வரும். ➤கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், அதில் உண்டாகும் ரசாயன மாற்றங்களை தவிர்க்கலாம்.

News November 10, 2024

தங்கம் Vs பங்குச்சந்தை: எது அதிக லாபம் தரும்?

image

தங்கம், பங்குச்சந்தை இரண்டில் முதலீட்டுக்கு எது பெஸ்ட் ஆக இருக்கும் என்ற கேள்வி முதலீட்டாளர் மத்தியில் நிச்சயம் எழும். முதலீட்டைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கம் இருந்தாலும், இந்த இரண்டுமே தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கின்றன. லாபம் இருக்கும் அதே அளவு ரிஸ்க்கும் இருக்கிறது. நீண்ட கால அடிப்படையில், Multi Asset Fund திட்டங்களிலும் Portfolio உருவாக்கி, முதலீட்டை மேற்கொள்ளுங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News November 10, 2024

பட்டாசு ஆலை விபத்து: CM ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் பலியாகும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டம்புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, உயர்கல்வி வரையிலான செலவை அரசு ஏற்கும் என அறிவிப்பதாக கூறினார். இதற்காக புதிய நிதியம் உருவாக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாகவும் கூறினார்.

error: Content is protected !!