India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயற்கை வேளாண்மையின் கட்டாயத் தேவைபற்றி கூறும் புத்தகம். பெரியவர் நம்மாழ்வாரின் சிந்தனைகள் எளிய தமிழில் மின்னுகின்றன. பூச்சிக்கொல்லிகள் சர்வசாதாரணமாக உபயோகப்படும் விதத்தில் மனிதர்களுக்கு நேரும் அபாயம், மரபு விதைகள், நஞ்சில்லா உணவு, பச்சைப் புரட்சியின் பிழைகள் என எல்லாவற்றுக்கும் அருமையான பதில்கள் தருகிறார். முழுவதும் உரையாடுவது போன்ற அவரது தொனி, நூலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும்.
மறைந்த டெல்லி கணேஷிற்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்துள்ளது. அவரது மகனான மகாதேவனை பெரிய ஹீரோவாக உருவாக்க வேண்டும் என முயற்சிகளை செய்தார் டெல்லி கணேஷ். மகாதேவன் உள்ளே கேட்குமே, திருடி, உற்சாகம் போன்ற படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து, என்னுள் ஆயிரம் படத்தில் ஹீரோவானார். ஆனால், படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இறுதியாக விக்ரம் 2 படத்தில் விஜய் சேதுபதி Gang-ல் ஒருவராக நடித்தார் மகாதேவன்.
தமிழ்நாட்டில் வாடகை ஆட்சியை திமுக நடத்துவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 வரை திமுக கூட்டணி நீடிக்குமா என்றே தெரியாது என்று விமர்சித்தார். தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியது விஜயகாந்துதான் என்ற அவர், கூட்டணி தொடர்பான தவெக நிலைப்பாடு குறித்து விஜய்யிடம் கேளுங்கள் என்றார்.
டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், தம்முடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவருடைய மறைவு செய்தி கேட்டு மனம் வருந்துவதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும், ஓம் சாந்தி எனவும் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
பன்னாடை என்பது கெட்ட சொல்லோ வழக்கு மொழிச்சொல்லோ இல்லை. பன்னாடை என்பது நல்ல தமிழ் பதம். இது பனை/தென்னை மரங்களில் இருக்கும் நார் போன்ற பகுதி. நெருக்கம் குறைந்து சல்லடை போன்று இருக்கும் இதனை வடிகட்டியாக அந்தக் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்தினர். இது வடிகட்டி மீந்த சக்கையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். அப்படி நல்லதைவிட்டு தீயதை எடுத்துக்கொள்கிறவர்களை ‘பன்னாடை’ என்று சொல்வர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் 15ஆம் தேதி வரை வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை நாகை, மயிலாடுதுறை, நாளை மறுதினம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. 13ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
Five Finger Discount என்பதற்கும், தள்ளுபடிக்கும் தொடர்பில்லை. பணக்காரராக இருந்தாலும்கூடச் சிலர் இதுபோன்ற கடைகளுக்குச் செல்லும்போது யாருக்கும் தெரியாமல் ஏதாவது ஒரு பொருளைத் திருடுவர். இதனை Five Finger Discount எனலாம். பொதுவாக இதுபோன்ற திருட்டுகளை Shoplifting எனக் குறிப்பிடலாம். இதுபோன்ற மனநிலையை kleptomania என்பார்கள். கிரேக்க மொழியில் kleptos என்றால் திருடுதல். Mania என்றால் மனநலப் பிறழ்வு.
பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது இரங்கல் அறிக்கையில், மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைவு செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார். மேலும், தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை குணச்சித்திரப் பத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பங்குகள் மூலம் கிடைக்கும் Dividend வருமானம் இதர வருமானமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பங்குகளை வாங்கி 12 மாதங்களுக்குள் விற்றால் STCG லாபத்துக்கு 20% வரியும், அந்த காலத்திற்கு மேல் விற்றால் LTCG லாபத்துக்கு 12.5% வரியும் (நிதியாண்டில் ₹1.25 லட்சம் வரைக்கும் வரியில்லை) செலுத்த வேண்டும். முதலீட்டாளர் தமது IT வரி வரம்பிற்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும்.
‘புறநானூறு’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நிவின் பாலி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.