India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (நவ.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
SAக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில், இந்திய அணி வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 13 பந்துகளை மெய்டன் செய்ததுடன், மார்க்ரம், ஹென்ரிக்ஸ், ஜான்சென், கிளாசென், மில்லர் என SA முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் இந்தப் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (நவ.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
டிராகன் படத்தின் இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” ‘டிராகன்’ படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து விட்டோம். மிகவும் ஸ்பெஷலான சில ‘நட்புக்காக’ கதாபாத்திரங்கள் உங்களை சர்ப்ரைஸ் செய்வதற்காக காத்திருக்கின்றன. அடுத்த அப்டேட்டுடன் உங்களை சந்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. டாஸ் வென்ற SA முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய IND வீரர்கள் சரிவர விளையாடாததால் 20 ஓவர்களில் 124/6 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக பாண்டியா 39, அக்ஷர் 27, திலக் 20 ரன்கள் எடுத்தனர். 125 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SA 19 ஓவர்களில் வெற்றி பெற்றது. 3ஆவது T20 நவ.13ஆம் தேதி நடைபெற உள்ளது.
➤மேஷம் – உயர்வு
➤ரிஷபம் – வசதி
➤மிதுனம் – லாபம்
➤கடகம் – செலவு
➤சிம்மம் – சுகம்
➤கன்னி – கவலை
➤துலாம் – மேன்மை
➤விருச்சிகம் – ஜெயம்
➤தனுசு – நட்பு ➤மகரம்- பொறுமை
➤கும்பம் – கவனம் ➤மீனம் – தனம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IND-AUS அணிகள் மோதும் BGT தொடர் நவ.22இல் தொடங்க உள்ளது. NZ அணியிடம் சொந்த மண்ணில் ஏற்பட்ட படுதோல்வியால் இந்திய வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் BGT தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் “விராட் கோலிக்கு எதிராக விளையாடும்போது அவரிடம் எதுவும் பேசக்கூடாது. ஏனெனில் அவர் அதைதான் எதிர்பார்ப்பார். அதுதான் அவரை வெறித்தனமாக விளையாட தூண்டிவிடும்’ என்றார்.
இந்திய அணிக்கு எதிரான தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரன் எடுக்க திணறி வருகின்றனர். தொடக்க வீரர்கள் ஹென்ட்ரிக்ஸ் மட்டும் 24, ரியான் ரிக்கல்டன் 13, கேப்டன் மார்கம் 3, மார்கோ யான்சென் 7, கிளாசன் 2, மில்லர் 0 எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரன் எடுக்க திணறி வருகிறது. தற்போது வரை 12 ஓவர்களில் 66/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் சூப்பராக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
போலி பான் கார்டுகள் மூலமாக பண மோசடி நடப்பதை தடுக்க, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல முறை இதற்கு அவகாசம் கொடுத்தும் கூட, இன்னும் பலர் இதை செய்யவில்லை. இந்நிலையில், வரும் டிச.31 இதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்தாகி விடும். அதை புதுப்பிப்பதும் கடினமான நடைமுறை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.