news

News November 11, 2024

விஜய்யை முதல்வராக்க EPS விரும்பமாட்டார்: ராமச்சந்திரன்

image

2026 தேர்தலில் அதிமுக சாதிக்கும் என தான் நினைக்கவில்லை என ஓபிஎஸ் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஆருடம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், அப்படி அமைந்தால் யார் முதல்வர் என்பதில் சிக்கல் உள்ளதாகவும் கூறியுள்ளார். இபிஎஸ் விஜய்யை முதல்வராக ஏற்க மாட்டார் எனவும், அதேநேரம் இபிஎஸ் முதல்வராக விஜய் கட்சி தொடங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

தவெக உறுப்பினர் சேர்க்கை: முடங்கும் சர்வர்

image

தவெக உறுப்பினர் சேர்க்கைக்கு என தனி செயலி உள்ளது. இதனை விஜய் அறிமுகப்படுத்தியபோதே அதன்மூலம் லட்சக்கணக்கானோர் கட்சியில் இணைந்தனர். விக்கிரவாண்டி மாநாடு நடந்து முடிந்ததில் இருந்து, உறுப்பினர்கள் சேர்க்கை இன்னும் வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சர்வர் அடிக்கடி முடங்குவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். இதையடுத்து, உறுப்பினராக சேர விரும்புவோர் தகவல்களை நிர்வாகிகள் நேரில் சேகரித்து வருகிறார்களாம்.

News November 11, 2024

அதிகாலையை புத்துணர்ச்சி ஆக்கும் புதினா டீ..!

image

அதிகாலையை புத்துணர்ச்சியோடு தொடங்க புதினா டீ குடிக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது என்கிறார்கள். ஒரு கப் கொதிக்கும் நீரில் 5-6 புதினா இலைகளை சேர்க்கவும். அதனுடன் சுவைக்காக சில துளிகள் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நாளை குதூகலமாக்கும் புதினா டீ ரெடி.

News November 11, 2024

தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

image

அரசுப் பள்ளி மாணவர்கள் JEE, நிட்(NID) தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில், +2 மாணவர்களுக்கு இந்த தேர்வு குறித்து எடுத்துரைத்து, தகுதியானவர்களை விண்ணப்பிக்க வைக்கும் பணியை தலைமை ஆசிரியர்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. JEE முதன்மை தேர்வுக்கு நவ.22, NID தேர்வுக்கு டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 11, 2024

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

image

ஒருவர் நவகிரகங்களைப் சுற்றி வழிபடும்போது, தனது ஜென்ம கிரகத்திற்குரிய எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் 9 முறை சுற்றி வணங்கி, பின் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றிவந்து வழிபடுதல் வேண்டும். சூரியன் 10, சுக்கிரன் 6, சந்திரன் 11, சனி 8, செவ்வாய் 9, ராகு 4, புதன் 5, கேது 9, வியாழன் 21 என்ற தனி எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும் என நவகிரக தாந்த்ரீக பரிகாரம் கூறுகிறது.

News November 11, 2024

சுப்ரீம் கோர்ட் CJ சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்பு

image

உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார். ராஷ்டிரபதி பவனில் 10 AMக்கு நடைபெறும் விழாவில், ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதையொட்டி, புதிய CJவுக்கு சட்டத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்குமுன் CJவாக இருந்த சந்திரசூட், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

News November 11, 2024

9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராம்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம் என RMC கூறியுள்ளது.

News November 11, 2024

காலையில் இதை குடிங்க! வலிமை பெறுங்க!!

image

*இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு பவுலில், 5 பாதாம், 5 உலர் திராட்சை, 5 பிஸ்தா, 3 பேரிச்சம் பழம், 3 உலர் அத்தி ஆகியவற்றை ஊற வைக்கவும்.
*காலை எழுந்த பிறகு, Dry Fruitsஐ ஊற வைத்த அதே நீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸாக்கவும்.
*இவ்வாறு ரெடி செய்த ஸ்மூத்தி பானத்தை நாள்தோறும் அருந்தினால் உடல் வலிமைபெறும். ஆரோக்கியத்தின் அதிபதியாகிவிடலாம்.

News November 11, 2024

மருத்துவக் கல்லூரிகளுக்கு அவகாசம்: NMC

image

நடப்பாண்டில் MBBS கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் விவரங்களை NMC இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய நவ.23 வரை அவகாசம் வழங்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளை தொடங்கவும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தையும் நவ.22 வரை நீட்டித்துள்ளதாக NMC தெரிவித்துள்ளது.

News November 11, 2024

இன்று தொடங்குகிறது மகளிர் ஹாக்கி தொடர்

image

8ஆவது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடங்குகிறது. பிஹார் ராஜ்கிர் நகரில், நவ.20 வரை நடைபெறவுள்ள தொடரில் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து அணிகள் பங்கேற்கின்றன. IND மகளிர் அணி இன்றைய முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. நாளை தென்கொரியா, நவ.16இல் சீனா, நவ.17இல் ஜப்பானை இந்திய அணி எதிர்கொள்கிறது.

error: Content is protected !!