news

News November 11, 2024

ஏப்ரல் முதல் கணினிமயமாகும் டாஸ்மாக்

image

டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை ஏப்ரல் மாதம் முதல் கணினிமயமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அரக்கோணம், ராமநாதபுரத்தில் இந்நடைமுறை சோதனையில் இருக்கும் நிலையில், சென்னையிலும் ஓரிரு வாரங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தமிழகத்தில் முழுமையாக பில் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும். இதனால், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 பணம் வசூலிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

News November 11, 2024

கைதான துணை நடிகையின் பரபரப்பு வாக்குமூலம்!

image

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக <<14570010>>கைதான துணை நடிகை<<>> மீனா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், ஆனால் சிறிய வேடங்கள் மட்டுமே தனக்கு கிடைத்ததாகவும் கூறியுள்ளார். இதனால், விரைவில் செட்டிலாக நினைத்து துணை நடிகைகளுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

Skin Glow: கிரீன் ஹெர்பல் ஜூஸ்!

image

உடலின் நச்சு நீக்கியாக செயல்பட்டு மேனியை பளபளப்பாக வைத்திருக்க கிரீன் ஹெர்பல் ஜூஸை குடிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சுரைக்காய், பச்சை ஆப்பிள், துளசி, வெள்ளரி, இஞ்சி, புதினா, மல்லி அனைத்தையும் சிறிதளவு எடுத்து அரைத்து வடிக்கட்டி சிட்டிகை மிளகு, சீரகப் பொடி கலந்து காலையில் தொடர்ந்து பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் மேனியின் பொலிவும் கூடும் எனக் கூறுகின்றார்கள்.

News November 11, 2024

விளையாட்டு துளிகள்

image

➤8ஆவது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பிஹாரில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று தொடங்குகிறது. ➤புரோ கபடி லீக்: 46வது லீக் போட்டியில் ஹரியானா அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. ➤சென்னை GM செஸ்: சேலஞ்சர்ஸ் பிரிவில் லைவ் ரேட்டிங் தரவரிசையில் தமிழக வீரர் பிரணவ் (5 புள்ளி) முதலிடத்தை பிடித்தார். ➤ISL கால்பந்து தொடர்: ஒரிசா – மோகன் பாகன் அணிகள் இடையேயான போட்டி ‘டிரா’ ஆனது.

News November 11, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤பிலிப்பைன்ஸின் எதிர்ப்பை மீறி சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் அதன் எல்லையை வரையறுத்து சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது. ➤ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளம் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ➤அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 2,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. ➤ஸ்பெயினில் வலென்சியா மாகாண அரசைக் கண்டித்து 1.5 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News November 11, 2024

நீர்மட்டம்; 7 மாவட்டங்களில் உயர்வு, 30 மாவட்டங்களில் சரிவு

image

கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், நீலகிரி, சிவகங்கை, தேனி, நெல்லையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மீதமுள்ள 30 மாவட்டங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது. செப்., மாதத்துடன் ஒப்பிடும்போது, அக்., மாதத்தில் கிருஷ்ணகிரியில் 0.63 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தர்மபுரியில் நிலத்தடி நீர் 1.35 மீட்டர் குறைந்துள்ளது. சென்னை, மதுரையில் கனமழை பெய்தாலும், நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.

News November 11, 2024

வீடா..! நிலமா..! எதை வாங்குவது?

image

சிலருக்கு வீடு வாங்கலாமா? அல்லது நிலமாக வாங்கி வைக்கலாமா? என்ற சந்தேகம் இருக்கும். முதலீடு அடிப்படையில் பார்க்கும்போது நிலம் வாங்குவதே புத்திசாலித்தனமான முடிவு என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நிலத்தின் மதிப்பானது நீண்டகாலத்தில் உயரும். அதேநேரம் வீட்டின் மதிப்பு குறையும் என்கிறார்கள். எனவே, முதலீட்டிற்காக வாங்குவதாக இருந்தால் நிலமாக வாங்கி வைக்கவே பரிந்துரைக்கின்றனர்.

News November 11, 2024

காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பவரா நீங்கள்?

image

காலையில் எழுந்ததும் 30 நிமிடங்களுக்குள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பென்சில்வேனியா மாகாண பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கேன்சர் மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள், ரத்த கொதிப்பு, இதய நோய்கள், நீரிழிவு பிரச்னைகளை ஏற்படுத்தும். இது இளைஞர்களை அதிகம் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News November 11, 2024

மாமனார் ஊர் பக்கம் அடிக்கடி செல்லும் யுவன்

image

பொதுவாக திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் ஓய்வெடுக்க வெளிநாடுகளுக்குச் செல்வதுண்டு. ஆனால், இசையமைப்பாளர் யுவன் கொஞ்சம் வித்தியாசமாக மாமனார் ஊர் பக்கம் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரத்தை ஒட்டிய கீழக்கரை கடற்கரைப் பகுதிகளில் யுவனை சர்வ சாதாரணமாக சந்திக்க முடிகிறது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். நீங்கள் ஓய்வுக்காக செல்லும் இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 11, 2024

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒருநாள் பயிற்சி

image

மகளிர் சுய உதவிக் குழுக்களின் 39.48 லட்சம் உறுப்பினர்களுக்கு திட்ட செயலாக்கம் குறித்து ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணை, பண்ணை சாரா செயல்பாடுகள், சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள், திறன்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்பு, உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார்.

error: Content is protected !!